Latest Updates
-
100 ஆண்டுகள் கழித்து மீன ராசியில் உருவாகும் சதுர்கிரக யோகம்: கோடீஸ்வர யோகம் பெறும் 3 ராசிகள்! -
செட்டிநாடு கார அடை-தேங்காய் இஞ்சி சட்னி ரெசிபி காம்போ... இதை செஞ்சு கொடுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
தக்காளி சட்னியை ஒருடைம் இந்த பக்குவத்துல செய்யுங்க.. வீட்டுல 10 இட்லி கூட சாப்பிடுவாங்க... -
இன்றைய ராசிபலன் 14 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்...! -
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...! -
1 கப் அரிசி மாவு இருந்தா.. காரடையான் நோன்பு இனிப்பு அடையை இப்படி சிம்பிளா செய்யுங்க..
உங்க ராசிப்படி உங்களின் மரணம் எப்படி இருக்கப்போகிறது தெரியுமா? இந்த 4 ராசிக்காரங்கதான் ரொம்ப பாவம்...!
உலகத்தில் எந்த விஷயம் மாறினாலும் சில விஷயங்கள் மட்டும் எப்பவும் மாறாது, மாற்றவும் முடியாது. அதில் ஒன்றுதான் மரணம். பூமியில் பிறந்த எந்த உயிராக இருந்தாலும் மரணமடைந்துதான் தீர வேண்டும். அந்த மரணம் எப்படிப்பட்டதாக இருக்கும் என்பது அவர்களின் கர்ம பலன்களை பொறுத்தே அமையும்.
நாம் அனைவருமே ஏதாவது ஒரு கட்டத்தில் நம்முடைய மரணம் எப்படி இருக்கும் என்பதைப் பற்றி சிந்தித்து இருப்போம். நமது மரணம் எப்போது நிகழும், எப்படி நிகழும் என்பதை தெரிந்து கொள்வது இயலாது என்றாலும் ஜோதிட சாஸ்திரத்தின் படி, நமது ராசியின் அடிப்படையில் நமது மரணம் எப்படியிருக்கும் என்பது பற்றி ஓரளவு தெரிந்து கொள்ளலாம். இந்த பதிவில் உங்கள் ராசிப்படி உங்களின் மரணம் எப்படி நேரும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் விபத்து மூலம் துர்மரணம் அடைய வாய்ப்புள்ளது. ராசிச் சக்கரத்தின் முதல் ராசியான மேஷ ராசி பிடிவாதமான மற்றும் பொறுப்பற்றதாக அறியப்படுகிறது. இந்த நபர்கள் பொதுவாக மிகவும் தைரியமானவர்கள் மற்றும் புதிதாக முயற்சிப்பதில் நம்பிக்கைக் கொண்டவர்கள். இருப்பினும், சில சமயங்களில் சூழ்நிலைகள் அவர்களுக்கு எதிராக மாறக்கூடும். மேஷ ராசிக்காரர்கள் மலை ஏறுதல், வேகமாக வாகனம் ஓட்டுதல், நெருப்புடன் விளையாடுதல் போன்ற சாகசங்களைச் செய்யும்போது விபத்தால் மரணமடையலாம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் பொதுவாக எளிமையானவர்கள் மற்றும் மிகவும் அன்பானவர்கள் என்று அறியப்படுகிறது. இந்த ராசிக்காரர்கள் பொதுவாக தங்கள் நலனில் மட்டுமே அதிக அக்கறை செலுத்துவார்கள். அவர்கள் யாருக்காகவும், எதற்காகவும் தங்களுடைய பொருட்களை விட்டுத்தர மாட்டார்கள், இந்த அணுகுமுறை அவர்களுக்கு எதிராக மாறக்கூடும். அவர்களின் சுயநல நடத்தையை விரும்பாத ஒருவரால் அவர்கள் கொல்லப்படுவதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளன.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் இரட்டை ஆளுமைக் கொண்டவர்கள், வெளிப்படையானவர்கள் மற்றும் வேடிக்கையானவர்கள் என்று அறியப்படுகிறார்கள். இருப்பினும், சில சமயங்களில் அவர்கள் மற்ற நபரின் உணர்ச்சிகளைப் புண்படுத்தும் சில விஷயங்களைச் செய்கிறார்கள் மற்றும் இது அவர்களுக்கு எதிர்மறையாக மாறக்கூடும். தேவையில்லாத செயல்களை குறுகிய மனப்பான்மை கொண்டவர் முன் செய்வது மிதுன ராசிக்காரர்களுக்கு நல்லதல்ல. இது அவர்கள் உயிருடன் புதைக்கப்படுவதன் மூலம் மரணத்தை சந்திக்க வழிவகுக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் தவறான நபருடன் நட்பு வைத்துக் கொள்வதால் மரணம் அடைவார்கள். அந்த மோசமான நண்பர் உங்களை ஏமாற்றுவார்கள், அதனால் நீங்கள் அவர்களின் உண்மையான முகத்தைப் பற்றி தெரிந்து கொள்ள முடியாது.
கடக ராசிக்காரர்கள் நண்பர்களைத் தேர்ந்தெடுப்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மேலும், முடிவெடுக்கும் போது பலரின் ஆலோசனைகளை குறிப்பாக உங்கள் நெருங்கிய நண்பர்களை மனதில் வைத்து எடுக்கக்கூடாது.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் அசாத்திய தைரியம் கொண்டவர்களாகவும், வலுவாக சிந்திக்கக் கூடியவர்களாகவும் இருப்பார்கள். இந்த ராசிக்காரர்கள் அனைத்து விஷயத்தையும் ஆழமாகப் பார்க்கிறார்கள், சில நேரங்களில் சில எண்ணங்கள் அவர்களைத் துன்புறுத்தக்கூடும், அவை மனச்சோர்வு, விரக்தி, தூக்கமின்மை, தற்கொலை போக்கு போன்றவற்றுக்கு வழிவகுக்கும். மேலும், இந்த எண்ணங்கள் அவர்களின் மனதில் தோன்றுவதால் அவர்கள் மரணத்தை சந்திக்கும் வாய்ப்பும் உள்ளது. .
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் மிகவும் புத்திசாலியான மற்றும் மிகவும் சிக்கலான அறிகுறிகளில் ஒன்றாகும். உண்மையில், அவர்கள் செல்லும் எல்லா இடங்களிலும் நிச்சயமற்ற சூழ்நிலை அவர்களை சோர்வடையச் செய்கின்றன. இந்த ராசிக்காரர்களுக்கு சுயநலம் அதிகம் மற்றும் தங்களைப் பற்றி மட்டுமே அதிகம் கவலைப்படுகிறார்கள். சில சமயங்களில் விஷயங்கள் தங்கள் சொந்த மனதில் ஏற்படும் தீவிர குழப்பம், அவர்களை தற்கொலைக்குத் தூண்டும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் சமநிலையான மற்றும் இராஜதந்திர குணத்தைக் கொண்டவர்கள். இந்த ராசிக்காரர்கள் எப்போதும் சில சிக்கலான அல்லது ஆபத்தான விஷயங்களைச் செய்ய முயற்சி செய்கிறார்கள். சில சமயங்களில் சில சட்டவிரோத செயல்களைச் செய்வது அவர்களுக்கு எதிராக மாறலாம், இதனால் அவர்கள் தூக்கிலடப்படலாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் அதிகம் உணர்ச்சிவசப்படக் கூடியவர்களாவும், மர்மமான ஆளுமைக் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். இந்த ராசிக்காரர்கள் எந்தவொரு விஷயத்துடனும் மிக எளிதாக இணைக்கப்படுகிறார்கள். அவர்களால் அன்புக்குரியவர்களை இழக்க முடியாது. இருப்பினும், அவர்களுக்கு நெருக்கமான ஒருவரின் பிரிவு அல்லது மரணம் அவர்கள் இதயத்தை நொறுக்கி மரணத்தை ஏற்படுத்தும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் அதிக ஆற்றல் மிக்கவராகவும், சுறுசுறுப்பாகவும், சில சமயங்களில் கொஞ்சம் அடிமைத்தனம் கொண்டவராகவும் அறியப்படுகிறது. இந்த ராசிக்காரர்கள் தொழில்நுட்பம் மற்றும் ஆன்லைன் கேம்களில் அதிக நாட்டம் கொண்டுள்ளனர். ஆன்லைன் கேம்களை விளையாடும்போது இணையத்தில் அதிக நேரம் செலவிடுவது அவர்களின் மரணத்திற்கு முக்கிய காரணமாக மாறும்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் சோம்பேறியாகவும், சில சமயங்களில் சற்று கவனக்குறைவாகவும் இருப்பார்கள். இந்த ராசிக்காரர்கள் நாள் முழுவதும் எதுவும் செய்யாமல் வீட்டிலேயே வெட்டியாக இருக்க விரும்புகிறார்கள். அவர்கள் உறங்குவதில் அதிக விருப்பம் கொண்டுள்ளனர், அதிக தூக்கமே அவர்களின் மரணத்திற்கு ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் சுதந்திர உணர்வு கொண்டவர்கள் மற்றும் அனைத்திலும் கவனம் செலுத்துபவர்கள். இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் பேராசைக் கொண்டவர்கள், மேலும் மோசடி மூலம் லாபம் சம்பாதிக்க நினைக்கிறார்கள். கும்ப ராசிக்காரர்கள் லாபத்திற்காக எதையும் செய்வார்கள், அது நடக்கவில்லை என்றால் அவர்கள் விரக்தி அடைவார்கள். அவர்களின் நிதி இழப்பு அவர்களின் மரணத்திற்கு வழிவகுக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் மிகவும் தந்திரமானவர்கள் மற்றும் புத்திசாலிகள். இந்த ராசிக்காரர்கள் எப்போதும் நேர்மறையான விஷயங்களில் அதிக கவனம் செலுத்துகிறார்கள். இருப்பினும், சில நேரங்களில் தெரிந்தோ தெரியாமலோ எந்த காரணமும் இல்லாமல் தங்களைத் தாங்களே காயப்படுத்திக் கொள்கிறார்கள். அவர்கள் மின்சாரம் தாக்கி இறக்கும் வாய்ப்புகள் அதிகம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications












