For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கருவுறுதலில் பிரச்சனையை ஏற்படுத்தும் பி.சி.ஓ.எஸ் பாதிப்பை விரட்டும் 15 உணவுகள்!!!

By Super
|

பி.சி.ஓ.எஸ்(PCOS) என்னும் பல்பையுரு கருப்பை நோய் பெண்களின் உடலில் உள்ள ஹார்மோன்களின் சமநிலை பாதிக்கப்படும் போது உருவாகும். பாலிசிஸ்டிக் ஓவரி சின்ட்ரோம் (Polycystic Ovary Syndrome) என்பதன் சுருக்கமே பி.சி.ஓ.எஸ் ஆகும். அது பெண்களுக்கு மாதவிடாய் வருவதை கடினமாக்கி விடுவதுடன், கர்ப்பமடைவதையும் தடுக்கும் நோயாக உள்ளது. மேலும் உடலமைப்பையும் பருமனாக மாற்றிவிடும் தன்மை இந்த நோய்க்கு உள்ளது. சரியான நேரத்தில், முறையாக இந்த நோயை கவனித்து சிகிச்சை அளிக்காவிட்டால், அது நீரிழிவு மற்றும் மாரடைப்பு போன்ற கடுமையான பின்விளைவுகளை ஏற்படுத்தி விடும் அபாயகரமான நோயாகும்.

இன்றைய பெண்களில் 15-ல் ஒருவரை தாக்கும் அளவிற்கு மோசமான நிலையில் பி.சி.ஓ.எஸ் உள்ளது என்பதிலிருந்தே இதன் அபாயத்தை நாம் உணர முடியும். பொதுவாகவே பெண்களின் கருத்தரிக்கும் வயதில் வரும் பி.சி.ஓ.எஸ் பாதிப்புக்கு இலவங்கப்பட்டை, கோதுமை, பூக்கோசு மற்றும் சிவப்பு முள்ளங்கி என பல்வேறு தீர்வுகள் உள்ளன. பொதுவாகவே நாளமில்லா சுரப்பிகளை தாக்கும் வகையில் வரும் இந்த நோயால் பெண்களுக்கு கருத்தரிப்பதில் பிரச்சனைகள் ஏற்படலாம். இத்தகைய தொந்தரவுகளில் இருந்து தப்பிக்கும் வழிகளை காண மேற்கொண்டு படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ரோமன் கீரைகள் (Romaine Lettuce)

ரோமன் கீரைகள் (Romaine Lettuce)

மிகவும் குறைந்த கலோரிகளை உடைய ரோமன் கீரைகளை, உணவுகளில் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஆனால் ஐஸ்பெர்க் கீரையை சேர்த்து கொள்ள வேண்டாம். ரோமன் கீரை, குறிப்பாக பி.சி.ஓ.எஸ் தாக்கிய பெண்களுக்கு பல்வேறு விதமான ஆரோக்கிய பயன்பாடுகளை அளிக்கிறது. ரோமன் கீரையில் கலோரியின் அளவு குறைந்து காணப்பட்டாலும், அதில் குரோமியம் உள்பட பல்வேறு தாதுப்பொருட்கள் உள்ளன.

முள்ளங்கி கீரை (Turnip Greens)

முள்ளங்கி கீரை (Turnip Greens)

கிழக்குப் பகுதிகளில் சுமார் 4000 ஆண்டுகளுக்கும் முன்னரே பயிரிடப்பட்டு வந்த பழமையான காய்கறி வகை. இவை ப்ராக்கோலி, முட்டை கோசு மற்றும் கோல்லார்ட் (collards) ஆகிய தாவரங்களிலுள்ள ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும் பிராஸ்ஸிகா ஜீனஸ் (Brassica genus) தாவர வகையைச் சேர்ந்ததாகும். முள்ளங்கி கீரை இலைகள் மிகவும் குறைவான கலோரிகளை உடையவை. அவற்றில் வைட்டமின் சி மற்றும் கால்சியம் உட்பட, எடையைக் குறைக்கும் தாதுக்கள் மற்றும் பி.சி.ஓ.எஸ் பிரச்சனையை தடுக்கும் தாதுக்களை கொண்டுள்ளது.

பார்லி (Barley)

பார்லி (Barley)

பி.சி.ஓ.எஸ் தாக்கியுள்ள பெண்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் தானியம் பார்லி. இது மிகவும் குறைவான கலோரியுடன் இருப்பது மட்டுமல்லாமல், பிற தானிய உணவுகளை உண்ட பின் சர்க்கரையின் அளவு வேகமாக உயருவது போலல்லாமல், மிகவும் குறைவான அளவே உயரும் தன்மை கொண்டு, குறைவான கிளைசீமிக் இன்டெக்ஸை (Low Glycemic Index) கொண்டுள்ளது. இதன் காரணமாக உடல் சமநிலை பாதிக்கப்பட்டு, கணையத்தில் அதிக அளவிலான இன்சுலின் உற்பத்தியை தவிர்க்கும்.

இலவங்கப் பட்டை (Cinnamon)

இலவங்கப் பட்டை (Cinnamon)

இன்சுலின், உடல் பருமனை குறைக்க மற்றும் பி.சி.ஓ.எஸ் தாக்கும் போதும், இலவங்கப் பட்டையை உணவில் சேர்த்தால், அதனை தீர்த்து வைக்கும் மிகப்பெரும் சக்தியாக விளங்குகிறது. சுமார் அரை தேக்கரண்டி அளவு இலவங்க பட்டையை தினமும் சேர்த்துக் கொள்வதன் மூலம், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு மற்றும் அதிகமாக பசி எடுத்தல் போன்றவற்றை கட்டுப்படுத்திட முடியும்.

கிரிமினி காளான்கள் (Crimini Mushrooms)

கிரிமினி காளான்கள் (Crimini Mushrooms)

காளான் பிரியர்களுக்கு ஒரு நற்செய்தி. பி.சி.ஓ.எஸ் தாக்கப்பட்டவர்கள் தொடர்ச்சியாக சாப்பிட வேண்டிய ஒரு முக்கியமான உணவாக கிரிமினி காளான்கள் விளங்குகின்றன. கிரிமினி காளான்கள் குறைவான கலோரிகளையுடைய பி வைட்டமின்களை கொண்ட தாவரமாகும். இதிலுள்ள பி2 வைட்டமின், தைராய்டு சுரப்பியின் செயல்பாடுகளை இயற்கையானதாக மாற்றுவதிலும், அதன் வளர்ச்சி மாற்றத்திலும் பெரும் பங்கு வகிக்கிறது. அதன் மூலம் அதீதமான உடல் பருமன் பெருமளவு குறைந்து விடுகிறது.

ப்ராக்கோலி

ப்ராக்கோலி

ப்ராக்கோலியினால் கிடைக்கும் ஆரோக்கிய பயன்பாடுகள் பரவலான மற்றும் பல்வகைப்பட்ட தன்மைகளை கொண்டவையாகும். ப்ராக்கோலியில் புற்றுநோயை எதிர்க்கும் பொருட்கள் இருப்பதை பலரும் அறிந்திருக்கும் வேளையில், அது பி.சி.ஓ.எஸ்யை கடுமையாக எதிர்க்கும் சக்தியையும் கொண்டிருப்பதை அறிந்திருப்பதில்லை! ப்ராக்கோலி மிகவும் குறைவான கலோரி அளவும், ஒரு சதவீதத்திற்கும் குறைவான கொழுப்பும் மற்றும் குறைவான கிளைசீமிக் இன்டெக்ஸையும் பெற்றுள்ள தாவரம். மேலும் இது பால் பொருட்கள் இல்லாமல் கால்சியம் கிடைக்கும் மிகச் சிறந்த தாவரமாகும்.

சால்மன் மீன்

சால்மன் மீன்

டி வைட்டமினை சிறந்த அளவில் கொண்டிருக்கும் சால்மன் மீன்வகை ஒரு மிகச்சிறந்த உணவாகும். குறைந்த அளவு டி வைட்டமின் உடையவர்கள் பி.சி.ஓ.எஸ் தாக்கப்படுவது எளிது. அதனால் மலட்டுத்தன்மை, எடை அதிகரித்தல் மற்றும் இன்சுலின் எதிர்ப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படும். மேலும், சால்மன் மீன்களில் மக்னீசியம், பி 3 வைட்டமின் மற்றும் பி6 வைட்டமின் ஆகியவை உள்ளன. இந்த வைட்டமின்கள் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு, ஹர்மோன்களின் சமநிலை மற்றும் கருவுறுதல் போன்றவற்றை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டவையாகும்.

கோதுமை

கோதுமை

கோதுமை பி.சி.ஓ.எஸ் தாக்கியவர்கள் உட்கொள்ள வேண்டிய முக்கியமான உணவாகும். இது பி6 வைட்டமின் வழங்கும் உணவாகும். சுமார் ஒரு கப் கோதுமையில் ஒரு நாளில் உடலுக்கு வேண்டிய வைட்டமினில் 75% அடங்கியுள்ளது. மேலும் பல பி வைட்டமின்களையும் மற்றும் ஜிங்க்கையும் கொண்டுள்ள உணவாக கோதுமை உள்ளது.

சூரியகாந்தி விதை

சூரியகாந்தி விதை

சூரியகாந்தி செடியின் விதைகளில் அதிக கலோரி அளவுகள் இருந்தாலும், சில விதைகளை தினந்தோறும் உணவில் மெதுவாக சேர்த்துக் கொள்வதால் அதிக ஆரோக்கியம் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை. மேலும், சூரியகாந்தி செடி விதைகளில் பி.சி.ஓ.எஸ் பிரச்சனையை எதிர்க்கும் தாதுக்கள் திணித்து வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் பி 2 (ரிபோஃப்ளேவின்) மற்றும் பி 6 (பைரிடாக்ஸின்) போன்ற தாதுப் பொருட்கள் கலந்துள்ளதால், பி.சி.ஓ.எஸ் பிரச்சனையை எதிர்ப்பதில், அவை முக்கிய பங்காற்றுகின்றன.

கேல் (Kale)

கேல் (Kale)

பரவலான தாதுப்பொருட்களை கொண்டுள்ளதால் கேல் மிகவும் ஆர்வமூட்டக்கூடிய உணவாக உள்ளது. இந்த தாவரத்தில் பல்வேறு வகையான வைட்டமின்கள் மற்றும் கால்சியம் அதிக அளவில் இருக்கிறது. பி.சி.ஓ.எஸ் தாக்கப்பட்டுள்ள பெண்களுக்கு மிகவும் அவசியமான தாதுவாக கால்சியம் இருப்பதால், அது கருமுட்டைகள் முதிர்வடையவும் மற்றும் கருப்பைகளில் உள்ள ஃபோலிக்கிள்களின் வளர்ச்சிக்கும் மிகவும் ஏற்றதாகவும் உள்ளது.

சிக்கன்

சிக்கன்

பி.சி.ஓ.எஸ் பற்றி மிகவும் கவலைப்படுபவர்கள் முக்கியமாக சேர்க்க வேண்டிய உணவாக சிக்கன் உள்ளது. தோல் உரிக்கப்பட்ட சிக்கனில் அபரிமிதமான புரோட்டீன் இருந்தாலும், அதில் மிகக் குறைந்த அளவே கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட் உள்ளன. மேலும் பி3 மற்றும் பி6 ஆகிய பி வைட்டமின்கள் அதிகமாக உள்ள உணவாகவும் இது உள்ளது.

எள்

எள்

பி.சி.ஓ.எஸ் பிரச்சனையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஏற்ற தாதுக்களை கொண்டுள்ளதாக எள் விதைகள் உள்ளன. இந்த சிறிய விதைகளில் வைட்டமின் பி6 அதிகளவில் உள்ளதால், அரை கப் எள்ளினை தினமும் எடுத்துக் கொண்டாலே, தினசரி உடலுக்கு தேவையான வைட்டமின் தேவைகளில் கால் பங்கு கிடைத்துவிடும்.

அதிமதுரம் வேர் (Licorice Root)

அதிமதுரம் வேர் (Licorice Root)

அதிமதுர வேரில் உள்ள கிளைசிர்ஹிசின், பிளாஸ்மா டெஸ்டோஸ்டெரோன்களை குறைப்பதில் முக்கிய பங்கு வகிப்பதால், அது பி.சி.ஓ.எஸ் பாதிக்கப்பட்டுள்ள பெண்களுக்கு மிகவும் எற்றதாகும். இது டெஸ்டோஸ்டிரான், அரிப்புகள் மற்றும் ஹிர்சுடிசம் (Hirsutism) ஆகியவற்றின் அளவுகள் அதிகரித்து கஷ்டப்படும் பெண்களுக்கு அதிமதுரம் வேர் மிகவும் ஏற்ற மருந்தாகும்.

கசகசா

கசகசா

கசகசா விருப்பமான உணவில் இருக்க வேண்டும். இந்த சிறு விதைகளில் உள்ள சத்துப் பொருட்கள் பி.சி.ஓ.எஸ் நோயை தீர்ப்பது உட்பட, பல்வேறு வகையான ஆரோக்கிய பயன்களை தருவதாக உள்ளன. சிறிய அளவில் இருந்தாலும் கால்சியம், மக்னீசியம், பி வைட்டமின்கள் மற்றும் ஜிங்க் ஆகியவை பெருமளவில் உள்ள கசகசா, பி.சி.ஓ.எஸ் பிரச்சனையைத் தடுப்பதிலும் மற்றும் சிகிச்சையிலும் முக்கிய பங்காற்றுகின்றன.

சூரை மீன்கள் (Tuna)

சூரை மீன்கள் (Tuna)

அதிக எடையுள்ள மற்றும் பி.சி.ஓ.எஸ்-ஆல் போராடும் பெண்கள், உணவில் மகிழ்ச்சியுடன் சேர்த்துக் கொள்ள வேண்டிய உணவாக சூரை மீன்கள் உள்ளன. ஒவ்வொரு கேனிலுள்ள தண்ணீரிலும் உள்ள சூரை மீன்களில் 33 கிராம் புரோட்டீன் உள்ளது. மேலும், இதில் கொழுப்பு அல்லது கார்போஹைட்ரேட்கள் இல்லை. கொழுப்பு அல்லது கார்போஹைட்ரேட்களுடன் ஒப்பிடும் போது, புரோட்டீன் 20 முதல் 30% தெர்மோஜெனிக் விளைவினை ஏற்படுத்தக் கூடியதாகும். அதாவது, புரோட்டீன் மிகுந்த உணவான சூரை போன்ற மீன்களை உணவில் சேர்த்துக் கொள்ளும் போது, அது எளிதில் உணவினை செரிமானம் செய்ய உதவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

15 Foods That Fight PCOS

There are numerous food remedies for PCOS, ranging from cinnamon and wheat germ to broccoli and turnip greens.
Desktop Bottom Promotion