For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முட்டைகோஸ் சாப்பிடுவதால் ஏற்படும் 10 நன்மைகள்!!!

By Maha
|

பச்சை இலைக்காய்கறிகளில் ஒன்றான முட்டைகோஸின் நன்மைகள் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் உண்மையில் முட்டைகோஸில் அளவுக்கு அதிகமான நன்மைகள் நிறைந்துள்ளன. மேலும் முட்டைகோஸில் நிறைய வெரைட்டிகள் உள்ளன. அவை வெள்ளை, சிவப்பு, பச்சை மற்றும் ஊதா போன்றவை. இவை அனைத்திலும் நல்ல அளவில் சத்துக்கள் அடங்கியுள்ளன.

அதுவும் பல்வேறு பைட்டோ நியூட்ரியண்டுகள் மற்றும் வைட்டமின்களான ஏ, சி மற்றும் கே போன்றவை. இவை அனைத்தும் உடலில் ஏற்படும் பிரச்சனைகளான புற்றுநோய், இதய நோய் போன்றவை ஏற்படுவதை தடுக்கும். மேலும் இதில் உள்ள நார்ச்சத்து, செரிமான பிரச்சனை, மலச்சிக்கல் போன்றவற்றை குணப்படுத்தும்.

குறிப்பாக முட்டைகோஸை சாப்பிடும் போது, அதனை அளவுக்கு அதிகமாக வேக வைத்து சாப்பிட கூடாது. இல்லாவிட்டால், அதில் உள்ள சத்துக்கள் அனைத்தும் வெளியேறிவிடும். எனவே எப்போது இதனை சாப்பிட்டாலும் அளவாக வேக வைத்து சாப்பிடுவது நல்லது. சொல்லப்போனால், அதனை பச்சையாக சாப்பிடுவதே சிறந்தது. சரி, இப்போது முட்டைகோஸ் சாப்பிட்டால் ஏற்படும் நன்மைகள் என்னவென்று பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
புற்றுநோய்

புற்றுநோய்

முட்டைகோஸில் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் பொருட்களை நிறைய உள்ளன. எனவே இதனை சாப்பிட்டால், புற்றுநோயை ஏற்படுத்தும் செல்கள் வளர்வதை முற்றிலும் தடுக்கும். மேலும் ஆய்வு ஒன்றிலும், முட்டைகோஸ் சாப்பிட்டால், புற்றுநோய் வளர்வதை தடுக்கலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது.

அல்சர்

அல்சர்

அல்சரால் அவதிப்படுபவர்கள், முட்டைக்கோஸை ஜூஸ் போட்டு சாப்பிட்டு வந்தால், அல்சரை விரைவில் குணப்படுத்தலாம். ஏனெனில் இதில் அல்சரை குணப்படுத்தும், குளுட்டமைல் அதிக அளவில் நிறைந்துள்ளது.

நோயழற்சி பொருள்

நோயழற்சி பொருள்

உடலில் அழற்சி அல்லது உட்காயங்களால் பாதிக்கப்பட்டவர்கள் முட்டைகோஸை சாப்பிட்டால், அதில் உள்ள அமினோ ஆசிட் குளுட்டமைன், அவைகளை குணப்படுத்த பெரிதும் உதவியாக இருக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தி

நோய் எதிர்ப்பு சக்தி

இதில் உள்ள அதிகப்படியான வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தி, உடலை நோய்கள் தாக்காதவாறு பாதுகாக்கும்.

கண்புரை

கண்புரை

முட்டைகோஸில் பீட்டா-கரோட்டீன் அதிக அளவில் இருப்பதால், அது கண்புரையை தடுக்கிறது.

எடை குறைவு

எடை குறைவு

எடையை குறைக்க நினைப்போர், தினமும் ஒரு கப் வேக வைத்த முட்டைகோஸ் அல்லது முட்டைகோஸ் சூப் சாப்பிட்டால், உடல் எடையை ஆரோக்கியமான முறையில் குறைக்கலாம்.

அல்சைமர் நோய்

அல்சைமர் நோய்

தற்போது மேற்கொண்ட ஆய்வு ஒன்றில் சிவப்பு நிற முட்டைகோஸ் சாப்பிட்டால், அல்சைமர் நோயை தடுக்கலாம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, இதில் உள்ள வைட்டமின் கே மற்றும் ஆந்தோசையனின் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்டுகள், மூளையில் ஏற்படும் பிளேக்கை குறைக்கும்.

மலச்சிக்கல்

மலச்சிக்கல்

முட்டைகோஸில் உள்ள அதிகமான நார்ச்சத்து, செரிமான மண்டலத்தை சீராக இயக்கி, மலச்சிக்கல் பிரச்சனையை குணமாக்கும்.

சருமம்

சருமம்

முட்டைகோஸில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், சருமத்தை பொலிவோடு வைத்துக் கொள்ள உதவியாக இருக்கும்.

தசைப் பிடிப்புகள்

தசைப் பிடிப்புகள்

முட்டைகோஸில் உள்ள லாக்டிக் அமிலம், தசைகளில் ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து சிறந்த நிவாரணம் தரும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

10 Health Benefits Of Cabbage | முட்டைகோஸ் சாப்பிடுவதால் ஏற்படும் 10 நன்மைகள்!!!

Apart from being used in variety of dishes, Cabbage is also provides many health benefits. Some positive health benefits of cabbage are as given below.
Story first published: Saturday, May 25, 2013, 18:04 [IST]
Desktop Bottom Promotion