For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மலச்சிக்கல் குறித்த கட்டுக் கதைகளும்... உண்மைகளும்...

By Karthikeyan Manickam
|

ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் மலச்சிக்கல் என்பது எப்போதாவது வந்து போகக் கூடிய ஒரு குறைபாடு தான். சரியாக சாப்பிடாமல் இருந்தாலோ, குறைவாக சாப்பிட்டாலோ அல்லது சரியான உணவை சாப்பிடாமல் இருந்தாலோ மலச்சிக்கல் தோன்றும்.

மலச்சிக்கல் வருவதற்கு வேறு சில மருத்துவ ரீதியிலான காரணங்கள் இருந்தாலும், சிலர் இது குறித்த கட்டுக் கதைகளைப் புரிந்தும் புரியாமலும் பரப்பி வருகின்றனர். மலச்சிக்கல் குறித்த அப்படிப்பட்ட கட்டுக் கதைகள் குறித்தும், அது பற்றிய உண்மைகள் குறித்தும் இப்போது நாம் பார்க்கலாம்.

மலச்சிக்கலை உண்டாக்கும் 7 உணவுகள்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கட்டுக் கதை 1: ஒவ்வொரு நாளும் மலம் வெளியேற வேண்டும்.

கட்டுக் கதை 1: ஒவ்வொரு நாளும் மலம் வெளியேற வேண்டும்.

இது ஒவ்வொருவருக்கும் மாறுபடும். சிலருக்கு ஒரே நாளில் 3 முறை மலம் வெளியேறும். இன்னும் சிலருக்கோ வாரத்திற்கு 3 முறை தான் ஒழுங்காகப் 'போகும்'. தினமும் மலம் வெளியேறுவது பொதுவானது தான், ஆனால் கட்டாயமில்லை. ஆனால் ஒரு வாரத்திற்கு 3 முறைக்கும் குறைவாக வெளியேறினால், அது கண்டிப்பாக மலச்சிக்கல் தான்!

கட்டுக் கதை 2: மலச்சிக்கலால் உடல் நலம் பாதிக்கப்படும்.

கட்டுக் கதை 2: மலச்சிக்கலால் உடல் நலம் பாதிக்கப்படும்.

ஆஸ்துமா உள்ளிட்ட சில உடல் நலக் குறைகள் மட்டுமல்ல, மலச்சிக்கலால் உடலில் நச்சுப் பொருட்கள் உருவாகும் என்றும் சிலர் கூறுவதுண்டு. இது ஒரு கட்டுக் கதையே! இதற்கான ஒரு ஆதாரமும் கிடையாது.

கட்டுக் கதை 3: நார்ச்சத்து குறைவால் தான் மலச்சிக்கல் வரும்.

கட்டுக் கதை 3: நார்ச்சத்து குறைவால் தான் மலச்சிக்கல் வரும்.

இது முற்றிலும் உண்மையல்ல. நார்ச்சத்து அதிகமுள்ள உணவுகளைச் சேர்த்துக் கொள்வதால் அது மலச்சிக்கலை ஓரளவு தான் குறைக்கிறது. ஆனால் நாள்பட்ட மலச்சிக்கலுக்கு இது காரணமாக இருக்க முடியாது. பார்க்கின்சன் என்ற நரம்புத் தளர்ச்சி வியாதி அல்லது மாரடைப்பு உள்ளிட்ட நோய்களின் விளைவாகவும் மலச்சிக்கல் ஏற்படும். நார்ச்சத்து அதிகமுள்ள உணவு வகைகளைச் உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம். குறைந்தது ஒரு நாளைக்கு 20 கிராம் நார்ச்சத்துள்ள உணவாவது உட்கொள்ள வேண்டும்.

கட்டுக் கதை 4: மலம் கழிப்பதை அடக்குவதால் ஒன்றும் ஆகாது.

கட்டுக் கதை 4: மலம் கழிப்பதை அடக்குவதால் ஒன்றும் ஆகாது.

சில சமயம் நாம் வேலை செய்து கொண்டிருக்கும் போது அல்லது வண்டியில் வந்து கொண்டிருக்கும் போது, வயிறு கலக்கிக் கொண்டிருக்கும். கொஞ்சம் அடக்கிக் கொண்டு தான் ஆக வேண்டும் என்ற சூழ்நிலை இருந்தாலும், அது மலச்சிக்கலுக்கு வழிவகுத்துவிடும். முடிந்த வரை அடக்காமல் இருப்பதே நல்லது!

உண்மை 1: மலச்சிக்கலுக்கு பால் பொருட்கள் காரணமாகும்.

உண்மை 1: மலச்சிக்கலுக்கு பால் பொருட்கள் காரணமாகும்.

ஆம். சிலருக்குப் பால் பொருள்களே மலச்சிக்கல் வர முக்கியக் காரணமாக இருந்து விடுகின்றன. லாக்டோஸ் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் பால் பொருட்களைச் சாப்பிடுவதால் மலச்சிக்கல் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.

உண்மை 2: சூயிங் கம்மை விழுங்கினால் மலச்சிக்கல் வரும்.

உண்மை 2: சூயிங் கம்மை விழுங்கினால் மலச்சிக்கல் வரும்.

இது உண்மையே! பல குழந்தைகள் சாக்லெட்டைத் தின்று விழுங்குவதைப் போல் சூயிங் கம்மையும் மென்று விழுங்கி விடுவார்கள். சில சமயம் இது செரிமானப் பகுதிகளில் கரைந்து விட்டாலும், பல சமயங்களில் அது செரிமானப் பகுதியையே ப்ளாக் செய்துவிடும். இதனால் மலச்சிக்கல் ஏற்படும்.

உண்மை 3: நீண்ட பயணங்களினால் மலச்சிக்கல் ஏற்படும்.

உண்மை 3: நீண்ட பயணங்களினால் மலச்சிக்கல் ஏற்படும்.

உண்மை தான். நீண்ட தூர பயணங்களின் போது, சரியான நேரத்தில் சாப்பிடாமலும், சரியான உணவை உண்ணாமலும் இருப்பதால் மலச்சிக்கல் ஏற்படும் வாய்ப்புள்ளது. இந்தச் சமயங்களில் சின்னச் சின்ன உடற்பயிற்சிகள் செய்வது, அடிக்கடி பழங்கள் மற்றும் காய்கறிகள் சாப்பிடுவது, 'குடி'யைக் குறைத்துக் கொள்வது ஆகியவை மலச்சிக்கலைத் தீர்க்கும்.

உண்மை 4: மன அழுத்தம் சில சமயம் மலச்சிக்கலை ஏற்படுத்தும்.

உண்மை 4: மன அழுத்தம் சில சமயம் மலச்சிக்கலை ஏற்படுத்தும்.

மன அழுத்தம் சில சமயங்களில் உண்மையிலேயே மோசமான மலச்சிக்கலை ஏற்படுத்தி விடுகிறது. யோகா, தியானம், அக்குபிரஸ்ஸர், வயிற்றை மசாஜ் செய்வது உள்ளிட்டவை இந்தச் சிக்கலுக்கு உதவும்.

உண்மை 5: சில மருந்துகள் மலச்சிக்கலை உருவாக்கும்.

உண்மை 5: சில மருந்துகள் மலச்சிக்கலை உருவாக்கும்.

ஆம், சில சமயம் மன அழுத்தம், இரத்த அழுத்தம், பார்க்கின்சன் நோய் மற்றும் வலி ஆகியவற்றிற்காக நாம் உட்கொள்ளும் மருந்துப் பொருட்கள் கூட மலச் சிக்கலை ஏற்படுத்திவிடும். கால்சியம் மற்றும் இரும்புச்சத்து அதிகமாக இருப்பதும் மலச்சிக்கலுக்கு வழிவகுக்கும்.

உண்மை 6: மலச்சிக்கலை நீக்க உலர்ந்த ப்ளம்ஸ் உதவும்.

உண்மை 6: மலச்சிக்கலை நீக்க உலர்ந்த ப்ளம்ஸ் உதவும்.

உலர்ந்த ப்ளம்ஸ் மலச்சிக்கலை நீக்க பெரிதும் உதவுகிறது. இதில் உள்ள நார்ச்சத்து கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தவும் செய்கிறது. குழந்தைகள் இதைச் சாப்பிட மறுத்தால், ஜூஸாக செய்து கொடுக்கலாம்.

இதுப்போன்று சுவாரஸ்யமான மற்றும் பயனுள்ள பல தகவல்களைப் பெற எங்கள் ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்து தொடர்பில் இருங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Myths and Facts About Constipation

Constipation, the most common digestive complaint in the indian population, can make life miserable.Let's look at some chronic constipation myths and then identify the truths.
Desktop Bottom Promotion