Latest Updates
-
இந்த தேதியில் பிறந்த பெண்கள் அவங்க கணவரை கோடீஸ்வரராக்கும் அதிர்ஷ்டத்துடன் பிறந்தவர்களாம் -
முட்டையை இந்த மாதிரி பட்டாணியுடன் சேர்த்து குருமா செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
வாஸ்து செடிகள்: 42°C வெயிலிலும் வீட்டை ஜில்லுனு வச்சுக்கணுமா? இந்த செடிகள் இருந்தா போதும்! -
5 லட்சம் ஆண்டுகளுக்கு ஆதி மனிதர்கள் இந்தியாவில் வாழ்ந்த 5 இடங்கள் - தமிழ்நாட்டின் ஒரு இடமும் இதில் இருக்காம் -
கோடை வெப்பத்தை சமாளிக்க இந்த வாஸ்து ரகசியங்கள் தெரியுமா? வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுங்கள்! -
நார்த் இந்தியன் ஸ்டைல் தக்காளி சிக்கன் கிரேவி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, வேற லெவலில் இருக்கும் -
வார ராசிபலன் (26 April 2026 - 02 May 2026) - இந்த வாரம் இந்த 4 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும் -
இன்றைய ராசிபலன் 26 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஜாலியான நாளாக இருக்குமாம் -
மே மாதத்தில் நடக்கும் கிரக பெயர்ச்சிகளால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வெயில் கொடுமை! திருமணத்தை மாற்ற முடியாமல் தவிக்கிறீர்களா? இந்த 5 டிப்ஸ் உங்கள் விழாவை காப்பாற்றும்!
குருபகவானின் வக்ர பெயர்ச்சியால் இந்த 2 ராசிக்காரர்கள் வறுமையில் விழப்போகிறார்களாம்... இவங்க கவனமா இருக்கணும்!
தேவர்களின் அதிபதியான குருபகவான் தனது வக்ர பெயர்ச்சியைத் தொடங்கியுள்ளது. வியாழன் அருள் பெற்றால் ஒருவர் வாழ்க்கையில் பெயர், புகழ், செல்வம் போன்றவற்றைப் பெறலாம். சனிபகவானுக்கு அடுத்தபடியாக வியாழன் மிக மெதுவாக செல்லும் கிரகம் என்பதால், வியாழனின் தாக்கம் ஒருவரின் வாழ்க்கையில் நீண்ட காலம் நீடிக்கும்.
தற்போது வியாழன் சுக்கிரன் ஆளும் ராசியான ரிஷபத்தில் வக்ர பெயர்ச்சி அடைகிறது. கடந்த காலங்களில் நேர்கோட்டில் நகர்ந்து வந்த வியாழன் இப்போது வக்ர பெயர்ச்சியில் நகரத் தொடங்கியுள்ளது. வியாழன் பிப்ரவரி 4, 2025 வரை அதே பாதையில் தொடரும். சிலருக்கு இந்த மாற்றம் தனிப்பட்ட வளர்ச்சிக்கு வழிவகுக்கும் ஆனால் சில ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டம் மிகவும் கடினமான காலமாக இருக்கும்.

ஜாதகத்தில் வியாழன் வலுவிழந்த அந்த ராசிக்காரர்கள், வரும் நாட்களில் சில நிதிப் பின்னடைவுகள், தகவல் பரிமாற்றத்தில் சிரமங்கள் மற்றும் வேலையில் தடைகளை அனுபவிக்கலாம். ஆனால் அவர்கள் சிரமங்களையும் சவால்களையும் பொறுமையுடன் எதிர்கொண்டால், அவர்கள் இந்த சோதனையான காலகட்டத்தை வென்று வாழ்க்கையில் நல்ல நேரத்தை அடைவார்கள். குருபகவானின் வக்ர பெயர்ச்சியால் அதிக நிதி பிரச்சினைகளை சந்திக்கப்போகும் ராசிக்காரர்கள் யாரென்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
மேஷம்
வியாழன் தற்போது மேஷத்தின் பன்னிரண்டாம் வீட்டில் வக்ர பெயர்ச்சி அடைகிறது. எனவே, வியாழன் வக்ரமாக இருக்கும் நேரம் அவர்களுக்கு சாதகமாக இருக்காது. வேலை மற்றும் வியாபாரத்தில் தொடர்ந்து சில பிரச்சினைகள் அனுபவிக்கலாம். எதிர்பாராத செலவுகளால் நிதி நிலைகுலைந்து போக வாய்ப்புள்ளது. எதிரிகள் மற்றும் போட்டியாளர்களின் செயல்கள் அவர்களுக்கு மன உளைச்சல் மற்றும் சிரமங்களை உருவாக்கும்.
இது மிகவும் கவனமாக இருக்க வேண்டிய காலகட்டமாகும். அதிக செலவுகள் கவலை மற்றும் பதற்றத்தை ஏற்படுத்தும். பொருளாதார நிலை மிகவும் மோசமாக இருக்கும். குடும்பத்தில் சில விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். இவை அனைத்தும் முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கையுடன் வரும் நாட்களை எதிர்கொள்ள தயாராக இருங்கள்.
சிம்மம்
வியாழனின் வக்ர பெயர்ச்சியால் அவதிப்படும் அடுத்த ராசி சிம்மம். அவர்களும் தங்கள் வாழ்வில் பல்வேறு நெருக்கடிகளைச் சந்திக்கப் போகிறார்கள். சிம்ம ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் ஆணவத்துடன் நடந்து கொள்வார்கள். இது சமூகம் மற்றும் குடும்பத்தில் அவர்களுக்கு வெறுப்பை சம்பாதித்து கொடுக்கும், மேலும் அவர்கள் உங்களுடன் ஒத்துழைக்க மாட்டார்கள். இதன் விளைவாக சமூகத்திலும் குடும்பத்திலும் அவர்களின் அந்தஸ்தும் மதிப்பும் வீழ்ச்சியடையும்.
வேலையில் சக ஊழியர்களுடன் வாக்குவாதங்கள் வரலாம். இதனால் பணியிடத்தில் மனஅமைதியை இழக்க நேரிடும். வாழ்க்கையில் வேறு சில நெருக்கடிகளும் வரலாம். எனவே இக்காலகட்டத்தில் கோபம், அகந்தையை விட்டொழித்து முடிந்தவரை அமைதி காப்பது நல்லது. நிதிநிலையும் இந்த காலகட்டத்தில் பெரிய வீழ்ச்சியடையும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
