Latest Updates
-
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
கேரட் தக்காளி தொக்கு ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த இடங்களில் மச்சம் உள்ள ஆண்கள் சக்கரவர்த்தியாக வாழும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்களுக்கு இருக்கா? -
ஆரஞ்சு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
செவ்வாய்-ராகு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் செப்டம்பர் மாதம் வரை கொடிகட்டி பறக்கப்போகும் 3 ராசிகள் -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் கோதுமை நெய் அப்பம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
இன்றைய ராசிபலன் 06 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பிரச்சினை வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 13-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம் -
ஆமை வடை ரெசிபி - இந்த மாதிரி வடை சுட்டு பாருங்க - மொறுமொறுனு சூப்பராக இருக்கும்
குரு பகவானின் அருளால் அக்டோபர் 09 முதல் இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் திருப்பம் ஏற்படப்போகுது...
Jupiter Retrograde 2024: ஜோதிடத்தில் அறிவு, கல்வி, செல்வம், தொண்டு, அறம், வளர்ச்சி, ஆசிரியர், குழந்தைகள், உடன் பிறப்புகள் ஆகியவற்றின் காரணியாக குரு பகவான் கருதப்படுகிறார். தேவர்களின் குருவாக கருதப்படும் குரு பகவான் ஒரு ராசியில் சுமார் 1 ஆண்டு காலம் பயணிப்பார். இதனால் குருவின் இயக்கத்தில் ஏற்படும் மாற்றத்தின் தாக்கமானது ஒருவரது வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
தற்போது குரு பகவான் சுக்கிரனின் ரிஷப ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் அக்டோபர் 09 ஆம் தேதி குரு பகவான் ரிஷப ராசியில் வக்ர நிலையில் பயணிக்கவுள்ளார். இந்த வக்ர நிலையில் 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி 05 ஆம் தேதி வரை இருப்பார். அதன் பின் வக்ர நிவர்த்தி அடைந்து பயணிப்பார்.

குரு வக்ரமாவதால் அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பெரிய திருப்பம் ஏற்படப் போகிறது. சொல்லப்போனால் பொற்காலம் தொடங்கப் போகிறது என்றே கூறலாம். இப்போது குரு வக்ரமாவதால் அக்டோபர் 09 முதல் எந்த ராசிக்காரர்களுக்கு பொற்காலமாக இருக்கப் போகிறது என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 2 ஆவது வீட்டில் குரு வக்ரமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் அவ்வப்போது எதிர்பாராத நிதி நன்மைகளைப் பெறுவார்கள். வணிகர்கள் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தத்தைப் பெறுவார்கள். இது வணிகத்தை அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல உதவி புரியும். இக்காலத்தில் முதலீடுகளை செய்தால், அதிலிருந்து இரட்டிப்பு லாபம் கிடைக்கும். நிதி நிலை மேம்படும். சமூகத்தில் நல்ல மரியாதையைப் பெறுவீர்கள்.
கன்னி
கன்னி ராசியின் 9 ஆவது வீட்டில் குரு வக்ரமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறுவார்கள். நல்ல பொருள் இன்பத்தைப் பெறுவார்கள். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இதுவரை திருமண வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வந்து, வாழ்க்கை இனிமையாக இருக்கும். சுப நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்க நேரிடும். சிலர் வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். இந்த பயணம் நல்ல பலனைத் தருவதாக இருக்கும். மாணவர்கள் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெற்று வெற்றி பெறுவார்கள்.
கும்பம்
கும்ப ராசியின் 4 ஆவது வீட்டில் குரு வக்ரமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் வசதிகள் பெருகப் போகிறது. தொழிலில் மகத்தான வெற்றியைப் பெறுவீர்கள். வியாபாரிகள் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். புதிய வாகனம், சொத்துக்களைப் பெறுவதற்கான வாய்ப்புக்களும் உள்ளன. ரியல் எஸ்டேட் தொடர்பான வேலை செய்பவர்கள், நினைத்துப் பார்க்காத அளவில் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். தாயாரின் மூலம் நல்ல நிதி நன்மைகளைப் பெறுவதற்கான வாய்ப்புக்களும் உள்ளன.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications