Latest Updates
-
இதுல நீங்க என்ன செய்வீங்கன்னு சொல்லுங்க.. உங்களிடம் மறைந்திருக்கும் குணத்தை சொல்றோம்.. -
12 ஆண்டுகளுக்கு பின் நிகழும் குரு-சூரிய சேர்க்கை: ஜூலையில் இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
பருப்பு உருண்டை குழம்பு - சிம்பிளா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
2 வாரம் தொடர்ந்து முட்டை சாப்பிடுவதால் உடலினுள் என்ன நடக்கும்? - விளக்கும் அமெரிக்க டாக்டர்! -
ராகு நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படப்போகுது.. -
ரவா தேங்காய் தோசையும், தக்காளி சட்னியும் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 30 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஜூலையில் அஸ்தமனமாகும் குரு பகவான்: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகுது.. -
சுக்கிரன் சிம்ம ராசிக்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
கனவில் பணத்தை பார்ப்பது அதிர்ஷ்டமா? துரதிர்ஷ்டமா? அதன் உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா?
நீங்க விரும்பி சாப்பிடும் ஃபாஸ்ட்புட் தயாரிப்பு பின்னாடி நடக்கும் அசிங்கமான செயல்கள்!
ஃபாஸ்ட்புட்-ல் பல வகைகள், பல ருசிக் கொண்ட கலவை உணவுகள் நம்ம அடிமைப்படுத்தி வைத்திருக்கிறது. ஆனால், இதன் பின்னாடி இருக்கும் கருப்பு பக்கங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா?
நேரத்தை கடந்து வேகமாக பயணிக்க ஆர்பரித்து வரும் நாம் உணவிலும் வேகத்தை எதிர்பார்க்கிறோம். அதன் காரணத்தால் பிறந்த உணவுகள் தான் இந்த ஃபாஸ்ட் ஃபுட்
நாவை காதலில் விழவைக்கும் இதன் வித்தியாசமான ருசிக்கு நாம் என்றோ அடிமையாகிவிட்டோம். நமது குழந்தைகளையும் இதற்கு அடிமைப்படுத்திவிட்டோம்.
இதில் என்ன இருக்கிறது என கேள்விகேட்கும் நபர்கள் இந்த ஃபாஸ்ட் ஃபுட் உலகில் நடக்கும் இந்த பித்தலாட்டம் நிறைந்த அசிங்கமான உண்மைகளை அறிந்தால் இனிமேல் அந்த ஃபாஸ்ட் ஃபுட்யே சாப்பிடமாட்டீர்கள்...

மஸ்டர்ட் - கெட்சப் தியரி!
நீங்கள் ஃபாஸ்ட் ஃபுட் சாப்பிடும் போது அருகே இந்த மஞ்சள் - சிவப்பு காம்போ எப்போதும் இருக்கும். இதை டிப் செய்யாமல் ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளை ருசிக்கவே மாட்டோம். இதை பின்னணியில் ஒரு தியரி இருக்கிறது.
ஆம், இவை இரண்டுமே ருசியை அதிகரிக்கிறதோ, இல்லையோ? உங்கள் பசியை அதிகரிக்கும். இதன் மூலம் உங்களை அதிகம் சாப்பிட வைப்பது தான் இந்த மஸ்டர்ட் - கெட்சப் தியரி.

சில நிமிடங்களில்!
அவ்வளவு பெரிய பர்கர் நீங்கள் ஆர்டர் செய்த உடனேயே கிடைத்துவிடும். இதற்கு பின்னணியில் இருக்கும் மர்மம் வேறொன்றும் இல்லை, ஏற்கனவே பாதி சமைத்து ஃப்ரீசரில் பதப்படுத்தி வைத்ததை உங்களுக்கு சூடு செய்து, தயாரித்து தருகின்றனர். இது தான் உண்மை!

மென்று சாப்பிட!
பொதுவாக, நாம் ஒரு உணவை சாப்பிடும் போது 15 முறையாவது மென்று சாப்பிடும் வகையில் அமைந்திருக்கும். ஆனால், ஃபாஸ்புட் உணவுகளை இதைவிட வேகமாக மென்று சாப்பிடும் வகையில் தான் அமைந்திருக்கும்.
எவ்வளவுக்கு எவ்வளவு நீங்கள் குறைவாக மென்று சாப்பிடுகிறீர்களோ, அவ்வளவு பசி அதிகரிக்கும். இதற்கு காரணம் சரியாக மென்று சாபிட்டவில்லை என்றால், உங்களுக்கு சாப்பிட்ட திருப்தி ஏற்படாது.

ஒரே ருசி தான்!
பெரும்பாலும் நீங்கள் சாப்பிடும் ஃபாஸ்புட் உணவுகள் ஒரே மாதிரியான ருசியை அளிக்க கூடியவை தான். முக்கியமாக சிலர் சாலட் உணவுகள் குறைந்த கலோரிகள் தான் இருக்கும் என ஆர்டர் செய்து சாப்பிடுவார்கள். ஆனால், நீங்கள் எண்ணுவதைவிட அதிக கலோரிகள் கொண்டிருக்கும் சாலட் உணவுகள்.

காம்போ!
காம்போ உணவுகள் குறைந்த பணத்தில் அதிக உணவு உண்பதற்கு தரப்படுவது அல்ல. குறைவாக சாப்பிட வருபவர்களையும் அதிகம் சாப்பிட வைக்கு பயன்படுத்தும் உக்தி ஆகும்.
கொஞ்சம் பணம் அதிகம் கொடுத்தால் அதிக உணவு கிடைக்கிறது என மக்களும் விரும்பி வாங்கி உண்ணுவார்கள். இதெல்லாம் கார்ப்பரேட் சூச்சமம்!

கிரில் மீட்!
அதிகளவில் உணவு தயாரிக்கும் நிறுவனங்கள் கிரில் செய்து இறைச்சியை சமைப்பது இல்லையாம். இவர்கள் ஏற்கனவே அதிகளவில் உணவுகளை வாங்கில் ஃப்ரீசரில் வைத்திருப்பார்கள்.
இதை கிரில் செய்வதற்கு பதிலாக கிரில் போன்ற நறுமணத்தை தரும் செயற்கை புகை பயன்படுத்தி கிரில் மீட் போன்று தயாரிக்கின்றனர். நேரத்தை மிச்சப்படுத்த இப்படியும் சில யுக்திகளை கையாள்கின்றனர்.

போலி முட்டை!
நீங்கள் உன்னுள் ஃபாஸ்ட்புட் களில் சேர்க்கப்படுவது பெரும்பாலும் உண்மையான முட்டை அல்ல. Glycerine மற்றும் Dimethylpolysiloxan (ஒருவகை சிலிகான்) உடன் E552 சேர்த்த ஆரோக்கியத்தை அளிக்கும் வகையில் தயாரிக்கப்படும் போலி முட்டை கலவை பயன்படுத்துகின்றனர்.

காபி!
நீங்கள் நுரை பொங்கி வழியும் காபியை விரும்பு குடிக்கும் நபரா? இதில் அழகான வடிவத்தில் நுரை உண்டாக்க பயன்படுத்தப்படும் Styroform எனும் கெமிக்கல் நரம்பு மண்டலத்தை பாதிக்கக்க செய்யும் என்பதையும் நீங்கள் தெரிந்துக் கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications