எச்சரிக்கை! ஜூலை 28 வரை நீடிக்கும் ஆபத்தான அங்காரக யோகம்... பேரிழப்பை தவிர்க்க தினமும் இத சொல்லுங்க போதும்..

Angarak Yog: ஜோதிடத்தின் படி, நிழல் கிரகமான கேது மே மாதத்தில் தான் சிம்ம ராசிக்குள் நுழைந்தார். இந்த சிம்ம ராசியில் கேது 2026 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை இருப்பார். அதே சமயம் கிரகங்களின் தளபதியும், ஆக்ரோஷமான கிரகமாகவும் கருதப்படும் செவ்வாய் ஜூன் 07 ஆம் தேதி சிம்ம ராசிக்குள் நுழைந்தார். இதனால் சிம்ம ராசியில் செவ்வாய் மற்றும் கேதுவின் சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இவ்விரு கிரகங்களின் சேர்க்கையால் அங்காரக யோகம் உருவாகியுள்ளது.

பொதுவாக அங்காரக யோகமானது செவ்வாய் நிழல் கிரகங்களான ராகு அல்லது கேதுவுடன் ஒன்றிணைந்து பயணிக்கும் போது உருவாகும். அதுவும் இந்த அங்காரக யோகம் நற்பலன்களைக் கொடுப்பதை விட, கெடு பலன்களையே அதிகம் அளிக்கும். அதுவும் இந்த யோகத்தின் தாக்கம் மனித வாழ்க்கையில் மட்டுமின்றி, பூமியிலும் காணப்படும்.

Angarak Yog Alert Reading Hanuman Chalisa Daily Can Protect You Till July 28

முக்கியமாக பேரழிவுகளையும், விபத்துக்களையும், இழப்புக்களையும் உண்டாக்கும் வகையில் மோசமான யோகம் தான் இந்த அங்காரக யோகம். அதுவும் இந்த யோக காலத்தில் ராகு அல்லது கேதுவின் ஆதிக்கம் அதிகம் இருப்பதால், இப்படியான மோசமான சம்பவங்கள் ஏற்படுகின்றன.

அந்த வகையில் சிம்ம ராசியில் உருவாகியுள்ள அங்காரக யோகமானது ஜூலை 28 ஆம் தேதி வரை நீடித்திருப்பதால், இக்காலகட்டத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இப்போது அங்காரக யோகத்தால் ஒவ்வொரு ராசிக்காரரும் எந்த விஷயத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதைக் காண்போம்.

மேஷம்

அங்காரக யோகத்தால் மேஷ ராசிக்காரர்களுக்கு ஆரோக்கிய பிரச்சனைகள் ஏற்படக்கூடும். வாகனம் ஓட்டும்போது கவனமாக இருக்க வேண்டும். அதுவும் இந்த ராசியை சேர்ந்த பெண்கள் தொண்டை, குரல்வளை தொடர்பான பிரச்சினைகளை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு வாழ்க்கை மோசமாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் பிரச்சனைகளை சந்திக்க நேரிமும். தொழிலில் கூட்டாளருடன் சண்டைகள் ஏற்படும். பண விஷயங்களில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.

மிதுனம்

அங்காரக யோகத்தால் மிதுன ராசிக்காரர்கள் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகளை அதிகம் சந்திக்க நேரிடும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் உடன் வேலை செய்வோருடன் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

கடகம்

அங்காரக யோகம் கடக ராசிக்காரர்களுக்கு வணிகம் அல்லது வேலையை பாதிக்கலாம். பணியிடத்தில் செயல்திறனில் சரிவை சந்திக்கலாம். காதல் மற்றும் திருமண வாழ்க்கையில் நிறைய பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் அங்காரக யோகத்தால் சொத்து தொடர்பான பிரச்சனைகளை அதிகம் சந்திக்க நேரிடும். மன அமைதி குறையும். வாழ்வில் நிறைய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்கள் அங்காரக யோகத்தால் உடன் பிறந்தவர்களுடன் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இக்காலத்தில் எந்த ஒரு புதிய திட்டங்களையும் தொடங்க வேண்டாம். புதிய விஷயங்களை செய்வதாக இருந்தால், நல்ல நாள் பார்த்து பின் தொடங்க அறிவுறுத்தப்படுகிறது.

துலாம்

துலாம் ராசிக்கு அங்காரக யோகம் நிதி நிலையை மோசமாக பாதிக்கும். முதலீடுகளை செய்யும் எண்ணம் இருந்தால், இக்காலத்தில் அதை தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் பெரிய இழப்பை சந்திக்க நேரிடும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு அங்காரக யோகம் கோபத்தை அதிகரிக்கும். சிறு விஷயங்களுக்கும் நிறைய கோபம் வரும். அதைக் கட்டுப்படுத்தாவிட்டால், தீவிர பிரச்சனையை சந்திக்க நேரிடும். பெண்கள் நோய்களால் அதிகம் அவதிப்பட நேரிடும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு அங்காரக யோகம் நிதி நிலையில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும். நிறைய செலவுகளை செய்ய வேண்டி வரும். அதுவும் இந்த செலவுகள் பெரும்பாலும் மருத்துவ செலவாகவே இருக்கும்.

மகரம்

அங்காரக யோக காலத்தில் மகர ராசிக்காரர்களுக்கு எதிர்பார்த்த அளவுக்குப் பலன் கிடைக்காமல் போகலாம். உடன் பிறந்தவர்களுடன் நிறைய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். ரியல் எஸ்டேட்டில் இருப்பவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு அங்காரக யோகமானது பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும். இந்த யோக காலத்தில் இந்த ராசிக்காரர்கள் எந்த புதிய முயற்சிகளையும், திட்டங்களையும் தொடங்காமல் இருப்பதே நல்லது. இல்லாவிட்டால் இழப்பை சந்திக்க நேரிடும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு அங்காரக யோகத்தால் பயணம் தொடர்பான பிரச்சனைகள் அதிகரிக்கும். ஆன்மீகத்தில் வழக்கத்தை விட ஆர்வம் சற்று அதிகமாக இருக்கும்.

அங்காரக யோகத்தின் விளைவை தடுக்கும் அற்புத வழி

அங்காரக யோகத்தினால் சந்திக்கும் மோசமான விளைவுகளை தவிர்க்க சிறந்த வழி என்றால் அது அனுமன் சாலிசாவை பாராயணம் செய்வது தான். ஜோதிட ரீதியாக அனுமன் சாலிசாவை பாராயணம் செய்தால் நிறைய நன்மைகள் கிடைக்கும். முக்கியமாக கிரக தோஷங்கள், எதிர்மறை எண்ணங்கள், வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகள் மற்றும் ஆரோக்கிய பிரச்சனைகள் போன்றவை நீங்கும்.

பொதுவாக அனுமன் சாலிசாவை செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் தான் மக்கள் பாராயணம் செய்வார்கள். ஆனால் அதை விட, தினமும் அனுமன் சாலிசாவை பாராயணம் செய்வது மிகவும் நல்லது. அதுவும் அனுமன் படத்திற்கு முன் அமர்ந்து காலை, மாலை என இரண்டு வேளைகளிலும் பாராயணம் செய்தால் இன்னும் நிறைய பலன்கள் கிடைக்கும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Tuesday, June 17, 2025, 18:02 [IST]
Desktop Bottom Promotion