Latest Updates
-
ஆமை வடை ரெசிபி - இந்த மாதிரி வடை சுட்டு பாருங்க - மொறுமொறுனு சூப்பராக இருக்கும் -
இந்தியாவில் இயற்கையாக வைரம் கிடைக்கும் ஒரே மாநிலம் எது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
திருநெல்வேலி ஸ்டைல் அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
அடுத்தவர் மனைவியை திருடுவது இந்த நாட்டில் வேடிக்கையான விளையாட்டாம் - ஆனா இதுல ஒரு விவகாரமான கண்டிஷன் இருக்கு -
சில்லி கார்லிக் ப்ரைடு ரைஸ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
காரைக்குடி கார சட்னி - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
சனிபகவான் ரேவதி நட்சத்திரம் செல்வதால் அக்டோபர் மாதம் வரை இந்த 3 ராசிக்காரங்க ராஜாதான் - உங்க ராசி இதுல இருக்கா -
இன்றைய ராசிபலன் 05 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு தங்க மழை கொட்டப்போகுதாம் -
புதன் பெயர்ச்சியால் நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது.. -
மழைக்காலத்தில் சருமம் பொலிவா இருக்கணுமா? அப்ப இந்த ஆயுர்வேத ஃபேஸ் மாஸ்க்கை போடுங்க..
குரு பகவான் மிதுன ராசியில் அஸ்தமனமாவதால் இந்த 3 ராசிக்காரர்களின் பணக்கஷ்டம் தீரப்போகுது..
Jupiter Combust In Gemini 2025: ஜோதிடத்தின் படி கிரகங்கள் ஒவ்வொன்றும் ராசியை மாற்றுவதோடு, அவ்வப்போது அஸ்தமனமாகி உதயமாகவும் செய்கின்றன. அவ்வாறு கிரகங்கள் அஸ்தமனமாவதால் அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும்.
அந்த வகையில் தேவர்களின் குருவாக கருதப்படும் குரு பகவான் 12 ஆண்டுகளுக்கு பின் மிதுன ராசியில் நுழைந்து பயணித்து வருகிறார். இந்நிலையில் இந்த மிதுன ராசியில் குரு பகவான் ஜூன் 11 ஆம் தேதி அஸ்தமனமாகவுள்ளார். இப்படி குரு அஸ்தமனமாவதால், அதன் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும்.

அதில் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கும். இதன் விளைவாக நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும், சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். இப்போது குரு பகவான் அஸ்தமனமாவதால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
சிம்மம்
சிம்ம ராசியின் 11 ஆவது வீட்டில் குரு பகவான் அஸ்தமனமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் வருமானத்தில் பெரிய அளவில் உயர்வு ஏற்படும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நீண்ட காலமாக சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தொழிலில் முன்னேற்றத்திற்கான பாதை திறக்கும். காதல் வாழ்க்கையில் இனிமையும், பிணைப்பும் அதிகரிக்கும். திருமணமானவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
கன்னி
கன்னி ராசியின் 10 ஆவது வீட்டில் குரு பகவான் அஸ்தமனமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் வேலை மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். தொழிலதிபர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. உடன் வேலை செய்வோரின் முழு ஆதரவு கிடைக்கும். இதனால் உங்களின் இலக்குகளை எளிதில் அடைவீர்கள். வணிகர்கள் தங்கள் வணிகத்தை விரிவாக்கம் செய்யும் வாய்ப்புக்களைப் பெறுவார்கள். புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
மிதுனம்
மிதுன ராசியின் முதல் வீட்டில் குரு அஸ்தமனமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் மரியாதை சமூகத்தில் அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும். திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி பெருகும். இக்காலத்தில் மாணவர்கள் படிப்பில் கெட்டிக்காரர்களாக இருப்பர். தொழிலில் நல்ல வெற்றி கிடைக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். தியானத்தில் ஆர்வம் அதிகரிக்கும். இதன் மூலம் மன அமைதியும் அதிகரிக்கும். இக்காலத்தில் இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கைத் துணை தங்கள் துறையில் முன்னேற்றத்தைக் காண்பார்கள். முக்கியமாக குருவின் ஆசியால் இந்த காலத்தில் உங்களின் வங்கி இருப்பு அதிகரிக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications


