For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சிகரட் பழக்கத்தை நிறுத்திய பிறகு நீங்கள் மறக்காமல் செய்ய வேண்டிய 7 விஷயங்கள்!

|

புகை உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும். இதை எத்தனை முறை படத்திற்கு முன்பு போட்டுக் காட்டினாலும், சிகரட் பெட்டியில் புற்றுநோய் உண்டாக்கும் என படம் போட்டு ஓட்டினாலும் திருந்தும் எண்ணம் இருந்தால் தான் திருந்த முடியும்.

சிகரெட்டை நிறுத்த நீங்க ரெடியா? அப்ப அதுக்கு டிப்ஸ் கொடுக்க நாங்களும் ரெடி!

சிலர் ஓரிரு வாரம் வரை தாக்குபிடித்துவிட்டு மீண்டும் புகைக்க துவங்கிவிடுவார்கள். இதற்கு காரணம் கட்டுப்பாடு இல்லாதது மட்டுமில்லை, சிகரட்டை விட்டாலும், புகை பற்றிய சில விஷயங்கள் நம்முடனேயே ஒட்டிக் கொண்டிருக்கும். அது அவ்வப்போது மீண்டும் சிகரட்டை முத்தமிடு என தூண்டிக் கொண்டே இருக்கும்.

முதலில் அதை விரட்டி அடித்தால், நீங்கள் முழுமையாக புகையை விட்டொழித்துவிடலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 டிப்ஸ் #1

டிப்ஸ் #1

ஜாக்கிங் பயிற்சி, இதனால் உங்கள் உடலில் இருந்து என்டோர்பின் சிறப்பாக சுரக்க செய்கிறது. இது உடலில் உள்ள நச்சுக்களை போக்கவல்லது. மேலும், உடலின் சுறுசுறுப்பை அதிகரிக்க பயனளிக்கிறது.

 டிப்ஸ் #2

டிப்ஸ் #2

காய்கறி ஜூஸ்! ஆம், நார்ச்சத்து அதிகமான உணவுகளை நீங்கள் அதிகமாக உட்கொள்ள வேண்டும். இது, உடல் ஆரோக்கியத்தை மேலோங்க உதவும். மேலும், உடலுக்கு பின்னாளில் எந்த பிரச்சனையும் உண்டாகாமல் இருக்க உதவும்.

 டிப்ஸ் #3

டிப்ஸ் #3

கேரட் ஜூஸ்! புகையை நிறுத்திய பிறகு தினமும் காலை கேரட் ஜூஸ் குடிப்பதை பழக்கமாக வைத்துக் கொள்ளுங்கள். இது, உடலை சுத்தமாக வைத்துக்கொள்ள உதவும். எலுமிச்சை கூட நல்ல பயன் தரக் கூடியது.

 டிப்ஸ் #4

டிப்ஸ் #4

தண்ணீர்! புகையை நிறுத்திய பிறகு நீங்கள் செய்ய வேண்டிய முதல் வேளை. கையில் எப்போதும் ஓர் பாட்டில் நீர் வைத்துக் கொள்வது. சீராக நீர் பருகிக் கொண்டே இருப்பது, உடலில் இருக்கும் நச்சுக்களை விரைவாக போக்க உதவும்.

 டிப்ஸ் #5

டிப்ஸ் #5

புகைக்காமல், வாய் நமநமக்கிறது எனில், மின்ட் ஃப்ளேவர் சூயிங்கம் மெல்வது நல்லது. ஒருவேளை நீங்கள் புகைத்த பிறகு சூயிங்கம் மெல்லும் நபராக இருந்தால், இதை தவிர்த்துவிடுங்கள். ஏனெனில், இது மீண்டும் நீங்கள் சிகரட்டை பற்றி நினைவூட்டும்.

 டிப்ஸ் #6

டிப்ஸ் #6

பற்கள்! முதலில் உங்கள் பற்களை சுத்தம் செய்ய வேண்டும். புகைத்து, புகைத்து உங்கள் பற்களில் கறைகள் அண்டியிருக்கும். அதை முதலில் டென்டிஸ்ட் இடம் சென்று சுத்தம் செய்யுங்கள்.

 டிப்ஸ் #7

டிப்ஸ் #7

துணிகளை மொத்தமாக ஒருமுறை துவைக்கலாம். கண்டிப்பாக புகைக்கும் நபர்களின் உடையில் எப்போதுமே அந்த சிகரட் வாடை இருக்கும். முதலில் இந்த வாடை போகும் அளவிற்கு துணியை துவைத்து வையுங்கள். இல்லையேல், இந்த வாசனையே மீண்டும் உங்களை புகைக்க தூண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Things To Do When You Quit Smoking

Things To Do When You Quit Smoking, read here in tamil.
Desktop Bottom Promotion