For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முட்டை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்!

By Maha
|

உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த எத்தனை உணவுப் பொருட்கள் இருந்தாலும், முட்டைக்கு இணையாது எதுவும் வர முடியாது. ஏனெனில் முட்டையில் அந்த அளவில் சத்துக்களானது நிறைந்துள்ளது. இத்தகைய சத்துக்களால் அவை உடலின் பல்வேறு பிரச்சனைகளில் இருந்து பாதுகாப்பு தருகிறது. குறிப்பாக முட்டையில் புரோட்டீன்கள், வைட்டமின்கள், அமினோ ஆசிட்டுகள், ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்டுகள் போன்றவை நிறைந்துள்ளது. அதுமட்டுமின்றி மற்ற உணவுப் பொருட்களில் இல்லாத கோலைன் என்ற சிறப்பான பொருள் முட்டையில் அடங்கியுள்ளது.

வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!!

எனவே முட்டையை தினமும் ஒன்று அல்லது இரண்டு சாப்பிட்டு வருவது மிகவும் நல்லது. அதிலும் முட்டையை வேக வைத்து சாப்பிடுவது இன்னும் சிறப்பானது. முக்கியமாக வளரும் குழந்தைகளுக்கு தினமும் ஒரு முட்டையை காலை வேளையில் சாப்பிடக் கொடுத்தால், அவர்களின் வளர்ச்சி சீராகவும், ஆரோக்கியமானதாகவும் இருக்கும்.

இங்கு முட்டையை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அந்த நன்மைகளைப் படித்து, இன்றிலிருந்து தினமும் ஒரு முட்டையை சாப்பிட்டு வாருங்கள்.

அன்றாட உணவில் தக்காளியை சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இரத்த கொலஸ்ட்ராலை அதிகரிக்காது

இரத்த கொலஸ்ட்ராலை அதிகரிக்காது

முட்டையில் எவ்வளவு தான் கொலஸ்ட்ரால் இருந்தாலும், அவை இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவை அதிகரிக்காது. பொதுவாக கொலஸ்ட்ரால் உள்ள பொருட்களை டயட்டில் சேர்த்து, இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் என்று சொல்வது தவறு. ஏனெனில் சாதாரணமாக நம் உடலில் உள்ள கல்லீரலானது அன்றாடம் கொலஸ்ட்ராலை அதிக அளவி உற்பத்தி செய்யும். எப்போது கொலஸ்ட்ரால் நிறைந்த முட்டையை அதிகம் எடுத்து வருகிறோமோ, அப்போது கல்லீரலானது கொலஸ்ட்ரால் உற்பத்தியை குறைத்துவிடும். இதனால் இரத்தத்தில் கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிக்காமல் இருக்கும்.

எடையை பராமரிக்கும்

எடையை பராமரிக்கும்

முட்டையில் எவ்வளவு தான் கொலஸ்ட்ரால் இருந்தாலும், அவை உடல் எடை அதிகரிப்பதை தடுத்து, எடையைப் பராமரிக்கும்.

கண் ஆரோக்கியம்

கண் ஆரோக்கியம்

முட்டையின் மஞ்சள் கருவில் லூடீன் மற்றும் ஜியாசாந்தின் என்னும் ஆன்டி-ஆக்ஸிடண்ட்டுகள் வளமாக நிறைந்திருப்பதால், அவை கருவிழியை பாதுகாத்து, கண்களில் பிரச்சனைகள் ஏற்படாமல் பாதுகாக்கும்.

உடல் கட்டமைப்பு

உடல் கட்டமைப்பு

உடல் நல்ல கட்டமைப்புடன் இருக்க வேண்டுமானால் தினமும் முட்டையை சாப்பிட்டு வாருங்கள்.

ஆரோக்கியமான இதயம்

ஆரோக்கியமான இதயம்

கொலஸ்ட்ரால் அதிகம் நிறைந்துள்ள உணவுப் பொருட்களை உட்கொண்டால், அவை இதய நோய்க்கு வழிவகுக்கும். எனவே நிறைய மக்கள் முட்டையின் மஞ்சள் கருவை சாப்பிடமாட்டார்கள். ஆனால் முட்டையில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலானது, இதய நோய்க்கு வழிவகுக்காது என்று ஆய்வுகள் கூறுகின்றன.

பாலுணர்ச்சியை அதிகரிக்கும்

பாலுணர்ச்சியை அதிகரிக்கும்

நிச்சயம் இந்த விஷயம் யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் உண்மையிலேயே முட்டையை சாப்பிட்டால், பாலுணர்ச்சியனது அதிகரிக்கும்.

ஆரோக்கியமான மூளை

ஆரோக்கியமான மூளை

முட்டை சாப்பிட்டால் மூளையானது மிகவும் ஆரோக்கியமாகவும், அதன் ஆற்றலும் அதிகரிக்கும்.

புற்றுநோய்

புற்றுநோய்

முட்டையை தவறாமல் தினமும் சாப்பிட்டு வந்தால், புற்றுநோய் வரும் ஆபத்தானது குறையும்.

கர்ப்பிணிகளுக்கு...

கர்ப்பிணிகளுக்கு...

பெண்கள் கர்ப்ப காலத்தில் தினமும் ஒரு முட்டையை நன்கு வேக வைத்து சாப்பிட்டால், வயிற்றில் வளரும் குழந்தைக்கு வேண்டிய சத்தானது கிடைத்து, ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்கலாம்.

வலிமையான எலும்புகள்

வலிமையான எலும்புகள்

முட்டையை அன்றாடம் உட்கொண்டு வந்தால், எலும்புகளானது வலிமையுடன் இருக்கும்.

கோலைன்

கோலைன்

எதிலும் கிடைக்காத கோலைன் என்னும் இன்றியமையாத சத்தானது, முட்டையில் தான் அதிக அளவில் நிறைந்துள்ளது. இந்த கோலைனானது செல் மென்படலங்களின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது மற்றும் மூளையில் சமிக்ஞை மூலக்கூறுகளை உற்பத்தி செய்து, மற்ற செயல்பாடுகளை சீராக செயல்பட மிகவும் இன்றியமையாதது.

நல்ல கொலஸ்ட்ரால் கொண்டது

நல்ல கொலஸ்ட்ரால் கொண்டது

முட்டையில் நல்ல கொலஸ்ட்ரால் வளமாக இருப்பதால், இதனை உட்கொண்டால் இதய நோய், பக்கவாதம் மற்றும் இதர ஆரோக்கிய பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம். அதிலும் ஒரு நாளைக்கு தவறாமல் 2 முட்டையை எடுத்து வருவது இன்னும் சிறந்தது.

ஆரோக்கியமான முடி மற்றும் நகம்

ஆரோக்கியமான முடி மற்றும் நகம்

தினமும் முட்டையை சாப்பிட்டு வந்தால், நகம் மற்றும் முடியானது ஆரோக்கியமாக இருக்கும்.

இதுப்போன்று சுவாரஸ்யமான மற்றும் பயனுள்ள பல தகவல்களைப் பெற எங்கள் ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்து தொடர்பில் இருங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Health Benefits Of Eggs

Eggs are loaded with nutrients, some of which are rare in the modern diet. Here are some health benefits of eggs that have been confirmed in human studies.
Desktop Bottom Promotion