Latest Updates
-
இந்தியாவில் இயற்கையாக வைரம் கிடைக்கும் ஒரே மாநிலம் எது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
திருநெல்வேலி ஸ்டைல் அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
அடுத்தவர் மனைவியை திருடுவது இந்த நாட்டில் வேடிக்கையான விளையாட்டாம் - ஆனா இதுல ஒரு விவகாரமான கண்டிஷன் இருக்கு -
சில்லி கார்லிக் ப்ரைடு ரைஸ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
காரைக்குடி கார சட்னி - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
சனிபகவான் ரேவதி நட்சத்திரம் செல்வதால் அக்டோபர் மாதம் வரை இந்த 3 ராசிக்காரங்க ராஜாதான் - உங்க ராசி இதுல இருக்கா -
இன்றைய ராசிபலன் 05 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு தங்க மழை கொட்டப்போகுதாம் -
புதன் பெயர்ச்சியால் நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது.. -
மழைக்காலத்தில் சருமம் பொலிவா இருக்கணுமா? அப்ப இந்த ஆயுர்வேத ஃபேஸ் மாஸ்க்கை போடுங்க.. -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் அப்பம் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
இரட்டை நீச்சபங்க ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை அரியணையில் ஏற்றப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
ஜோதிட சாஸ்திரத்தின் படி, அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு நகர்ந்து தங்கள் நிலையை மாற்றுகின்றன. இந்த கிரக மாற்றங்கள் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். கிரகங்கள் ஒன்றோடொன்று இணையும் போது அவை சில மங்களகரமான யோகங்களை உருவாக்குகிறது.
மார்ச் 27, 2025 அன்று, புதன் பலவீனமான மீன ராசியில் நுழைகிறது. அதே நேரத்தில், சுக்கிரன் அதன் உச்ச நிலையில் மீன ராசியில் சஞ்சரிக்கிறார். இதன் விளைவாக அரிய இரட்டை நீச்சபங்க ராஜயோகம் 2025 உருவாகிறது. இந்த அரிய ராஜயோகத்தை தாக்கம் அனைத்து ராசியிலும் காணப்படும். இருப்பினும், சில ராசிக்காரர்கள் இந்த ராஜயோகத்தால் சிறப்பான பலன்களை அடையப்போகிறார்கள். அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

ரிஷபம்
இரட்டை நீச்சபங்க ராஜயோகத்தால் ரிஷப ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களை அன்பவிக்கப்போகிறார்கள். புதன் மீனத்தில் பலவீனமான நிலையில் இருப்பதால், இது ரிஷப ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தையும், முன்னேற்றத்தையும் தரப்போகிறது. இதனால் அவர்கள் எதிர்பாராத திடீர் லாபத்தைப் பெறலாம்.
கடந்த கால முதலீடுகள், பங்குச்சந்தைகள் போன்றவை எதிர்பாராத லாபத்தைப் பெறலாம். வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கலாம் மற்றும் கடனாக கொடுத்தப் பணம் திரும்ப கிடைக்கலாம். உங்கள் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையில் அனைத்து திட்டங்களும் வெற்றிகரமாக இருக்கும்.
சிம்மம்
இரட்டை நீச்சபங்க ராஜயோகம் சிம்ம ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான பலன்களைத் தரப்போகிறது. இந்த யோகத்தால் திடீர் நிதி ஆதாயங்களும், முயற்சிகளில் வெற்றியும் கிடைக்கும். நீங்கள் வெவ்வேறு முதலீடுகளிலிருந்து பயனடையலாம் மற்றும் தொழிலை புதிய இடங்களில் விரிவுப்படுத்தலாம்.
திருமண வாழ்க்கையில், அமைதி மற்றும் நல்லிணக்கம் நிறைந்திருக்கும். அரசாங்கத் தேர்வுகளுக்கு தயாராகி வரும் நபர்கள் நல்ல முன்னேற்றத்தை அடையலாம். நீங்கள் நீண்ட காலமாக பயணம் செய்ய ஆசைப்பட்ட இடத்திற்கு செல்லலாம். உங்கள் உடல்நலம் சீராக இருக்கும், மேலும் அனைத்து வேலைகளையும் சரியாகி முடிப்பீர்கள்.
கும்பம்
இரட்டை நீச்சபங்க ராஜயோகம் கும்ப ராசிக்காரர்கள் வாழ்வில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறது. இந்த யோகத்தால் அவர்கள் புதிய சொத்துக்களை வாங்கி குவிக்கலாம். தொழில் வாழ்க்கையில் எதிர்பாராத முன்னேற்றம் ஏற்படும், சம்பள உயர்வு உங்களின் மகிழ்ச்சியை அதிகரிக்கும்.
வணிகர்களுக்கு முன்னேற்றத்திற்கான சிறந்த வாய்ப்புகள் கிடைக்கும். அவர்களின் பயணங்கள் அவர்களுக்கு பெரும் வெற்றியைக் கொடுக்கும். ஆரோக்கியம் சீராக இருப்பதால் அனைத்து வேலைகளிலும் வெற்றி கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
