For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மனதை ரிலாக்ஸா வெச்சுக்க, இந்த மசாஜ்களை செய்யுங்க...

By Maha
|

அமைதியாக இருந்து ஆளை கொல்வதில் மன அழுத்தம் முதன்மையானது. தற்போதைய அவரச உலகில் அனைவருக்கும் மன அழுத்தமானது அழையா விருந்தாளியாக வருகிறது. அதிலும் அதிகப்படியான வேலைப்பளு, வேகமான வாழ்க்கை மற்றும் உறவுகளில் பிரச்சனை போன்றவற்றால் மன அழுத்தமானது அதிகரிக்கிறது. இத்தகைய மன அழுத்தத்தை சரியாக கவனித்து, அதனை குறைப்பதற்கான முயற்சியில் ஈடுபடாவிட்டால், உடல் நிலையானது இன்னும் மோசமாகிவிடும். குறிப்பாக இரத்த அழுத்தம், நீரிழிவு, இதய நோய் போன்றவை சீக்கிரமே வந்துவிடும். ஆகவே இத்தகைய மன அழுத்தத்தைக் குறைப்பதற்கு ஒருசிறந்த நிவாரணி மசாஜ் தான்.

மசாஜ்களில் நிறைய வகைகள் உள்ளன. மேலும் ஒவ்வொரு இடத்திலும் மசாஜானது வித்தியாசப்படும். பொதுவாக அனைத்து வகையான மசாஜ்களும் மன அழுத்தத்தைப் போக்கக்கூடியவை. இந்தியாவில் ஆயுர்வேத மசாஜ் மிகவும் பிரபலமானது. அதே சமயம் தாய்லாந்திலிருந்து வந்த தாய் மசாஜூம் பிரபலமானதாகும்.

ஆகவே மன அழுத்தத்தில் இருந்து விடுபட நினைத்தால், ஒருசில மசாஜ்களை பின்பற்றி வர வேண்டும். மேலும் மன அழுத்தத்தைப் போக்க செய்யப்படும் ஒவ்வொரு மசாஜூம் ஒவ்வொரு விதமான நன்மைகளை கொண்டுள்ளது. இத்தகைய மசாஜ்களை தொடர்ந்து செய்து வந்தால், மன அழுத்தம் குறைவதோடு, உடல் வலியின்றி உடலும் ரிலாக்ஸாக இருக்கும். இப்போது மன அழுத்தத்தைப் போக்கக்கூடிய சில சிறந்த மசாஜ்களை பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் படித்து தெரிந்து கொண்டு, முயற்சித்துப் பாருங்களேன்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தாய் மசாஜ் (Thai Massage)

தாய் மசாஜ் (Thai Massage)

தாய் மசாஜானது தாய்லாந்தின் பண்டைய உடலின் நடுக்கோட்டின் அமைப்பை அடிப்படையாகக் கொண்டு செய்யப்படும் ஒரு மசாஜ் ஆகும். இந்த மசாஜின் போது உடலின் நடுக்கோட்டில் அமைந்துள்ள அனைத்து எனர்ஜிகளையும் சீராக உடல் முழுவதும் பரவச் செய்து, மன அழுத்தத்தைப் போக்கும் தன்மையுடையது.

ஆயுர்வேத மசாஜ் (Ayurvedic Massage)

ஆயுர்வேத மசாஜ் (Ayurvedic Massage)

ஆயுர்வேத மசாஜில் மூலிகைகளும், இயற்கை எண்ணெய்களையும் பயன்படுத்தி மசாஜ் செய்யப்படும். மேலும் இதில் கையளவு வேக வைத்த அரிசியை, மஸ்லின் துணியில் போட்டு கட்டி, அதனை இயற்கை எண்ணெயில் நனைத்து உடல் முழுவதும் மசாஜ் செய்யப்படும். இதை செய்யும் போது உடலின் நரம்புகள் அனைத்து நன்கு சீராக இயங்கி, உடலை ரிலாக்ஸ் அடையச் செய்யும்.

அக்குபிரஷர் மசாஜ் (Acupressure Massage)

அக்குபிரஷர் மசாஜ் (Acupressure Massage)

அக்குபிரஷர் என்பது உடலின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் அழுத்தத்தைக் கொடுத்து நிவாரணம் அளிக்கும் முறையை அடிப்படியாக கொண்டது. இந்த மசாஜை கைகளாலோ அல்லது அதற்கான ஒரு கருவி மூலமாகவோ செய்யலாம்.

ஸ்வீடிஸ் மசாஜ் (Swedish Massage)

ஸ்வீடிஸ் மசாஜ் (Swedish Massage)

ஸ்வீடிஸ் மசாஜிலும் பல்வேறு வகையான இயற்கை எண்ணெய்கள் பயன்படுத்தப்பட்டு, ஒருசில டெக்னிக்கில் மசாஜ் செய்யப்படுவதால், மன அழுத்தத்திற்கு நல்ல நிவாரணம் கொடுக்கும்.

அரோமாதெரபி மசாஜ் (Aromatherapy Massage)

அரோமாதெரபி மசாஜ் (Aromatherapy Massage)

அரோமாதெரபி என்பது வெறும் மசாஜ் மட்டுமல்ல, இது மன அழுத்தத்தைப் போக்கும் ஒரு முறை எனலாம். இதில் பயன்படுத்தப்படும் நறுமண எண்ணெய் மற்றும் மெழுகுவர்த்திகள், அனைத்து உணர்வுகளையும் தூண்டி, மசாஜின் இறுதியில் உடலுக்கும், மனதிற்கும் ஒருவித புத்துணர்ச்சியைத் தரும்.

பாலி மசாஜ் (Bali Massage)

பாலி மசாஜ் (Bali Massage)

பாலி தீவு அதன் வளமான பண்பாடு மற்றும் பாரம்பரியத்தைக் கொண்டிருக்கிறது. அதற்கேற்ப இந்த பாலி மசாஜ் முறையானது, இந்தியா மற்றும் சீனாவை ஒருங்கிணைத்து காட்டும் விதத்தில், மசாஜ் செயல்முறையை கொண்டுள்ளதால், இந்த மசாஜை மேற்கொள்ள உடல் அலுப்பு நீங்கி, சக்தியானது அதிகரிக்கும்.

லோமி லோமி மசாஜ் (Lomi Lomi Massage )

லோமி லோமி மசாஜ் (Lomi Lomi Massage )

இது ஹவாய் தீவுகளில் இருந்து வந்த ஒரு ஸ்பெஷல் மசாஜ். இந்த மசாஜ் முறையில் எண்ணெய் பயன்படுத்தாமல், வெறும் கையிலேயே உடலை பிடித்து விடும் ஒரு முறை. எனவே மனதை ரிலாக்ஸ் செய்ய ஆசைப்பட்டால், விடுமுறை நாட்களில் ஹவாய் தீவிற்கு சென்று, இந்த முறையை செய்து கொள்ளலாம். இல்லையெனில் இதனை அழகாக வீட்டிலேயே செய்யலாம்.

ஹாட் ஸ்டோன் மசாஜ் (Hot Stone Massage)

ஹாட் ஸ்டோன் மசாஜ் (Hot Stone Massage)

ஹாட் ஸ்டோன் மசாஜ் என்பது இளஞ்சூட்டில் உள்ள ஒருவகையான எரிமலைக் கல்லைக் கொண்டு, உடலின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் அழுத்திவிடும் ஒரு மசாஜ் ஆகும். இதனால் அதில் உள்ள வெப்பத்தினால், தசைகள் தளர்ந்து, உடலுக்கு ரிலாக்ஸ் கிடைக்கும்.

ஆயில் மசாஜ் (Head Oil Massage)

ஆயில் மசாஜ் (Head Oil Massage)

இது ஒரு இந்தியாவில் பாரம்பரியமாக, தலைக்கு எண்ணெய் வைத்து, மசாஜ் செய்யப்படும் முறையாகும். இதற்கு நெல்லிக்காய் எண்ணெய் மற்றம் பிராமி போன்ற எண்ணெய்களைப் பயன்படுத்தி மசாஜ் செய்யப்படும். இதனால் மன அழுத்தம் நீங்குவதோடு, முடி நன்கு ஆரோக்கியமாக இருக்கும்.

களரி மசாஜ் (Kalari Massage)

களரி மசாஜ் (Kalari Massage)

களரி என்பது கேரளாவில் மல்யுத்த பயிற்சியின் போது செய்யப்படும் ஒருவித கலையாகும். இந்த களரியை மையமாகக் கொண்டு செய்யப்படும் மசாஜில், குப்புற படுக்க வைத்து, மூலிகை எண்ணெய்களை கொண்டு, பாதங்களுக்கு நன்கு மசாஜ் செய்யப்படும். இதனால் உடல் நன்கு வளையும் தன்மையைப் பெறுவதோடு, மன அழுத்தம் நீங்கி, உடல் நன்கு சுறுசுறுப்புடனும் இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

10 Best Massages For Instant Stress Relief

If you are are looking for stress relief, then some massages must be on your wish list. Each of these best massages for stress have their own health benefits. A regular dose of each of these could help you de-stress yourself and also get relief from body ache. Here are some of the best massages for stress relief.
Desktop Bottom Promotion