Latest Updates
-
Heatwave Alert: கோடையில் உடல் வறண்டு போகாம இருக்கணுமா? அப்ப இதெல்லாம் தினமும் சாப்பிடுங்க.. -
மணி பிளாண்ட் வளர்க்கும் ரகசியம் தெரியுமா? கோடையில் வீட்டை ஜிலுஜிலுவென மாற்றும் இந்த வாஸ்து டிப்ஸ்! -
பாபா வங்கா கணிப்பு படி 2125-ல் ஏலியன்களை சந்திக்கப்போகும் முதல் நாடு எது தெரியுமா? -
மே மாத சூரிய பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு தொழில் மற்றும் நிதி நிலையில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது! -
செட்டிநாடு வெங்காய கோசு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 28 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டுமாம் -
May 2026 Career Horoscope: மே மாதத்தில் தொழிலில் கொடிகட்டி பறக்கப் போவது இந்த 4 ராசிக்காரங்க தான்! -
1 கப் சுண்டல் இருந்தா.. ஒருடைம் இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு பிரமாதமா இருக்கும்.. -
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் 35 வயசுக்கு மேல் தான் வெற்றியை காண்பார்களாம்.. உங்க பிறந்த தேதி இதுல இருக்கா? -
லிவ்-இன் உறவு முறிவு கிரிமினல் குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு என்ன சொல்கிறது?
குருபகவானின் வக்ர பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரர்கள் வாழ்க்கையில் பெரும் அதிர்ஷ்டம் தேடிவரப்போகுதாம்...!
ஜோதிட சாஸ்திரத்தில், தேவர்களின் குரு என்று அழைக்கப்படும் வியாழன், சுப கிரகங்களில் ஒன்றாகும். தனுசு மற்றும் மீனத்தின் அதிபதியான குருபகவான் ஒருவரின் ஜாதகத்தில் அனுகூலமான நிலையில் இருந்தால், அவர்கள் வாழ்வில் செல்வமும் நற்பலன்களும் கிடைக்கும். அதேபோல் குருபகவான் சாதகமற்ற நிலையில் இருந்தால் அவர்கள் பல்வேறு பிரச்சனைகளையும் நெருக்கடிகளையும் சந்திக்க வேண்டி வரும். வியாழன் தற்போது ரிஷப ராசியில் இருக்கிறார். அக்டோபர் 9 ஆம் தேதி, இடவம் ராசியில் வியாழன் தனது வக்ர இயக்கத்தைத் தொடங்கியது. வியாழன் இந்த இயக்கத்தை பிப்ரவரி 5 வரை தொடரும்.
இது அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த ராசி மாற்றம் ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு விதத்தில் பாதிப்பை ஏற்படுத்தினாலும், மூன்று ராசிக்காரர்கள் இதனால் சிறப்பான பலன்களையும், அதிர்ஷ்டத்தையும் பெறுவார்கள். அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு வியாழன் வக்ர பெயர்ச்சி அடைவதால் பல நன்மைகள் உண்டாகும். வியாழன் மேஷத்தின் இரண்டாம் வீட்டில் சஞ்சரிக்கிறது. எனவே பிப்ரவரி மாதம் வரை மேஷ ராசியில் பிறந்தவர்கள் வேலை மற்றும் வியாபாரத்தில் அனுகூலமான பலன்களைப் பெறுவார்கள். சமூகத்தில் அவர்களின் அந்தஸ்தும் மதிப்பும் உயரும்.
வாகனம், வீடு, பிற சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். வருமானத்திலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படும். நீங்கள் செய்யும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். மேலும், விரும்பிய மற்றும் தேவையான விஷயங்களை மன அமைதியுடன் செய்ய முடியும். குடும்பத்தினரிடையே ஒற்றுமையும், புரிதலும் அதிகரிக்கும்.
மிதுனம்
குருபகவானின் வக்ர பெயர்ச்சியால் மிதுன ராசியில் பிறந்தவர்களின் நிதி நிலையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் உருவாகும். அவர்களின் பன்னிரண்டாவது வீட்டில், வியாழன் வக்ர பெயர்ச்சி அடைகிறார். எனவே, இந்த காலகட்டத்தில் குடும்பத்தில் சிரமங்களும், கஷ்டங்களும் குறையும். வருமானத்தில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்படும்.
சுப நிகழ்ச்சிகள் அல்லது திருமண விழாக்களில் பங்கேற்கலாம். வேறு வேலைக்கு செல்ல விரும்புபவர்களுக்கு இந்த காலகட்டத்தில் தக்க பலன்கள் கிடைக்கும். இந்த காலகட்டத்தில் மிதுன ராசிக்காரர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு வெளிநாடுகள் மூலம் புதிய வருமானத்திற்கான வாய்ப்புகள் திறக்கும்.
சிம்மம்
சூரியன் ஆட்சி செய்யும் சிம்ம ராசியில் பிறந்தவர்களும் குருகபவானின் வக்ர பெயர்ச்சியால் நிம்மதி அடைவார்கள். இந்த ராசியின் 10வது வீட்டில் வியாழன் தனது வக்ர இயக்கத்தைத் தொடங்குகிறது. இதன் விளைவாக அவர்கள் பொருளாதாரரீதியாக பெரிய முன்னேறத்தை அடைவார்கள். அவர்களின் வருமானமும், சேமிப்பும் அதிகரிக்கும்.
குடும்பத்தில் நிம்மதியும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். இந்த காலகட்டத்தில் தொழிலதிபர்கள் பெரிய வளர்ச்சியை அடைவார்கள். பொறுப்புகள் மகிழ்ச்சியுடன் நிறைவேற்றப்படும். இந்த காலகட்டத்தில் உடல்நிலை திருப்திகரமாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
