Latest Updates
-
ஜூன் 29-ல் வக்ரமாகும் புதன்: இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
2 ஸ்பூன் ஓட்ஸ், 3 முட்டை இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் -
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க... -
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா?
சத்தான காளான் கிரேவி

தேவையான பொருட்கள்
காளான் - 200 கிராம்
வெங்காயம் - 2
தக்காளி -1
இஞ்சி,பூண்டு பேஸ்ட் -1 டீஸ்பூன்
கரம் மசாலா - கால் டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
புதினா,மல்லி - சிறிது
தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
முந்திரி - 3
மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
சீரகத்தூள் - அரை டீஸ்பூன்
மல்லித்தூள் - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு வெங்காயத்தை சிறிதாக நறுக்கி கொள்ளவும். மற்றொரு வெங்காயத்தையும் நறுக்கி, அதனுடன் தக்காளி, தேங்காய், முந்திரி சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும். பிறகு ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி நன்கு கொதிக்க விட்டு, அதில் காளானை போட்டு அலசி, நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெங்காயம், இஞ்சிபூண்டு பேஸ்ட், கரம் மசாலா, புதினா, மல்லி, பச்சைமிளகாய் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். அத்துடன் நறுக்கிய காளான் சேர்த்து வதக்கவும்.
பிறகு அந்த காளானுடன் மல்லித்தூள், சீரகத்தூள், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் ஆகியவற்றைச் சேர்த்துப் பிரட்டவும். பின்னர் சிறிது உப்பு சேர்த்து ஒரு கப் தண்ணீரை விட்டு நன்கு கொதிக்க விடவும்.
நன்கு கொதித்ததும் அரைத்த கலவையைச் சேர்த்து தேவைக்கேற்ற தண்ணீர் ஊற்றி தேங்காய் வாடை போகும் வரை நன்கு கொதிக்கவிடவும்.
இப்போது சுவையான சத்தான காளான் குருமா ரெடி!



Click it and Unblock the Notifications