Latest Updates
-
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும்
12 ஆண்டுகள் கழித்து உருவாகும் குருஆதித்ய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் தூங்கிகொண்டிருந்த அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்
Guru Aditya Rajyog In Gemini 2025: ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் ஒவ்வொன்றும் அவ்வப்போது ராசியை மாற்றுவது மட்டுமின்றி, யோகங்களையும் உருவாக்கி, மனித வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் கிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியனும், தேவர்களின் குருவாக கருதப்படும் குரு பகவானும் ஜூன் மாதத்தில் ஒரு சக்தி வாய்ந்த ராஜயோகத்தை உருவாக்கவுள்ளனர்.
அதாவது ஜூன் மாதத்தில் சூரியனும், குருவும் மிதுன ராசியில் ஒன்றிணைந்து குரு ஆதித்ய ராஜயோகத்தை உருவாக்கவுள்ளனர். இந்த ராஜயோகமானது 12 ஆண்டுகளுக்கு பின் மிதுன ராசியில் உருவாகவுள்ளது. இந்த ராஜயோகத்தின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும்.

இருப்பினும் சில ராசிக்காரர்களுக்கு இந்த ராஜயோகம் அதிர்ஷ்டமானதாக இருக்கப் போகிறது. இதன் விளைவாக தொழில் மற்றும் நிதி ரீதியாக நல்ல முன்னேற்றம் ஏற்படும் வாய்ப்புள்ளது. இப்போது மிதுன ராசியில் உருவாகும் சக்தி வாய்ந்த குரு ஆதித்ய ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கன்னி
கன்னி ராசியின் 10 ஆவது வீட்டில் சூரியன் மற்றும் குருவின் சேர்க்கையால் குரு ஆதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இந்த ராஜயோகத்தால் வேலை மற்றும் வணிகத்தில் சிறப்பான முன்னேற்றம் ஏற்படும். வாழ்க்கையின் ஆடம்பரங்களும், வசதிகளும் அதிகரிக்கும்.
பணியிடத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும். புதிய வீடு, வாகனம் அல்லது சொத்துக்களை வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. வணிகர்கள் தங்கள் தொழிலில் நல்ல லாபத்தைக் காண்பார்கள்.
சிம்மம்
சிம்ம ராசியின் 11 ஆவது வீட்டில் சூரியன் மற்றும் குரு சேர்க்கையால் குரு ஆதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் வருமானத்தில் உயர்வு ஏற்படும். புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
பணியிடத்தில் எதிர்பாராத முன்னேற்றம் ஏற்படும் வாய்ப்புள்ளது. புதிய வேலையை தொடங்க நினைத்தால், இக்காலம் சாதகமாக இருக்கும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். சிலருக்கு வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்புக்கள் கிடைக்கலாம். முக்கியமாக நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.
மீனம்
மீன ராசியின் 4 ஆவது வீட்டில் புதாதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் ஆடம்பரங்களும், வசதிகளும் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களிடையே மகழ்ச்சி அதிகரிக்கும்.
பணம் தொடர்பான திட்டங்களில் நல்ல வெற்றி கிடைக்கும். செல்வம் அதிகரிப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. வியாபாரிகளுக்கு திடீர் லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. அரசு வேலை செய்பவர்கள் நல்ல வெற்றியுடன் பணத்தையும் சம்பாதிப்பார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
