Latest Updates
-
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க..
குருபகவானின் நட்சத்திர பெயர்ச்சியால் 2025-ல் இந்த 3 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுதாம்... உங்க ராசி என்ன?
ஜோதிட சாஸ்திரத்தில் குருபகவான் ஞானம் மற்றும் செல்வத்தின் கிரகமாக கருதப்படுகிறார். ஒரு மனிதன் வாழ்க்கையில் வளர்ச்சிக்கும், படிப்பில் சிறந்து விளங்கவும், வாழ்வில் பிரகாசிக்கவும் வியாழனின் அருள் அவசியம். எனவே வியாழனின் மாற்றங்கள் அனைத்து ராசிக்காரர்களின் வாழக்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
தற்போது, குருபகவான் ரோகிணி நட்சத்திரத்தில் நிலைபெற்று அதில் சஞ்சரிக்கிறது. வியாழன் ரோகிணி நட்சத்திரத்தில் நுழைவதால், சில ராசிக்காரர்களுக்கு 2025 இல் அதிர்ஷ்டம் அடிக்கப்போகிறது. இதனால் செல்வம் பெருகும் மற்றும் நிதி பிரச்சனைகள் தீரும். மேலும் அவர்கள் சமூகத்தில் பெரிய புகழடைவார்கள். அந்த அதிர்ஷ்டக்காரர்கள் யாரென்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

கடகம்
கடக ராசியில் பிறந்தவர்கள் 2025-ல் அறிவில் பிரகாசிக்கப்பார்கள். புதிய விஷயங்களில் அறிவை வளர்த்துக் கொள்ள முடியும். இவை அனைத்தும் வெற்றிகரமான ஒரு புதிய வேலையில் சேர உதவும். இது உங்கள் வாழ்க்கையின் நிதி சிக்கல்களை தீர்க்க உதவுகிறது. வங்கியில் வேலை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
மாணவர்கள் உயர்நிலைத் தேர்வுகளில் வெற்றி பெறலாம். வேலையில் இருப்பவர்கள் பதவி உயர்வை எதிர்பார்க்கலாம். இதன்மூலம் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த முடியும். குழந்தைகளை உயர்கல்விக்காக வெளிநாடுகளுக்கு அனுப்பலாம். அரசியலில் உள்ளவர்களுக்கு நல்ல வளர்ச்சிக் கிடைக்கும். மொத்தத்தில் இந்த ஆண்டு அவர்களுக்கு மகிழ்ச்சியான ஆண்டாக இருக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் இந்த ஆண்டு கல்வியில் மட்டுமின்றி வேலையிலும் பிரகாசிக்க முடியும். குறிப்பாக ஆராய்ச்சித் துறையில் பணிபுரிபவர்களுக்கு, அவர்களின் கண்டுபிடிப்புகளுக்கான அங்கீகரம் கிடைக்கும். நீண்ட காலமாக இருந்த வந்த நிதி பிரச்சனைகள் இப்போது முடிவுக்கு தீரும். வங்கியில் கடன் வாங்கியிருந்தால் இப்போது அதனை அடைக்கலாம்.
இந்த ராசிக்காரர்கள் இந்த ஆண்டு வியாபாரத்தில் கொடிகட்டி பறக்கலாம். எதிர்பாராத நிதி லாபத்தை எதிர்பார்க்கலாம். நீங்கள் புதிய நபர்களுடன் நட்பு கொள்ளலாம். இது உங்களின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும். சமுதாயத்தில் உங்களின் நன்மதிப்பு உயரும். உங்களின் நற்பெயர் உங்களின் வருமானம் உயர வழிவகுக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களின் ஞானம் இந்த ஆண்டு அதிகரிக்கும். வெளிநாட்டில் வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. இது உங்கள் குடும்பத்தின் நிதி பாதுகாப்பை உறுதி செய்ய முடியும். விலையுயர்ந்த வாகனம் மற்றும் ஆடைகளை பயன்படுத்த அதிர்ஷ்டம் துணைநிற்கும். வெளிநாட்டில் தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் தேடிவரும். உங்களின் தொழில் உங்களுக்கு வருமானத்தைக் கொடுப்பதுடன் உங்களின் அடையாளமாகவும் மாறும்.
உங்களின் கருத்துக்களுக்கு அனைவரும் மதிப்பளிப்பார்கள், உங்களின் வார்த்தைகள் மதிப்பிற்குரியதாக மாறும். திருமணமான தம்பதிகளுக்கு தாம்பத்தியத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் உண்டாகும். எதிரிகள் நண்பர்களாக மாறுவார்கள். உறவினர்களுக்கு பண உதவி செய்யலாம். வேலையில் இருப்பவர்களுக்கு இப்போது பதவி உயர்வு தேடிவரலாம். மாணவர்கள் இந்த ஆண்டு கல்வியில் பெரிய சாதனைகளை செய்யலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

