Latest Updates
-
இன்றைய ராசிபலன் 12 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நினைத்தது நடக்கும் நாளாக இருக்குமாம்...! -
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...!
Aavani Matha Rasi Palan 2025: ஆவணி மாதம் எந்த ராசிக்கு சூப்பராவும், எந்த ராசிக்கு மோசமாவும் இருக்கும்?
Aavani Matha Rasi Palan 2025: ஜோதிடத்தின் படி, நவகிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியன் மாதம் ஒருமுறை ராசியை மாற்றுவார். இப்படி சூரியன் ராசியை மாற்றும் போது தான் தமிழ் மாதங்கள் பிறக்கின்றன. அந்த வகையில் சூரியன் ஆகஸ்ட் 17 ஆம் தேதி கடக ராசியில் இருந்து சிம்ம ராசிக்குள் நுழைகிறார்.
இந்த சிம்ம ராசியின் அதிபதி சூரியன் ஆவார். சொந்த ராசிக்கு சூரியன் செல்வதால், இது சற்று சிறப்பானது. அதுவும் சிம்ம ராசிக்கு சூரியன் செல்வதனால் தமிழ் மாதங்களில் 5 ஆவது மாதமான ஆவணி மாதம் பிறக்கப்போகிறது.

ஜோதிடத்தில் ஆவணி மாதம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த ஆவணி மாதத்தில் சூரியன் மற்றும் பிற கிரகங்களின் நிலைகளின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும். அதில் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாகவும், சிலருக்கு மோசமாகவும் இருக்கும். இப்போது 2025 ஆவணி மாதம் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 5 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் வேலை மற்றும் வணிகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மாணவர்கள் தேர்வுகளில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். ஒவ்வொரு விஷயத்திலும் வெற்றி கிடைக்கும். ஆனால் காதல் விஷயங்களில் சற்று அலட்சியமாக இருப்பீர்கள். இக்காலத்தில் புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். இதனால் எதிர்காலத்தில் பெருமளவில் லாபம் கிடைக்கும். குடும்பத்தினரின் விருப்பங்களை வெற்றிகரமாக நிறைவேற்றுவீர்கள்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 4 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு அரசு தொடர்பான வேலைகள் வெற்றிகரமாக நிறைவடையும். ஆரோக்கியம் மோசமாக பாதிக்கப்படும். நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் இருந்து மோசமான செய்திகளைப் பெறுவதற்கான வாய்ப்புள்ளது. பயணங்களை மேற்கொள்ளும் போது கவனமாக இருக்க வேண்டும். உங்களின் பொருட்கள் திருடுபோக வாய்ப்புள்ளது. சொத்து தொடர்பான பிரச்சனைகள் தீர்க்கப்படும்.
மிதுனம்
மிதுன ராசியின் 3 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்லவுள்ளார். இதனால் ஆவணி மாதத்தில் இந்த ராசிக்காரர்கள் எந்த முடிவை எடுத்தாலும் வெற்றி பெறுவார்கள். பாதகமான சூழ்நிலைகளைக் கூட எளிதில் கட்டுப்படுத்துவீர்கள். குடும்ப உறுப்பினர்களுடன் பிரச்சனைகள் அதிகரிக்கலாம். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். தேவைப்படுபவர்களுக்கு உதவ முன்வருவீர்கள். அரசின் முழு ஆதரவு கிடைக்கும். யாத்திரைகளை மேற்கோள்ளும் வாய்ப்பு கிடைக்கும்.
கடகம்
கடக ராசியின் 2 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்லவுள்ளார். இதனால் ஆவணி மாதத்தில் திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. நீண்ட காலமாக கடனாக கொடுத்த பணம் கைக்கு வந்து சேரும். விலையுயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சொத்து தொடர்பான பிரச்சனைகள் தீரும். புதிய வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். இம்மாதத்தில் உங்களின் வேலையில் ரகசியத்தன்மையைப் பேண வேண்டும். எந்த ஒரு வேலையையும் முடியும் வரை யாருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.
சிம்மம்
சிம்ம ராசியின் முதல் வீட்டிற்கு சூரியன் செல்லவுள்ளார். இதனால் ஆவணி மாதத்தில் வேலை மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். படைப்பாற்றல் சிறப்பாக இருக்கும். இதன் விளைவாக பணியிடத்தில் நல்ல பாராட்டுக்களைப் பெறுவீர்கள். எந்த முடிவை இம்மாதத்தில் எடுத்தாலும், அது சாதகமாக இருக்கும். வணிகர்கள் புதிய ஒப்பந்தங்களால் நல்ல நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள். ஆனால் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சில உடல் வலிகளை சந்திக்க வேண்டியிருக்கலாம்
கன்னி
கன்னி ராசியின் 12 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் ஆவணி மாதத்தில் நிறைய செலவுகளை சந்திக்க வேண்டியிருக்கும். வெளிநாடு செல்ல முயற்சிப்பவர்களுக்கு, இம்மாதம் சிறப்பாக இருக்கும். நீதிமன்ற வழக்குகளில் தீர்ப்புகள் சாதகமாக வரும். இம்மாதத்தில் யாருக்கும் அதிக கடன் கொடுக்காதீர்கள். இல்லாவிட்டால் அந்த பணம் கைக்கு திரும்ப கிடைக்காது.
துலாம்
துலாம் ராசியின் 11 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்லவுள்ளார். இதனால் ஆவணி மாதத்தில் நீங்கள் நன்கு யோசித்து எடுத்த அனைத்து உத்திகளும் பயனுள்ளதாக இருக்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். சமூகத்தில் புதிய நபர்களின் தொடர்புகள் கிடைக்கும். புதிய வருமான ஆதாரங்கள் கிடைக்கும். வேலையை மாற்றும் எண்ணம் இருந்தால், அதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். புதுமண தம்பதிகளுக்கு குழந்தைகள் தொடர்பான கவலைகள் தொந்தரவு செய்யலாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 10 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் அரசு தொடர்பான வேலைகளில் சாதகமான பலன்களைப் பெறலாம். பெற்றோரின் ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். அரசு வேலைக்கு முயற்சித்துக் கொண்டிருந்தால், இம்மாதம் சிறப்பாக இருக்கும். எவ்வளவு தான் வெற்றிகளைப் பெற்றாலும், இம்மாதத்தில் ஏதாவது ஒரு விஷயத்தால் மனக் குழப்பத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். புதிய வாகனம் வாங்கும் எண்ணம் இருந்தால், இக்காலம் சிறப்பாக இருக்கும்.
தனுசு
தனுசு ராசியின் 9 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு ஆன்மீகத்தில் மற்றும் தொண்டுகளில் ஆர்வம் அதிகரிக்கும். நிறைய தர்மங்களை செய்வீர்கள். குழந்தைகள் தொடர்பான கவலைகள் நீங்கும். புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. குடும்ப சூழல் மகிழ்ச்சியாக இருக்கும். சமூக அந்தஸ்தும், கௌரவமும் அதிகரிக்கும். வணிகர்கள் தங்கள் முடிவுகளை எடுக்க தாமதிக்க வேண்டாம்.
மகரம்
மகர ராசியின் 8 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்லவுள்ளார். இதனால் ஆவணி மாதத்தில் இந்த ராசிக்காரர்கள் பல ஏற்ற தாழ்வுகளையும் எதிர்பாராத முடிவுகளையும் சந்திப்பார்கள். மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். ஆரோக்கியம் மோசமாக பாதிக்கப்படலாம். உங்களுக்கு நன்கு தெரிந்தவர்களே உங்களை அவமானப்படுத்த முயற்சிப்பார்கள். இருப்பினும், இம்மாதத்தில் நிதி நிலைமை வலுவாகும். திடீர் நிதி ஆதாயங்களைப் பெற வாய்ப்புகள் உள்ளன.
கும்பம்
கும்ப ராசியின் 7 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்லவுள்ளார். இதனால் ஆவணி மாதம் எதிர்பார்த்தவாறு சிறப்பாக இருக்காது. திருமணமாகாதவர்கள் நல்ல வரனைப் பெறுவதில் சிறிது நேரம் எடுக்கும். திருமண வாழ்க்கையில் அலட்சியமாக இருக்கும். உறவினர்களுடனான உறவை மோசமடையவிடாதீர்கள். வேலை மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்தபடி முன்னேற்றம் இருக்கும். கூட்டுத் தொழில் செய்வதைத் தவிர்க்கவும். வெளிநாடு செல்ல விசா விண்ணப்பிக்க நினைத்தால், இம்மாதத்தில் செய்தால், உடனே கிடைக்கும்.
மீனம்
மீன ராசியின் 6 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்லவுள்ளார். இதனால் ஆவணி மாதம் ஒரு வரப்பிரசாதகமாக இருக்கும். நீதிமன்ற வழக்குகளில் தீர்ப்புகள் சாதகமாக வரும். அரசு வேலைக்கு முயற்சித்துக் கொண்டிருந்தால், இம்மாதத்தில் நல்ல செய்தியைப் பெறலாம். பணியிடத்தில் உங்களின் செயல்திறனால் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். ஆனால் பயணங்களை மேற்கொள்ளும் போது கவனமாக இருக்க வேண்டும். முக்கியமாக அதிக கடன் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications











