Latest Updates
-
இந்தியாவில் இயற்கையாக வைரம் கிடைக்கும் ஒரே மாநிலம் எது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
திருநெல்வேலி ஸ்டைல் அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
அடுத்தவர் மனைவியை திருடுவது இந்த நாட்டில் வேடிக்கையான விளையாட்டாம் - ஆனா இதுல ஒரு விவகாரமான கண்டிஷன் இருக்கு -
சில்லி கார்லிக் ப்ரைடு ரைஸ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
காரைக்குடி கார சட்னி - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
சனிபகவான் ரேவதி நட்சத்திரம் செல்வதால் அக்டோபர் மாதம் வரை இந்த 3 ராசிக்காரங்க ராஜாதான் - உங்க ராசி இதுல இருக்கா -
இன்றைய ராசிபலன் 05 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு தங்க மழை கொட்டப்போகுதாம் -
புதன் பெயர்ச்சியால் நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது.. -
மழைக்காலத்தில் சருமம் பொலிவா இருக்கணுமா? அப்ப இந்த ஆயுர்வேத ஃபேஸ் மாஸ்க்கை போடுங்க.. -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் அப்பம் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
அக்டோபரில் உருவாகும் குரு மங்கள ராஜயோகம்: இந்த 4 ராசிக்காரர்களின் கையில் பணம் குவியப்போகுது...
Guru Mangal Rajyog On October 2025: ஜோதிடத்தைப் பொறுத்தவரை, அக்டோபர் மாதம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் இந்த மாதத்தில் பல கிரகங்கள் ராசியை மாற்றுவது மட்டுமின்றி, பல ராஜயோகங்களும் உருவாகவுள்ளன. முக்கியமாக மங்களகரமான கிரகமான குரு பகவான், தனது உச்ச ராசியான கடக ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த கடக ராசியில் குரு நுழைவதால் ஹன்ஸ் ராஜயோகம் உருவாகவுள்ளது.
அதே சமயம் கிரகங்களின் தளபதியாக கருதப்படும் செவ்வாய் தனது சொந்த ராசியான விருச்சிக ராசிக்குள் நுழையவுள்ளார். இதனால் ருச்சக ராஜயோகம் உருவாகவுள்ளது. இவ்விரண்டு ராஜயோகங்களும் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் 4 ராசிக்காரர்கள் இந்த ராஜயோகங்களால் எதிர்பாராத அளவில் நல்ல பலன்களைப் பெறவுள்ளனர்.

அதுவும் இந்த குரு மங்கள ராஜயோகங்களால் இந்த ராசிக்காரர்களின் நிதி நிலையில் இரட்டிப்பு உயர்வு ஏற்படுவதோடு, தொழில் மற்றும் வேலையிலும் நல்ல முன்னேற்றம் ஏற்படும் வாய்ப்புள்ளது. இப்போது அக்டோபரில் உருவாகும் குரு மங்கள ராஜயோகங்களால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
குரு மங்கள ராஜயோகங்களால் மேஷ ராசிக்காரர்களுக்கு அக்டோபர் மாதமானது மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். செவ்வாய் மற்றும் குரு பகவானால் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், சிறப்பாகவும் இருக்கும். நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும். புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். சமூகத்தில் உயர் நிலையில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். அவர்களால் சில நல்ல நன்மைகளைப் பெறும் வாய்ப்புள்ளது. தாயாரின் ஆரோக்கியம் மேம்படும். மாணவர்கள் இம்மாதத்தில் படிப்பில் சிறந்து திகழ்வார்கள்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு குரு மங்கள ராஜயோகங்களால் அக்டோபர் மாதமானது அதிர்ஷ்டமானதாக இருக்கும். இதன் மூலம் நிதி நிலையில் உயர்வு ஏற்படும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பரம்பரை தொழிலை செய்து வருபவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. புதிய தொழிலை தொடங்கும் எண்ணம் இருந்தால், அதற்கு இக்காலம் சிறப்பாக இருக்கும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும். கையில் பணம் குவியும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு அக்டோபர் மாத குரு மங்கள ராஜயோகங்களால் சிறப்பாக இருக்கும். முக்கியமாக தன்னம்பிக்கை அதிகரிக்கும். மன உறுதி அதிகரித்து, பல வேலைகளை துணிச்சலாக செய்து முடிப்பீர்கள். தொழிலில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. வாழ்க்கையில் இருந்த பல பிரச்சனைகள் முடிவுக்கு வரும். மாணவர்கள் போட்டிகளில் கலந்து கொண்டால், நல்ல வெற்றியைப் பெறுவார்கள்.
மீனம்
குரு மங்கள ராஜயோகங்களால் அக்டோபர் மாதமானது மீன ராசிக்காரர்களுக்கு சிறப்பான மாதமாக இருக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். மன அமைதியைப் பெறுவீர்கள். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. குடும்பத்தில் அமைதி நிலவும். காதல் மற்றும் திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications