Latest Updates
-
செப்டம்பரில் மிதுன ராசிக்கு செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் புதிய உச்சத்தை தொடுவாங்க.. -
சனி-சூரியன் உருவாக்கும் ஷடாஷ்டக யோகத்தால் துரதிர்ஷ்டத்தையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 2 ராசிகள் -
நார்த் இந்தியன் ஸ்டைல் ஆலூ சன்னா மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செய்யுங்க - மட்டன் குருமா மாதிரி இருக்கும் -
சப்பாத்திக்கு இந்த ப்ளைன் குருமா செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் கணக்கில்லாம சாப்பிடுவாங்க.. -
விபூதியை நெற்றியில் எப்படி வைக்க வேண்டும்? நெற்றியில் விபூதி வைப்பதன் அர்த்தம் என்ன தெரியுமா? -
Vastu Tips: வீட்டில் பணம் அதிகமா சேரணுமா? அப்ப வீட்டுல இந்த செடியை வாங்கி வையுங்க.. -
குப்பையை பணம் கொடுத்து இறக்குமதி செய்யும் வினோத நாடு - எந்த நாடு? ஏன் இப்படி செய்கிறது தெரியுமா? -
ஆகஸ்ட் இறுதியில் நடக்கும் ஆண்டின் கடைசி சந்திர கிரகணம்: இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
செப்டம்பரில் சுக்கிரன் துலாம் ராசிக்கு செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் யார் தெரியுமா? -
கொத்தவரங்காயை இந்த பக்குவத்தில் பொரியல் செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க..
தம்பதிகளே! உங்க செக்ஸ் வாழ்க்கையை மசாலாவாக்க... நீங்க 'இந்த' விஷயங்கள செஞ்சா போதுமாம்...!
வாழ்க்கையில் மற்ற விஷயங்களைப் போலவே, உடலுறவிற்கும் மெனக்கெடல்கள் தேவைப்படுகிறது. இது தம்பதிகளில் ஒருவர் செய்ய வேண்டியது அல்ல. இருவரும் இந்த மெனக்கெடலை செய்ய வேண்டும். நீங்கள் சரியான முறையில் உடலுறவு கொள்ளாவிட்டால், ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் அது சலிப்பாகத் தோன்ற வாய்ப்புள்ளது.
உங்கள் பாலியல் வாழ்க்கையை எவ்வாறு மசாலா செய்வது என்பது பற்றி ஒவ்வொரு தம்பதிகளும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அது மட்டுமல்லாமல், சிறந்த புணர்ச்சியை அடைய இது உங்களுக்கு உதவும். சலிப்பான பாலியல் தம்பதிகளுக்குள் பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். தம்பதிகளின் உடல் ரீதியான நெருக்கம் அவர்களின் வலுவான தொடர்புடையது.

எனவே, தம்பதிகளே உங்கள் சலிப்பான பாலியல் வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டுவரவும், உங்கள் துணையுடன் ஒரு அற்புதமான பாலியல் வாழ்க்கையை பெறவும் உதவும் சில குறிப்புகளை பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம்.
உணர்ச்சிரீதியான நெருக்கத்தை உருவாக்குங்கள்
உடல் நெருக்கம் வேலை செய்ய வேண்டுமென்றால், உங்கள் துணையுடன் உணர்ச்சிபூர்வமான நெருக்கம் இருக்க வேண்டும். சலிப்பான பாலியல் வாழ்க்கையை முடிவுக்கு கொண்டுவருவது என்பது உங்கள் துணையுடன் நீங்கள் படுக்கையில் நன்றாக படுக்கையில் இருக்க வேண்டும் என்று அர்த்தமல்ல. தம்பதிகள் இருவரும் சலிப்பான பாலியல் வாழ்க்கையை விட்டு வெளியேற முதலில் ஒரு வலுவான உணர்ச்சிரீதியான தொடர்பை ஏற்படுத்த வேண்டும்.
தம்பதிகள் இருவரும் பாலியல் தொடர்பைப் புதுப்பிப்பதில் வேலை செய்ய வேண்டும். இதற்காக, உங்கள் துணையின் தேவைகளைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யலாம் மற்றும் உங்கள் துணையிடம் அக்கறையையும் அன்பையும் காட்டலாம். தம்பதிகள் இருவருமே உங்கள் துணை மீது மரியாதை காட்ட வேண்டும் மற்றும் அவர்களின் உணர்ச்சிகளை மதிக்க வேண்டும்.
பாலியல் வாழ்க்கை
செக்ஸ் என்பது ஒரு அற்புதமான இன்பத்தை தரக்கூடிய விஷயம். இதை சரியாக கையாண்டால் உங்கள் வாழ்க்கையும், பாலியல் வாழ்க்கையும் மகிழ்ச்சியாக இருக்கும். இங்கு நிறைய தம்பதிகள் செக்ஸ் பற்றிய புரிதல் இல்லாமலே இருக்கிறார்கள். இருவருக்கும் உடலுறவு குறித்த ஆசை, செயல்பாடுகள், விருப்பு மற்றும் வெறுப்புகள் இருக்கும் என தெரிந்துகொள்ள வேண்டும். ஒருவரின் தேவையை இன்னொருவர் புரிந்துகொண்டு செயல்பட வேண்டும்.
போர்ஃப்ளே
பல தம்பதிகள் ஃபோர்ப்ளேவைத் தவிர்த்து, நேரடியாக உடலுறவிற்கு செல்கிறார்கள். இந்த வழியில் நீங்கள் இன்பத்தை அடைய முடியாது. உடலுறவில் போர்ஃப்ளே மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. போர்ஃப்ளே உண்மையில் உங்கள் உடலுறவை கூடுதல் சுவாரஸ்யமானதாக மாற்றும்.
உங்கள் துணை மற்றும் அவரது விருப்பங்களை நீங்கள் அறிந்துகொள்வது இந்த சமயத்தில்தான். நீடித்த பாலியல் இன்பத்தை அடைய உதவும் தீவிரமான போர்ஃப்ளே மூலம், தம்பதிகள் ஒருவருக்கொருவர் உங்கள் அன்பையும் ஆர்வத்தையும் காட்டலாம்.
உச்சகட்ட இன்பம்
ஆண்களும், பெண்களும் இருவருமே தங்களுடைய பாலியல் வாழ்க்கையில் உச்சகட்ட இன்பத்தை அடைவதற்கான வழியை பெரும்பாலும் தெரிந்துகொள்ள முயற்சி செய்வதில்லை. பெரும்பலான பெண்கள் உடலுறவில் உச்சக்கட்டம் அடைந்ததாக போலியாக நடிப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
போலியான உச்சக்கட்டத்தை தவிர்த்து, இன்பமான உச்சக்கட்டத்தை அடைய பலவழிகள் இருக்கின்றன. அதை தம்பதிகள் இருவரும் முயற்சி செய்ய வேண்டும். அதில், நீங்கள் உச்சகட்டம் இன்பம் பெற எட்ஜிங்கும் சிறந்த வழிதான்.
தரமான உடலுறவு
உங்கள் உடலுறவை சலிப்பானதாக மாறுவதற்கான ஒரு முக்கிய காரணம், தரமான பாலியல் செயல்பாடு இல்லாதது. மகிழ்ச்சியான உடலுறவை பெற அடிக்கடி உடலுறவு கொள்வது உதவும் என்று பலர் நினைக்கிறார்கள். இருப்பினும், இது எல்லா தம்பதிகளுக்கும் பொருந்தாது.
ஆரோக்கியமான பாலியல் வாழ்க்கை பெற, நீங்கள் தரமாக செயல்படுவதில் கவனம் செலுத்த வேண்டும். உங்கள் துணையின் ஆசைகளைப் புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும். நீங்கள் இருவரும் ஒரு சிறந்த மகிழ்ச்சியான இன்பத்தை அனுபவிக்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications
