Latest Updates
-
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் கோதுமை நெய் அப்பம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
இன்றைய ராசிபலன் 06 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பிரச்சினை வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 13-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம் -
ஆமை வடை ரெசிபி - இந்த மாதிரி வடை சுட்டு பாருங்க - மொறுமொறுனு சூப்பராக இருக்கும் -
இந்தியாவில் இயற்கையாக வைரம் கிடைக்கும் ஒரே மாநிலம் எது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
திருநெல்வேலி ஸ்டைல் அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
அடுத்தவர் மனைவியை திருடுவது இந்த நாட்டில் வேடிக்கையான விளையாட்டாம் - ஆனா இதுல ஒரு விவகாரமான கண்டிஷன் இருக்கு -
சில்லி கார்லிக் ப்ரைடு ரைஸ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
காரைக்குடி கார சட்னி - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
சனிபகவான் ரேவதி நட்சத்திரம் செல்வதால் அக்டோபர் மாதம் வரை இந்த 3 ராசிக்காரங்க ராஜாதான் - உங்க ராசி இதுல இருக்கா
2026-ல் குரு பகவானால் விபரீத நன்மைகளைப் பெறப்போவது இந்த 3 ராசிக்காரங்க தான்.. உங்க ராசி இதுல இருக்கா?
Jupiter Will Make Vipreet Rajyog In 2026: ஜோதிடத்தில் தேவர்களின் குருவாக கருதப்படுபவர் குரு பகவான். இந்த குரு பகவான் ஒரு ராசியில் ஒரு ஆண்டு காலம் பயணிப்பார். இப்படிப்பட்ட குரு பகவான் செல்வம், அறிவு, அதிர்ஷ்டம் மற்றும் தொழில் ஆகியவற்றின் காரணியாவார். மங்களகரமான குரு பகவன் தனுசு மற்றும் மீன ராசிகளின் அதிபதியாவார்.
தற்போது குரு பகவான் மிதுன ராசியில் வக்ர நிலையில் பயணித்து வருகிறார். இந்த வக்ர நிலையில் 2026 ஆம் ஆண்டின் தொடக்கம் முதல் ஜூன் வரை குரு பகவான் இருப்பார். அதன் பின் ஜூன் 02 ஆம் தேதி குரு பகவான் தனது உச்ச ராசியான கடக ராசிக்குள் நுழைவார். கடக ராசிக்கு குரு பகவான் செல்வதால் விபரீத ராஜயோகம் உருவாகவுள்ளது.

இந்த ராஜயோகத்தின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும். குறிப்பாக 3 ராசிக்காரர்கள் இந்த யோகத்தால் சிறப்பான பலன்களைப் பெறவுள்ளனர். அதுவும் நிதி நிலையில் எதிர்பாராத அளவில் உயர்வைக் காணவுள்ளனர். மேலும் சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். இப்போது குரு பகவானால் உருவாகும் விபரீத ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கடகம்
கடக ராசியின் முதல் வீட்டில் குரு பகவானால் விபரீத ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. வியாபாரிகளுக்கு எதிர்பாராத அளவில் லாபம் கிடைக்கும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும் வாய்ப்புள்ளது. அரசியலில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது.
கன்னி
2026-ல் கன்னி ராசியின் 11 ஆவது வீட்டிற்கு குரு பகவான் சென்று விபரீத ராஜயோகத்தை உருவாக்கவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. குடும்ப சூழல் மகிழ்ச்சியாக இருக்கும். எடுக்கும் ஒவ்வொரு வேலையும் வெற்றிகரமாக முடிவடையும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். குழந்தைகள் தொடர்பான நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். ஏற்கனவே முதலீடுகளை செய்திருந்தால், அதிலிருந்து நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
துலாம்
துலாம் ராசியின் 10 ஆவது வீட்டில் குரு பகவானால் விபரீத ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் வேலை மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். பணிபுரிபவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் புதிய வேலை வாய்ப்புக்கள் தேடி வரும். சொந்தமாக தொழில் செய்பவர்கள் நேர்மறையான பலன்களைப் பெறுவார்கள். எடுக்கும் வேலைகள் ஒவ்வொன்றிலும் வெற்றி கிடைக்கும். தந்தையுடனான உறவு மேம்படும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். முதலீடுகளில் இருந்து இரட்டிப்பு லாபம் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications