Latest Updates
-
இன்றைய ராசிபலன் 28 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டுமாம் -
May 2026 Career Horoscope: மே மாதத்தில் தொழிலில் கொடிகட்டி பறக்கப் போவது இந்த 4 ராசிக்காரங்க தான்! -
1 கப் சுண்டல் இருந்தா.. ஒருடைம் இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு பிரமாதமா இருக்கும்.. -
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் 35 வயசுக்கு மேல் தான் வெற்றியை காண்பார்களாம்.. உங்க பிறந்த தேதி இதுல இருக்கா? -
லிவ்-இன் உறவு முறிவு கிரிமினல் குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு என்ன சொல்கிறது? -
டேட்டிங் ஆப் மூலம் நடக்கும் பில் மோசடி! இந்த அறிகுறிகள் தெரிந்தால் உடனே உஷாராகுங்கள்! -
வெயிலால் முகத்தில் எண்ணெய் அதிகம் வழியுதா? அப்ப இந்த முல்தானி மெட்டி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
மே மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு கூரைய பிச்சு பண மழை கொட்டப்போகுது... -
வெந்தயக் கீரை பருப்பு கூட்டு - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
கோடை வெயிலில் வீடு சூடாக இருக்கா? இந்த செடிகளை வளர்த்தால் குளிர்ச்சியும் பணமும் தேடி வரும்!
2025-ல் இந்த 4 ராசிக்காரங்களுக்கு சொந்த வீடு வாங்கும் ராஜயோகம் வரப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
Horoscope 2025: ஒவ்வொரு புதிய ஆண்டும் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும். 2025-ஆம் ஆண்டு புத்தாண்டு கணிப்புகளின்படி ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் வெவ்வேறு யோகங்கள் வரப்போகிறது. அதன்படி சில ராசிக்காரர்கள் 2025-ல் புதிய வீடு கட்டும் அதிர்ஷ்டத்தை பெறப்போகிறார்கள்.
பொருளாதாரச் சிக்கல்கள் அல்லது தனிப்பட்ட சிக்கல்களால் சொந்த வீடு கட்டவோ அல்லது சொந்தமாக வீடு வாங்க முடியாதவர்களுக்கு 2025-ல் அதிர்ஷ்டம் கிடைக்கும். இந்த பதிவில் 2025-ல் சொந்த வீடு வாங்கப்போகும் அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யாரென்று தெரிந்து கொள்ளலாம்.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு சொந்த வீடு வாங்க வேண்டுமென்பது வாழ்நாள் லட்சியமாக இருக்கும். நீண்ட நாட்களாக சொந்த வீடு வாங்க வேண்டுமென்று அவர்கள் காத்திருப்பார்கள். வீட்டு வேலையைத் தொடங்கி பாதியில் முடிக்க முடியாதவர்களுக்கு இப்போது நிதி உதவி கிடைக்கும்.
இதன் மூலம் அவர்கள் வீட்டின் அனைத்து வேலைகளையும் விரைவாக முடிக்க முடியும். இந்த ராசிக்காரர்கள் 2025-ல் பல ஆதாரங்களில் இருந்து நிதி உதவி பெறலாம். வீட்டு வேலைகளை முடிக்க அரசிடம் இருந்தும் நிதி உதவி கிடைக்கும். ஜூன் 2025 க்கு முன், இவர்கள் ஒரு புதிய வீட்டில் குடியேறும் அதிர்ஷ்டத்தைப் பெறுவார்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களில் தற்போது சொந்த வீடு உள்ளவர்களுக்கு புதிய வீடு வாங்கும் அதிர்ஷ்டம் கூடிவரும். பழைய வீட்டில் வசிப்பவர்களுக்கு வீட்டைப் புதுப்பிக்கலாம். புது மாடலில் நல்ல வீடு வாங்க திட்டமிடுவார்கள் மற்றும் அந்த திட்டம் வெற்றிபெறும். அவர்களுக்கு இருந்து வந்த நீண்ட நிதி பிரச்சினைகள் இப்போது முடிவுக்கு வரும்.
வீட்டிற்கு தேவையான பல விலையுயர்ந்த பொருட்களை வாங்கலாம். இந்த ராசிக்காரர்கள் புதிய வீட்டிற்குச் சென்ற பிறகு, அவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியும், அமைதியும் கிடைக்கும். அவர்களின் வங்கிக் கடன் பிரச்சினைகள் முடிவிற்கு வரும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியினருக்கு 2025ஆம் ஆண்டின் தொடக்கமே அதிர்ஷ்டம் நிறைந்ததாக இருக்கும், கடந்த கால நிதிச் சிக்கல்கள் முடிவிற்கு வரும். அதேபோல வீட்டுக்கடன் பெறவும் வாய்ப்புகள் கிடைக்கும். எனவே இந்த ராசிக்காரர்கள் தங்களின் கனவு வீட்டை சொந்தமாக்கிக் கொள்ள முடியும். இல்லையெனில் அவர்களின் பூர்வீக வீட்டைப் புதுப்பிக்க முடியும். புதிய நிலம் வாங்க வாய்ப்புகள் கிடைக்கும். பூர்வீக இடம் இருந்தால் அந்த இடத்தில் புதிய வீடு கட்டலாம். புது வீட்டுக்குள் நுழைந்ததும் வீட்டில் ஒரு சுப நிகழ்வு நடக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு பழைய வீட்டைப் புதுப்பிக்கும் அதிர்ஷ்டம் இருக்கும். அவர்களுக்கு இருந்த நிதிசிக்கல்கள் முடிவுக்கு வரும். புதிய உத்தியோகம் கிடைப்பதால் கடந்த கால கடன்களை அளிக்கலாம். இந்த ராசிக்காரர்களுக்கு நல்ல சம்பளத்துடன் கூடிய வேலை கிடைக்கும் என்பதால், புதிய வீட்டிற்காக கொஞ்சம் பணத்தை முதலீடு செய்வார்கள்.
விரும்பியபடி புதிய வீடு கட்ட முடியும். பழைய வீட்டைப் புதுப்பித்து வாடகைக்கு விடலாம். இதன் மூலம் நிதிநிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். இந்த வருடம் அவர்களின் கடன் சுமைகள் பெருமளவில் குறையும். அதனால் வாழ்க்கையில் மகிழ்ச்சியும், அமைதியும் நிலவுகிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
