Latest Updates
-
தலைக்கு எண்ணெய் தேய்க்கும் போது இந்த தவறுகளை செய்யாதீங்க.. இல்ல முடி தான் டேமேஜ் ஆகும்! உஷார்.. -
பூமியின் உண்மையான எடை எவ்வளவு தெரியுமா? அடேங்கப்பா இத்தனை கோடி கிலோவா? ஷாக் ஆகாதீங்க -
கல்யாண வீட்டு சாம்பார் ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இந்த 4 ராசி பெண்கள் ஆண்களிடம் எப்போதும் கடுமையாக நடந்து கொள்வார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
உணவு உண்ட பின் 90% மக்கள் செய்யும் தவறுகள் இதான்.. நீங்களும் இத பண்றீங்களா-ன்னு பாருங்க.. -
பெங்காலி முட்டை புலாவ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - வாசனை தெருவே மணக்கும் -
செப்டம்பர் 18-ல் நடக்கும் செவ்வாய் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது! -
பாகிஸ்தானின் நம்பர் ஒன் பணக்காரர் யார்? அவர் முகேஷ் அம்பானியை விட பணக்காரரா? உண்மை என்ன? -
சேமியா ரவா கிச்சடியும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 15, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிக்காரங்கள ஆபத்துக்கள் விடாம துரத்தப்போகுதாம்
பாபா வாங்கா கணிப்புகளின் படி 2025-ல் இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா இருக்கப் போறாங்களாம்...!
உலகின் முக்கிய தீர்க்கதரிசிகள் என்று வரும்போது அதில் முதலிடத்தில் இருப்பது பாபா வாங்காதான். பல்கேரியாவைச் சேர்ந்த அவர் தனது 12 வயதில் பார்வையை இழந்தார். ஆனால் ஒரு இயற்கை சீற்றத்தால் அவரது பார்வை போன பின், அவருக்கு எதிர்காலத்தில் நடக்கவிருப்பதை கணிக்கும் ஆற்றல் கிடைத்தது. அவர் 1996 இல் 85 வயதில் காலமானார்.
அவரது கணிப்புகள் அவரது மறைவுக்குப் பிறகும் உலகளவில் மக்களை தொடர்ந்து கவர்ந்து வருகின்றன. 'பால்கன்ஸின் நாஸ்ட்ராடாமஸ்' என்று குறிப்பிடப்படும் பாபா வாங்காவின் மிக முக்கியமான கணிப்புகளில் சில செப்டம்பர் 11, 2001 அன்று நியூயார்க் இரட்டை கோபுரங்கள் மீதான தாக்குதல், ரஷ்யா-உக்ரைன் மோதல் மற்றும் இளவரசி டயானாவின் மரணம் போன்றவை ஆகும்.

பாபா வாங்கா 2025 ஆம் ஆண்டிற்கான பல அதிர்ச்சியூட்டும் கணிப்புகளை வழங்கியுள்ளார், அவற்றில் பல பேரழிவுகளைப் பற்றியதாக இருந்தது. தீர்க்கதரிசியான பாபா வாங்கா ஒரு ஜோதிடரும் கூட. 2025 ஆம் ஆண்டுக்கான அவரது கணிப்புகளின்படி, சில ராசிகளில் பிறந்தவர்கள் அவர்கள் வாழ்வில் மிகப்பெரிய மாற்றங்களை அனுபவிக்கப் போகிறார்கள். இந்த ராசிக்காரர்கள் அவர்களின் நிதி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான பகுதிகளில் பெரிய மாற்றங்களை சந்திக்கப் போகிறார்கள். அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
மேஷம்
மேஷ ராசியில் பிறந்தவர்கள் 2025 ஆம் ஆண்டில் அவர்கள் வாழ்வில் மாற்றங்கள் மற்றும் குறிப்பிடத்தக்க சாதனைகள் நிறைந்த ஆண்டை எதிர்பார்க்கலாம் என்று பாபா வாங்கா கூறுகிறார். இந்த ஆண்டு, அவர்களின் நீண்ட கால விருப்பங்களும் கனவுகளும் நிறைவேற வாய்ப்புள்ளது.
மேஷ ராசிக்காரர்கள் தங்கள் இலக்குகளை நோக்கி விடாமுயற்சியுடன் உழைப்பவர்கள், விரும்பிய பலனை அடைய பொறுமையாக காத்திருப்பவர்கள். தங்களுக்குத் தகுதியான அங்கீகாரம் மற்றும் நன்மைகளைப் பெறுவதில் கவனம் செலுத்துவதால், மேஷ ராசிக்காரர்கள் ரிஸ்க் எடுத்து தங்கள் லட்சியங்களைத் தீவிரமாகத் தொடர 2025 ஒரு சிறந்த நேரமாக இருக்கும் என்று பாபா வாங்கா கணித்துள்ளார்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு, 2025 ஆம் ஆண்டு மிகவும் மகிழ்ச்சியான மற்றும் வளமான ஆண்டுகளில் ஒன்றாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. பாபா வாங்காவின் கணிப்புப்படி, நீண்ட கால கடின உழைப்புக்குப் பிறகு, இந்த வருடம் தங்கள் உழைப்பிற்கான பலனை அனுபவிப்பார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளாக தங்கள் முயற்சிகள் பலனளிக்கும் வரை பொறுமையாகக் காத்திருந்த பிறகு, இந்த ஆண்டு அதற்கான சரியான பலன்களைப் பெறுவதற்கான வாய்ப்புகளை வழங்கும் என்று பாபா வாங்கா கணித்துள்ளார்.
இந்த ஆண்டு ரிஷப ராசிக்காரர்கள் நீண்டகால நிதிப் பாதுகாப்பை அடைவதற்கும் புத்திசாலித்தனமான முதலீடுகளைச் செய்வதற்கும் குறிப்பிடத்தக்க வாய்ப்புகளை சந்திக்க நேரிடும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் 2025 ஆம் ஆண்டில் சிறப்பான மாற்றங்களையும், வாய்ப்புகளையும் எதிர்பார்க்கலாம் என்று பாபா வாங்கா கணித்துள்ளதாக கூறப்படுகிறது. அவர்கள் தடைகளைத் தாண்டி, தங்கள் படைப்பாற்றல் மற்றும் சிக்கல் தீர்க்கும் திறன்களைப் பயன்படுத்தி ஒரு நிலையான எதிர்காலத்தை உறுதி செய்ய வாய்ப்புள்ளது.
பொருளாதார முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் சிறப்பாக இருப்பதால், மிதுன ராசிக்காரர்கள் தங்கள் உள்ளுணர்வை நம்பி, ரிஸ்க் எடுக்க இது ஒரு சாதகமான நேரம் என்று பாபா வாங்கா கணித்துள்ளார். இந்த ஆண்டு அவர்களுக்குக் காத்திருக்கும் வாய்ப்புகளை அதிகரிக்க வலுவான நட்புகளை உருவாக்குவது அவசியம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

