Latest Updates
-
வெயிலால் கருமையாகியுள்ள சருமத்தை வெள்ளையாக்கணுமா? அப்ப இந்த முலாம் பழ ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
வெயிலின் தாக்கத்தை குறைக்க வாஸ்து செடிகளுக்கு மவுசு: மணி பிளாண்ட், அரேகா பாம் வாங்க மக்கள் ஆர்வம் -
செஃப் தாமு ஸ்டைல் பருப்பு ரசம் - 5 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க... -
May 2026 Monthly Horoscope: மே மாதம் ராஜவாழ்க்கை வாழப்போற 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்து மாற்றங்கள்: ஏப்ரல் 24-ல் இந்த சின்ன மாற்றத்தை செஞ்சா பணமழை கொட்டுமா? -
ஆண்களே! உங்க விந்துவை கெட்டிபடுத்தணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
நீல் ஆம்ஸ்ட்ராங் நிலாவிலிருந்து ரகசியமாக கொண்டுவந்த பொருட்கள் இப்ப கிடைச்சிருக்கு - அதுல என்னென்ன இருக்கு? -
12 ஆண்டுகள் கழித்து கடகம் செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு போதும் போதும் என்ற அளவுக்கு பணம் கொட்டபோகுது! -
5 பச்சை மிளகாயும், 1/4 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும்
100 ஆண்டுகளுக்கு பின் சனியின் மீது விழும் குரு பார்வை: இந்த 2 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப்போறாங்க...
Guru Drishti On Shani Dev: ஜோதிடத்தின் படி, நவகிரகங்களில் ஒருவரது வாழ்க்கையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும் இரண்டு கிரகங்கள் தான் குரு மற்றும் சனி. இவற்றில் சனி பகவான் மகரம் மற்றும் கும்ப ராசிகளின் அதிபதியாவார். அதே சமயம் குரு பகவான் தனுசு மற்றும் மீன ராசிகளின் அதிபதியாவார். இந்த குரு பகவான் இந்த ஆண்டின் தொடக்கத்தில் மிதுன ராசியில் பயணித்து வந்தார்.
இந்நிலையில் அக்டோபர் 18 ஆம் தேதி குரு பகவான் கடக ராசிக்குள் நுழைந்தார். கடக ராசியில் குரு பகவான் நுழைந்ததால், குருவின் பார்வை மீன ராசியில் பயணித்து வரும் சனி பகவானின் மீது விழுகிறது. ஏற்கனவே சனி பகவான் அக்டோபர் 04 ஆம் தேதி குரு பகவானின் பூரட்டாதி நட்சத்திரத்தில் நுழைந்து பயணித்து வருகிறார்.

இதனால் குருவின் மங்களகரமான பார்வையானது சனி பகவான் மீது விழுகிறது. இந்த சுப பார்வையானது சனி பகவான் மீது சுமார் 100 ஆண்டுகளுக்கு பின் நிகழ்கிறது. இதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்பட்டாலும், சில ராசிக்காரர்கள் இந்த சுப பார்வையால் தொழில், வணிகம், நிதி போன்றவற்றில் நல்ல முன்னேற்றங்களை காணவுள்ளனர்.
இது தவிர படிப்பு, குடும்ப வாழ்க்கை போன்றவை சிறப்பாக இருப்பதோடு, வெளிநாட்டு பயணங்களையும் மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். இப்போது குருவின் சுப பார்வை சனி பகவான் மீது விழுவதால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மகரம்
மகர ராசியின் அதிபதியான சனி பகவான் 3 ஆவது வீட்டில் உள்ளார். அதே சமயம் குரு பகவான் 7 ஆவது வீட்டில் உள்ளார். இதனால் குருவின் பார்வை சனி பகவான் மீது விழுவதால் மகர ராசிக்காரர்கள் கடின உழைப்பிற்கான பலன்களைப் பெறுவார்கள். பணியிடத்தில் இதுவரை பிரச்சனைகளை சந்தித்து வந்தால், அந்த பிரச்சனை முடிவுக்கு வரும்.
உயர் அதிகாரிகள் மற்றும் உடன் வேலை செய்வோரின் முழு ஆதரவு கிடைக்கும். மன அழுத்தம் குறையும். போராட்டமிக்கதாக இருந்த வாழ்க்கை மாறி, வாழ்வில் சந்தோஷமும், செழிப்பும், நிறைந்திருக்கும். குரு மற்றும் சனி பகவானின் அருளால் படைப்பாற்றல், சிந்திக்கும் திறன் மற்றும் செயல்திறன் அதிகரிக்கும். வீட்டு சூழல் இனிமையாக இருக்கும்.
சனியின் 10 ஆவது பார்வை குருவின் தனுசு ராசியின் அமைந்துள்ள 12 ஆவது வீட்டில் விழுகிறது. இதனால் வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ள நேரிடும். மற்றும் வெளிநாட்டுடன் தொடர்புடைய வணிகம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். தேவையற்ற செலவுகள் குறியும். நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். வருமானத்தில் உயர்வு ஏற்படும். சமூகத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். 3 ஆவது வீட்டில் குருவின் பார்வை விழுவதால் முயற்சிகளுக்கு ஏற்ற பலன் கிடைக்கும். உடன் பிறந்தவர்களின் முழு ஆதரவு கிடைக்கும்.
இந்த ராசிக்காரர்கள் குரு பகவானை மகிழ்விக்க பெற்றோர், ஆசிரியர்களை மதிக்க வேண்டும். ஒவ்வொரு வியாழக்கிழமையும், விஷ்ணு சகஸ்ரநாமத்தை பாராயணம் செய்வதோடு, குளிக்கும் நீரில் மஞ்சள் சேர்த்து குளித்து, மஞ்சள் நிற ஆடைகளை அணிய வேண்டும். மேலும் மஞ்சள் நிற பொருட்களை தானம் செய்ய வேண்டும்.
கன்னி
கன்னி ராசியின் 7 ஆவது வீட்டில் சனி பகவான் உள்ளார். குரு பகவான் 10 ஆவது வீட்டில் இருந்து 11 ஆவது வீட்டிற்கு நுழைந்து பயணித்து வருகிறார். இந்நிலையில் குருவின் பார்வை சனி பகவான் மீது விழுவதால் சிறப்பான பலன்களைப் பெறுவீர்கள். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். வருமானத்தில் உயர்வு ஏற்படும். தொடர்பு கொள்ளும் திறன் மேம்படும்.
உடன் பிறந்தவர்களின் முழு ஆதரவு கிடைக்கும். உடல்நல பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு, ஆரோக்கியம் மேம்படும். புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். பணப் பிரச்சனைகள் தீரும். கடன் தொல்லைகளில் இருந்து விடுபடுவீர்கள். குரு பகவானின் ஆசியால் பொருள் வசதிகள் அதிகரிக்கும். நல்ல செழிப்பான வாழ்க்கையை வாழ்வீர்கள்.
குருவின் 5 ஆவது பார்வை 3 ஆவது வீட்டிலும், 7 ஆவது பார்வை 5 ஆவது வீட்டிலும், 9 ஆவது பார்வை 7 ஆவது வீட்டிலும் விழும். கடின உழைப்பு மற்றும் விடா முயற்சிக்கான பலன் கிடைக்கும். முயற்சிகளில் நல்ல வெற்றி கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் படைப்புத் துறையில் இருப்பவர்கள் சாதகமான பலன்களைப் பெறுவார்கள். புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications