Latest Updates
-
சுக்கிரனால் விபரீத ராஜயோகத்தை பெறப்போவது இந்த 3 ராசிக்காரங்க தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
மாரடைப்பு பற்றிய கட்டுக்கதைகளும், உண்மைகளும்: யாருக்கெல்லாம் மாரடைப்பு வரும் வாய்ப்பு அதிகம் தெரியுமா? -
1 உருளைக்கிழங்கும், 1 கப் தயிரும் இருந்தா.. மதியம் 10 நிமிஷத்துல இந்த சைடுடிஷ் செய்யுங்க.. சாதத்துக்கு அள்ளும் -
டெல்லி-என்சிஆர் புழுதிப் புயல்: வீட்டைப் பாதுகாக்க இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா போதும்! -
புதன் மேஷ ராசியில் அஸ்தமனமாவதால் புது சொத்துக்களை வாங்கிக் குவிக்கப்போகும் அதிர்ஷ்டமுள்ள 3 ராசிகள் இவங்கதான் -
Heatwave Alert: கோடையில் உடல் வறண்டு போகாம இருக்கணுமா? அப்ப இதெல்லாம் தினமும் சாப்பிடுங்க.. -
மணி பிளாண்ட் வளர்க்கும் ரகசியம் தெரியுமா? கோடையில் வீட்டை ஜிலுஜிலுவென மாற்றும் இந்த வாஸ்து டிப்ஸ்! -
பாபா வங்கா கணிப்பு படி 2125-ல் ஏலியன்களை சந்திக்கப்போகும் முதல் நாடு எது தெரியுமா? -
மே மாத சூரிய பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு தொழில் மற்றும் நிதி நிலையில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது! -
செட்டிநாடு வெங்காய கோசு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்..
குரு பகவானின் நட்சத்திர பெயர்ச்சியால் ஏப்ரலில் இந்த 5 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க..
Jupiter Transit In Mrigasheersham Nakshatra On April 2025: ஜோதிடத்தில் தேவர்களின் குருவாக கருதப்படுபவர் தான் குரு பகவான். இந்த குரு பகவான் தனுசு மற்றும் மீன ராசிகளின் அதிபதியாவார். குரு ஒரு ராசியில் 1 ஆண்டு காலம் பயணிப்பார். அதோடு அவ்வப்போது நட்சத்திரத்தையும் மாற்றுவார்.
இப்படிப்பட்ட குரு பகவான் செல்வம், அறிவு, செழிப்பு, கல்வி, குழந்தைகள் மற்றும் ஆன்மீகத்தின் காரணியாக கருதப்படுகிறார். குருவின் நிலையில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம் அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும். அதில் சிலருக்கு நல்லதாகவும், சிலருக்கு மோசமாகவும் இருக்கும்.

அந்த வகையில் தற்போது குரு பகவான் ரிஷப ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் ஏப்ரல் 10 ஆம் தேதி குரு பகவான் மிருகசீரிஷ நட்சத்திரத்திற்கு செல்லவுள்ளார். இந்த மிருகசீரிஷ நட்சத்திரத்தின் அதிபதி செவ்வாய். இந்த செவ்வாய் வலிமை, வீரம், துணிச்சல், தைரியம் ஆகியவற்றின் காரணியாவார்.
செவ்வாயின் நட்சத்திரத்திற்கு குரு பகவான் செல்வதால், அதன் தாக்கம் ஒருவரது நிதி நிலை, தொழில், சொத்து ஆகியவற்றில் காணப்படும். அதில் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கலாம். இப்போது குருவின் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
குருவின் நட்சத்திர பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் ஏற்படக்கூடும். அதுவும் தொழிலில் முதலீடுகளை செய்தால், நல்ல லாபத்தைப் பெறக்கூடும். வங்கி இருப்பு அதிகரிக்கும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். மார்கெட்டிங், வணிகம், ஐடி துறையில் இருப்பவர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். வணிகர்கள் நல்ல பலன்களைப் பெறுவார்கள். குடும்ப வாழ்க்கை இனிமையாக இருக்கும். வீட்டின் சூழ்நிலை மகிழ்ச்சியாகவும், அமைதியாகவும் இருக்கும்.
ரிஷபம்
குருவின் நட்சத்திர பெயர்ச்சியால் ரிஷப ராசிக்காரர்களின் தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். பங்குச் சந்தையில் முதலீடு செய்தால், நல்ல பலன்கள் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. வேலை தேடிக் கொண்டிருந்தால், நல்ல வேலை கிடைக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
சிம்மம்
குருவின் நட்சத்திர பெயர்ச்சியால் சிம்ம ராசிக்காரர்கள் வாழ்க்கையில் புதிய உயரங்களை தொடுவார்கள். அரசு வேலைக்கு தயாராகிக் கொண்டிருப்பவர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கும். வணிகர்கள் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். இது நிதி நிலையை வலுப்படுத்தும். பணியிடத்தில் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். அலுவலகத்தில் புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். சொத்து தொடர்பான விஷயங்களில் நல்ல பலன்கள் கிடைக்கும். முதலீடுகளை செய்திருந்தால், அதிலிருந்து நல்ல லாபம் கிடைக்கும். புதிய வீடு அல்லது வாகனம் வாங்க திட்டமிட்டிருந்தால், இந்த காலம் சாதகமாக இருக்கும்.
துலாம்
குருவின் நட்சத்திர பெயர்ச்சியால் துலாம் ராசிக்காரர்கள் வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்புக்களைப் பெறுவார்கள். வெளிநாட்டில் படிக்க விரும்பும் அல்லது வேலை செய்ய விரும்புபவர்களின் ஆசை நிறைவேறும். தொழிலில் நல்ல மாற்றங்களைக் காணக்கூடும். புதிய வருமான ஆதாரங்களைப் பெற வாய்ப்புள்ளது. புதிய தொழிலில் முதலீடு செய்ய நினைத்தால், இக்காலம் சாதகமாக இருக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் அமையும்.
மகரம்
குருவின் நட்சத்திர பெயர்ச்சியால் மகர ராசியைச் சேர்ந்த மாணவர்கள் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெற்று வெற்றி பெறுவதற்கான வாய்ப்புள்ளது. தொழிலதிபர்கள் இக்காலத்தில் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைப்பதால், ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றி கிடைக்கும். ரியல் எஸ்டேட்டில் இருப்பவர்கள் பெரிய அளவில் லாபத்தைப் பெறுவார்கள். திருமணமாகி குழந்தை பாக்கியத்திற்காக காத்துக் கொண்டிருந்தால், இக்காலத்தில் அதற்கான வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications