Latest Updates
-
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்!
ஆடி அமாவாசை நாளில், உங்க ராசிப்படி இந்த பொருட்களை தானம் செய்யுங்க.. பித்ரு தோஷம் நீங்கி, மகிழ்ச்சி பெருகும்..
Aadi Amavasya 2025: தமிழ் மாதங்களில் ஆடி மாதமானது மிகவும் மங்களகரமான மற்றும் சிறப்பான மாதமாக கருதப்படுகிறது. இந்த மாதத்தில் அம்மனுக்கு பல்வேறு பூஜைகளை செய்து மக்கள் வழிபாடு செய்வார்கள். அதோடு இந்த ஆடி மாதத்தில் வரும் அமாவாசை பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுக்க ஏற்றது.
நம்பிக்கைகளின் படி ஆடி மாதத்தில் பித்ருக்கள் பூமிக்கு வருவதாகவும், அந்த மாதத்தில் வரும் அமாவாசை நாளில் அவர்களுக்கு திதி, தர்ப்பணம் மற்றும் சடங்குகளை செய்தால், அவர்களின் ஆத்மா சாந்தியடைந்து, முன்னோர்களின் ஆசியால் வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகள் நீங்கி, மகிழ்ச்சி பெருகும். 2025 ஆம் ஆண்டின் ஆடி அமாவாசை ஜூலை 24 ஆம் தேதி வருகிறது. மேலும் அமாவாசை திதியானது ஜூலை 24 அதிகாலை 2.29-க்கு தொடங்கி, நள்ளிரவு 12.40-க்கு முடிகிறது.

மேலும் இந்த அமாவாசை நாளில் பித்ரு தோஷம் உள்ளவர்கள் ஒருசில பொருட்களை தானம் செய்வதன் மூலம், பித்ரு தோஷத்தை நீக்கலாம். பித்ரு தோஷம் என்பது முன்னோர்கள் இறந்தவுடன் அவர்களுக்கு செய்ய வேண்டிய சடங்குகள் முறையாக செய்யப்படாமல் இருந்தாலோ அல்லது அவர்களின் ஆத்மா சாந்தியடையாமல் இருந்தாலும் அந்த வம்சத்தினருக்கு ஏற்படும் தோஷமாகும்.
அதோடு ஒருவரது ஜாதகத்தில் 5 மற்றும் 9 ஆம் வீடுகளில் பாவ கிரகங்கள் இருந்தால், பித்ரு தோஷம் இருப்பதாக கூறப்படுகிறது. இப்படிப்பட்ட பித்ரு தோஷம் இருந்தால், அது வாழ்க்கையில் பலவிதமான தடைகளை உருவாக்கி, முன்னேற்றத்தைக் காணவிடாமல், நிறைய கஷ்டங்களை சந்திக்க வைக்கும். இந்த பித்ரு தோஷத்தை நீக்க சிறந்த வழிகளுள் ஒன்று தான் தானம் செய்வது.
அதுவும் பித்ரு தோஷத்தில் இருந்து விடுபடவும், வாழ்க்கை மகிழ்ச்சியாகவும் இருக்க ஆடி அமாவாசை நாளில் ஒவ்வொரு ராசிக்காரர்களும் தங்களின் ராசிக்கு ஏற்ற பொருட்களை தானம் செய்தால், வாழ்க்கை செழிக்கும் என்று கூறப்படுகிறது. இப்போது ஆடி அமாவாசை நாளில் எந்த ராசிக்காரர்கள் எந்த பொருட்களை தானம் செய்ய வேண்டும் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் அதிபதி செவ்வாய். இந்த மேஷ ராசியைச் சேர்ந்தவர்கள் ஆடி அமாவாசை நாளில் சிவப்பு நிற ஆடைகளை தானம் செய்வது நல்லது.
ரிஷபம்
ரிஷப ராசியின் அதிபதி சுக்கிரன். இந்த ரிஷப ராசியைச் சேர்ந்தவர்கள் ஆடி அமாவாசை நாளில் வெள்ளை நிற பொருட்கள் அல்லது ஆடைகளை தானம் செய்வது மிகவும் நல்லது.
மிதுனம்
மிதுன ராசியின் அதிபதி புதன். இந்த மிதுன ராசியைச் சேர்ந்தவர்கள் ஆடி அமாவாசை நாளில் பச்சை நிற ஆடைகளை தானம் செய்வது நல்லது.
கடகம்
கடக ராசியின் அதிபதி சந்திரன். இந்த கடக ராசியை சேர்ந்தவர்கள் ஆடி அமாவாசை நாளில் தயிரை தானம் செய்வது நல்லது.
சிம்மம்
சிம்ம ராசியின் அதிபதி சூரியன். இந்த சிம்ம ராசியை சேர்ந்தவர்கள் ஆடி அமாவாசை நாளில் சிவப்பு சந்தனத்தை தானம் செய்வது நல்லது.
கன்னி
கன்னி ராசியின் அதிபதி புதன். இந்த கன்னி ராசியைச் சேர்ந்தவர்கள் ஆடி அமாவாசை நாளில் முழு உளுத்தம் பருப்பை தானம் செய்வது நல்லது.
துலாம்
துலாம் ராசியின் அதிபதி சுக்கிரன். இந்த கன்னி ராசியைச் சேர்ந்தவர்கள் ஆடி அமாவாசை நாளில் அரியை தானம் செய்வது நல்லது.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் அதிபதி செவ்வாய். இந்த விருச்சிக ராசியைச் சேர்ந்தவர்கள் ஆடி அமாவாசை நாளில் வெல்லத்தை தானம் செய்வது நல்லது.
தனுசு
தனுசு ராசியின் அதிபதி குரு பகவான். இந்த தனுசு ராசியைச் சேர்ந்தவர்கள் ஆடி அமாவாசை நாளில் மஞ்சளை தானம் செய்வது நல்லது.
மகரம்
மகர ராசியின் அதிபதி சனி பகவான். இந்த மகர ராசியைச் சேர்ந்தவர்கள் ஆடி அமாவாசை நாளில் கடுகு எண்ணெயை தானம் செய்வது நல்லது.
கும்பம்
கும்ப ராசியின் அதிபதி சனி பகவான். இந்த கும்ப ராசியைச் சேர்ந்தவர்கள் ஆடி அமாவாசை நாளில் கருப்பு உளுந்தை தானம் செய்வது நல்லது.
மீனம்
மீன ராசியை அதிபதி குரு பகவான். இந்த மீன ராசியைச் சேர்ந்தவர்கள் ஆடி அமாவாசை நாளில் மாம்பழங்களை தானம் செய்வது நல்லது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications