Latest Updates
-
சனிபகவான் வக்ர பெயர்ச்சியை தொடங்கப் போவதால் கோடீஸ்வரராகப் போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்துப்படி, வீட்டில் மண்பானையை இந்த இடத்துல வையுங்க.. பணப்பிரச்சனையே வராது! -
அட்டகாசமான ஆந்திரா ஸ்டைல் வெள்ளரிக்காய் பப்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
பண்டைய ராஜாக்களும், ராணிகளும் கூந்தலை பராமரிக்க பயன்படுத்திய பொருட்கள் என்னென்ன தெரியுமா? -
1 பாக்கெட் சேமியாவும், 3 முட்டையும் இருந்தா.. இப்படி செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
வாஸ்து படி உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களை செய்தால் சீக்கிரம் கோடீஸ்வரராகி விடலாம் - ட்ரை பண்ணுங்க -
கோடையில் முகம் எப்பவும் புத்துணர்ச்சியா இருக்கணுமா? அப்ப இந்த தர்பூசணி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
சாம்பார் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்: சாம்பாரில் இவ்வளவு நன்மைகள் இருக்கா? -
மேஷ ராசியில் அஸ்தமனமாகும் புதன்: மே மாதம் இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் அபார வளர்ச்சியை காண்பாங்க.. -
அவரைக்காய் வாங்குனா சாம்பார் வைக்காம இந்த மாதிரி கூட்டு செஞ்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும்
பாபா வாங்க கணிப்புப்படி, ஆண்டின் கடைசி 3 மாதம் இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது...
Baba Vanga Predictions 2025: எதிர்காலத்தைக் கணித்து கூறும் தீர்க்கத்தரசிகளில் மிகவும் பிரபலமானவர் தான் பாபா வாங்கா. இந்த பாபா வாங்காவின் பல கணிப்புகள் நிஜமாகியுள்ளன. இதனால் எந்த ஒரு நிகழ்வு நடந்தாலும் அல்லது நடக்கப் போவதாக இருந்தாலும், பாபா வாங்காவின் கணிப்புக்களும் செய்திகளில் இடம்பெறும்.
அந்த வகையில் 2025 ஆம் ஆண்டில் பல திடுக்கிடும் கணிப்புக்களை பாபா வாங்கா கணித்துள்ளார். அதில் சில நடந்தேறியும் உள்ளன. இந்த 2025 ஆம் ஆண்டு முடிய இன்னும் 3 மாதங்களே உள்ளன. இந்த 3 மாதங்கள் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமானதாக இருக்கலாம் என்று பாபா வாங்கா கணித்துள்ளார்.

அதுவும் 4 ராசிக்காரர்கள் அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் பல வெற்றிகளையும், நிதி நிலையில் நல்ல முன்னேற்றங்களையும் காணவுள்ளனர். இப்போது 2025 ஆம் ஆண்டின் கடைசி 3 மாதங்கள் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கும் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
பாபா வாங்காவின் கூற்றுப்படி, ரிஷப ராசிக்காரர்களுக்கு 2025 ஆம் ஆண்டின் கடைசி 3 மாதங்கள் மிகவும் அதிர்ஷ்டமானதாக இருக்கும். இம்மாதங்களில் சூரியனின் சிறப்பு ஆசிகள் கிடைக்கும். நீண்ட காலமாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஒரு நல்ல செய்தியை பெறுவீர்கள். வேலையில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். மொத்தத்தில் இக்காலத்தில் வெற்றியும், மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும்.
கன்னி
பாபா வாங்காவின் கூற்றுப்படி, கன்னி ராசிக்காரர்களுக்கு 2025 ஆம் ஆண்டின் கடைசி 3 மாதங்கள் சிறப்பாக இருக்கும். அதுவும் இந்த 3 மாதங்கள் சனி பகவானின் சிறப்பான அருள் கிடைக்கும். இதனால் ஒவ்வொரு வேலையிலும் வெற்றி கிடைக்கும். அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். பண பிரச்சனைகள் முடிவுக்கு வரும். புதிய வருமான வழிகள் திறக்கப்படும். தொழில் மற்றும் வணிகத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவு கிடைக்கும். மொத்தத்தில் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்.
கும்பம்
பாபா வாங்காவின் கூற்றுப்படி, கும்ப ராசிக்காரர்களுக்கு 2025 ஆம் ஆண்டின் கடைசி 3 மாதங்கள் மிகவும் அற்புதமாக இருக்கும். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் நிலவும். வாழ்க்கைத் துணையுடனான பிணைப்பு அதிகரிக்கும். செல்வம் பெருகும். வெற்றிகள் குவியும். மொத்தத்தில் கும்ப ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சியும், முன்னேற்றமும் நிறைந்திருக்கும்.
மிதுனம்
பாபா வாங்காவின் கூற்றுப்படி, மிதுன ராசிக்காரர்களுக்கு 2025 ஆம் ஆண்டின் கடைசி 3 மாதங்கள் மறக்க முடியாத அளவில் முன்னேற்றத்தைத் தரப் போகிறது. குரு பகவானின் ஆசியால் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது. நீண்ட காலமா நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். தொழிலில் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. தொழிலதிபர்கள் எதிர்பாராத அளவில் லாபத்தைப் பெறுவார்கள். குடும்ப வாழ்க்கை இனிமையாக இருக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். ஆரோக்கிய பிரச்சனைகள் முடிவுக்கு வரும். மொத்தத்தில் இந்த ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சியும், வெற்றியும் நிறைந்திருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications











