Latest Updates
-
தக்காளியும், கொத்தமல்லியும் இருந்தா.. ஒருடைம் இந்த சைடு டிஷ் செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 27 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மோசமான நாள் காத்திருக்காம் -
செவ்வாய் சொந்த ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
அட்டகாசமான ஆந்திரா கத்திரிக்காய் தக்காளி சட்னி ரெசிபி - செஞ்சு பாருங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும் -
கோடைக்கால திருமணமா? வெயிலின் தாக்கத்தில் இருந்து விருந்தினர்களைக் காக்க இந்த 5 விஷயங்களைச் செய்ய மறக்காதீங்க! -
ஆண்களுக்கு இளம் வயதிலேயே வழுக்கை விழ காரணமாக இருக்கும் முக்கிய உணவுகள் - பார்த்து சாப்பிடுங்க -
திருமண உறவில் பாலியல் வன்கொடுமை: சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ள பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அதிர்ச்சி உண்மைகள்! -
இந்த தேதியில் பிறந்த பெண்கள் அவங்க கணவரை கோடீஸ்வரராக்கும் அதிர்ஷ்டத்துடன் பிறந்தவர்களாம் -
முட்டையை இந்த மாதிரி பட்டாணியுடன் சேர்த்து குருமா செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
வாஸ்து செடிகள்: 42°C வெயிலிலும் வீட்டை ஜில்லுனு வச்சுக்கணுமா? இந்த செடிகள் இருந்தா போதும்!
12 ஆண்டுகள் கழித்து குரு பகவான் உருவாக்கும் அற்புத யோகம்: இன்று இந்த 3 ராசிகளின் பேங்க் பேலன்ஸ் அதிகரிக்கும்..
Dwi Dwadash Yog On 11 September 2025: ஜோதிடத்தில் தேவர்களின் குருவாக கருதப்படுபவர் குரு பகவான். இந்த குரு பகவான் கிரகங்களில் மிகவும் மங்களகரமான, வாழ்க்கையில் செழிப்பையும், மகிழ்ச்சியையும் தரக்கூடியவராக கருதப்படுகிறார். இந்த குரு பகவான் ஒரு ராசியில் 1 ஆண்டு காலம் பயணிப்பார். இதனால் இவர் ஒரு சுழற்சியை முடிக்க 12 ஆண்டுகள் ஆகும். இப்படிப்பட்ட குரு பகவான் தனுசு மற்றும் மீன ராசிகளின் அதிபதியாவார்.
தற்போது குரு பகவான மிதுன ராசியில் பயணித்து வருகிறார். ஆகவே குரு பகவான் அவ்வப்போது மற்ற கிரகங்களுடன் இணைந்தோ அல்லது பார்வையின் மூலமோ, சுப அல்லது அசுப யோகங்களை உருவாக்குவார். அவ்வாறு உருவாக்கும் யோகங்களின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும். இந்நிலையில் குரு பகவான் சுக்கிரனுடன் சேர்ந்து ஒரு அற்புதமான த்வி துவாதச யோகத்தை உருவாக்கவுள்ளார்.

ஜோதிடத்தின் படி, எப்போது இரண்டு கிரகங்கள் ஒருவருக்கொருவர் 30 டிகிரியில் இருக்கிறதோ, அப்போது த்வி துவாதச யோகமானது உருவாகும். அந்த வகையில் செப்டம்பர் 11 ஆம் தேதி குரு பகவானும், சுக்கிரனும் ஒருவருக்கொருவர் 30 டிகிரியில் இருந்து இந்த யோகத்தை உருவாக்குகின்றனர். இந்த யோகத்தின் தாக்கத்தால், சில ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறவுள்ளனர். இப்போது த்வி துவாதச யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு த்வி துவாதச யோகமானது ஏராளமான நன்மைகளை வழங்கப் போகிறது. முக்கியமாக இந்த ராசிக்காரர்கள் சோம்பலை விடுத்து, மிகவும் சுறுசுறுப்பாக செயல்படுவார்கள். வேலையில் சிறப்பான செயல்திறனை வெளிக்காட்டி, உயர் அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவார்கள். உடன் பிறந்தவர்களுடனான உறவு சிறப்பாக இருக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வணிகர்களுக்கு முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். நிதி நிலை வலுபெறும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி பெருகும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். வருமானத்தில் உயர்வு ஏற்படலாம். தந்தையுடனான உறவுகள் வலுவாக இருக்கும். சுப நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்பீர்கள். மன அமைதி அதிகரிக்கும். வங்கி இருப்பில் உயர்வை காண்பீர்கள்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் த்வி துவாதச யோகத்தால் பல நல்ல செய்திகளைப் பெறுவார்கள். குழந்தைகளால் சந்தித்து வந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும். சமூகத்தில் நல்ல அந்தஸ்தில் உள்ளவர்களின் நட்பு கிடைக்கும். முன்னேற்றத்திற்கான பல வாய்ப்க்கள் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைப்பதால், வெற்றியும், செல்வமும் குவியும். வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகள் படிப்படியாக குறையும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு த்வி துவாதச யோகத்தால் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையுடன் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வந்து, உறவு இனிமையாக மாறும். புதிய தொழிலை தொடங்கும் எண்ணம் இருந்து, இக்காலத்தில் அதை முயற்சித்தால் நல்ல பலன்களைப் பெறுவீர்கள். ரியல் எஸ்டேட் தொடர்பான துறையில் இருப்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். இக்காலத்தில் குருவின் அருளால் முடிவெடுக்கும் திறன் மேம்படும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். வணிகர்கள் தங்கள் வணிகத்தில் கூடுதல் கவனம் செலுத்தினால், நல்ல வெற்றியைப் பெறுவீர்கள். பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும். இதனால் நிதி நிலை வலுவடையும் வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications