Latest Updates
-
1/4 கப் துவரம் பருப்பு இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. தோசை, இட்லிக்கு தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 01 ஜூலை 2026: இன்று இந்த 5 ராசிக்காரங்க நினைச்சதெல்லாம் நடக்கப் போகுதாம் -
July 2026 Monthly Numerology: உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. ஜூலை மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
ஹோட்டல் ஸ்டைல் உருளைக்கிழங்கு வெள்ளை குருமா - இட்லிக்கு இப்படி செய்யுங்க.. ருசி அள்ளும்.. -
கருத்தரிப்பு சிகிச்சைகள் குறித்து பெண்களிடம் இருக்கும் பொதுவான பயங்கள் குறித்து விளக்கும் டாக்டர்! -
இதுல நீங்க என்ன செய்வீங்கன்னு சொல்லுங்க.. உங்களிடம் மறைந்திருக்கும் குணத்தை சொல்றோம்.. -
12 ஆண்டுகளுக்கு பின் நிகழும் குரு-சூரிய சேர்க்கை: ஜூலையில் இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
பருப்பு உருண்டை குழம்பு - சிம்பிளா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
2 வாரம் தொடர்ந்து முட்டை சாப்பிடுவதால் உடலினுள் என்ன நடக்கும்? - விளக்கும் அமெரிக்க டாக்டர்! -
ராகு நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படப்போகுது..
சுவையான கத்திரிக்காய் காரக் குழம்பு

தேவையான பொருட்கள்
கத்திரிக்காய் - ஆறு
சின்ன வெங்காயம்- 100 கிராம்
தக்காளி- இரண்டு
பூண்டு - பத்து பற்கள்
புளி- எலுமிச்சையளவு
மிளகாய்த்தூள்- 4 டீ ஸ்பூன்
தனியாத்தூள்- 2 டீ ஸ்பூன்
மஞ்சத்தூள்- ½ டீ ஸ்பூன்
தேங்காய் துருவல் - 1/2 கப்
நல்லெண்ணெய்- 50 மில்லி
வெந்தயம் – ½ டீ ஸ்பூன்
பெருங்காயம்- 1/2 டீ ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
கறிவேப்பிலை- ஒரு கொத்து
கடுகு தாளிக்க சிறிதளவு
கார குழம்பு செய்முறை
புளியை ஊறவைத்து கெட்டியாக கரைத்து வைக்கவும். தேங்காயை நைசாக அரைத்து வைக்கவும். கத்திரிக்காயை காம்பு பகுதியை வெட்டி விட்டு மொத்தமாக வெட்டவும். முட்டை போல இருக்கும்.
சின்னவெங்காயத்தையும் தக்காளியையும் பொடியாக நறுக்கி வைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தையம், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். அதோடு நறுக்கி வைத்த வெங்காயம், உறித்து வைத்துள்ள வெள்ளைப்பூண்டு போட்டு வதக்கவும், தக்காளியை போட்டு நன்றாக குழைய வதங்கிய உடன் கத்தரிக்காயை போட்டு நன்றாக வதக்கவும். அப்போது உப்பு, மஞ்சள் தூள் தூவி லேசாக பிறட்டவும். இப்படி செய்தால் கத்தரிக்காய் எளிதில் வெந்து விடும்.
இதன் பின்னர் மிளகாய்தூள், மல்லித்தூள் போட்டு வதக்கவும், எண்ணெய் பிரிந்து வரும். அப்போது கரைத்து வைத்த புளியை ஊற்றி கொதிக்க விடவும். பத்து நிமிடம் நன்றாக வேகவிட்ட பின்னர் அரைத்து வைத்த தேங்காயை குழம்பில் ஊற்றி அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து அடுப்பை மிதமாக வைக்கவும். குழம்பு நன்றாக கொதித்து எண்ணெய் மினுமினுப்போடு வரும் போது பெருங்காயத்தூள் தூவி அடுப்பை நிறுத்தி விடவும்.
கத்தரிக்காய் காரக் குழம்பு தயார். சூடான சாப்பாட்டிற்கு சாப்பிட சுவையாக இருக்கும்.



Click it and Unblock the Notifications