ஒரு குடும்பத்தையே சிதைத்த டைம் பாஸ் காதல்! My story #052

Subscribe to Boldsky

பள்ளிப்படிப்பு முடிந்து கல்லூரியில் அடியெடுத்த வைத்த காலம் அது. சிறகு முளைத்தது போல் இருந்தது. கட்டுப்பாடற்ற வாழ்க்கை சில சுவாரய்சங்களை தன்னுள்ளே வைத்திருக்கும் தானே. இதுவரை காலமும் எதோ கூண்டி அடைத்து வைத்துக் கிடக்க இப்போது கூண்டினைத் திறந்து பறந்து விரிந்திருக்கும் வானத்தை காட்டி பற... பற உயர உயரப் பற என்று சொல்வது போல இருந்தது.

Dad's reaction when he saw daughter in porn video

நண்பர்கள் கூட்டம் பெருகியது. வாழ்க்கையில் நான் திரும்ப பெற நினைக்கிற நாட்கள் என்றால் அது நிச்சயம் என் கல்லூரி நாட்களாகத்தான் இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஸ்போர்ட்ஸ் :

ஸ்போர்ட்ஸ் :

அன்று எங்கள் கல்லூரியில் கல்லூரிகளுக்கு இடையிலான கால்பந்து விளையாட்டு நடந்தது. உயிரைக்கொடுத்து ஜெயிச்சது எங்கள் கல்லூரி. என்ன தான் குழு ஜெயித்தது என்றாலும் அதிலிருந்த ஒருவனை மட்டும் தூக்கி வைத்து கொண்டாடியது.

யார் அவன் என்று தெரியவில்லை.ஆனால் பிசாசு....ஆம் பிசாசு போல அசுரத்தனமாய் விளையாடினான். கண்ணிமைக்கும் நேரத்தில் முடிவுகளை மாற்றி நம் அபிப்ராயங்களை தவிடு பொடி செய்வது தான் அவன் வேலையாய் இருந்தது.

சுமார் இரண்டு மணி நேரம் நீடித்த அந்த விளையாட்டில் அவன் மட்டுமே எல்லாருடைய பார்வையிலும் நிறைந்திருந்தான். சரி... என்னுடைய பார்வையில்

எங்கள் அறை :

எங்கள் அறை :

ஜன்னல் வழியே அவன் எங்கள் அறையை கடப்பதை கவனித்து விட்டேன். எந்த டிப்பார்ட்மெண்ட் போய் விஷ் பண்லாமா என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே. அவன் எங்கள் வகுப்பறையில் நுழைந்தான்.

அடடே ஏதேனும் தகவல் சொல்ல, அல்ல நண்பர்கள் யாராவது பார்க்க வந்திருப்பான் போல என்று நினைத்துக் கொண்டேன். ஹை... என்று உள்ளே சந்தோசத்தில் துள்ளிக்குதித்தேன். எனக்குப் பிடித்த ஒரு நபர் நான் இருக்கும் இடத்திற்கு வருகிறார் என்றால் சும்மாவா?

கடைசி பென்ச் :

கடைசி பென்ச் :

நேராக கடைசி பென்ச்சில் உட்கார்ந்து கொண்டார்.என்ன இங்கயே உட்கார்ந்துட்டான்... ஏன் யார்ட்டயும் பேசாமா போன் நோண்டிட்டு இருக்கானே என்று யூகித்து பக்கத்தில் இருப்பவளிடம் கேட்டேன்.

லூசு அவன் நம்ம கிளாஸ் தான்.... ஆனா எப்பயாவது தான் கிளாஸ் ரூம் பக்கம் வருவான் என்று சொல்ல எனக்கு ஆச்சரியத்தில் வார்த்தையே வரவில்லை. என்னை நெருங்கிவிட்டான், நம் கிளாஸ் பையன்னா எப்டியாவது விஷ் பண்ணியே ஆகணும் என்று சந்தர்ப்பத்திற்காக காத்திருந்தேன்.

போன் :

போன் :

சீரியசாக போன் நோண்டிக் கொண்டிருந்தான். அவ்வப்போது யாருக்கோ போன் செய்தான்.ஆனால் எதிர்முனையில் கட் செய்து விடுகிறார்கள் போல போனை எடுத்து காதில் வைப்பதும் ஏமாற்றத்துடனும், கோபத்துடனும் எடுப்பதுமாய் இருந்தான். நான் சரியாக எண்ணியிருந்தால் அவன் பன்னிரெண்டு முறை யாருக்கோ கால் செய்திருக்க வேண்டும்.

இரண்டு பேரை துணைக்கு அழைத்துக் கொண்டு வகுப்பறையிலிருந்து வெளியேறி விட்டான். எப்டி தான் இவனுக்கு நியூஸ் வருமோன்னு தெரியாது. கரெக்டா ஸ்டாஃப் யாருமில்லாதப்போ வந்து ஒரு அட்டண்டென்ஸ போட்டுட்டு போயிருவான் என்று என் தோழி கிசுகிசுக்க.... ஏய் செம்மையா இருக்கான்ல இன்னக்கி கேம்ல கூட பின்னியெடுத்துட்டான் என்று சொல்ல

சைட்டா.... என்று சிரித்து செருமினாள்.

சாரி :

சாரி :

இன்னும் எங்கள் வகுப்பறை ஜன்னலை கடக்கவில்லை அப்படியானால் வகுப்பறை முன்பாக தான் நின்றிருக்க வேண்டும்.அவன் கடந்து செல்வதை பார்க்கலாம் என்று முழுவதும் அந்த ஜன்னல் பக்கம் திரும்பி உட்கார்ந்து கொண்டேன்.

சிறிது நேரம் கழித்து முதலில் அவனுடன் சென்ற அந்த இரண்டு நபர்கள் வந்தார்கள். அடுத்து அவன் தான் என்று நினைக்க ஒரு பெண் வந்தாள். அவள் கண்டிப்பாய் வேறு ஒரு டிப்பார்ட்மெண்ட் தான்.

அவளின் பின்னால் இவன்.... ஏதோ கெஞ்சிக் கொண்டிருந்தான். இவன் மன்னிப்பு கேட்க அவள் முடியவே முடியாது என்பது போல சைகை காண்பித்து விட்டு வேகமாக நடந்தாள்.அதே வேகத்தில் இவனும்.

எனக்கு எதோ லேசாய் புரிந்தது. தோழியா? காதலியா யாராக இருக்கும் என்று எதுவும் தோன்றவில்லை. கனத்தது. அவன் மீதான பொசசிவ்னெஸ் உணர்ந்த தருணம் அது

அட்டெண்ட்ஸ் :

அட்டெண்ட்ஸ் :

அதன் பிறகு தொடர்ந்து வகுப்பறையில் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. யாரிடமும் பேசாமல் அமைதியாக இருப்பான். தானாக முன்வந்து எதிலும் கலந்து கொள்ளவோ பேசவோ மாட்டான். அவனைப்பற்றி எப்போதும் என் தோழியிடம் பேசி அவனைடைய விவரங்களை கறந்து கொண்டேயிருப்பேன்.

எப்போதும் கலங்கிய கண்களுடன் வெளியில் டீக்கடையில் தம் அடித்துக் கொண்டு,கல்லூரி முடிந்தும் நீண்ட நேரம் ஃபுட் பால் கிரவுண்டில் உட்கார்ந்திருப்பான். ஏதோ இழந்ததைப் போன்ற வெறுமை இருக்கும்.

வாழ்த்து :

வாழ்த்து :

ஒரு வழியாக சில வாரங்கள் கடந்து அவனிடம் பேசும் சந்தர்ப்பம் கிடைத்தது. மதிய உணவு வேலை கடந்து ஒரு நாள் நான் சாப்பிட வேண்டும் என்று கேண்டீனுக்குச் சென்றான். கேண்டீனுக்கு வெளியில் போடப்பட்டிருக்கும் டேபிள் சேரில் ஒற்றை சாண்ட்விச்சை வைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தான். மாணவர்கள் கூட்டம் அவ்வளவாக இல்லை.

ஹாய்... என்றேன்.

நிமிர்ந்து பார்த்தான்,ஹலோ

உங்க கிளாஸ் தான். அன்னக்கி சூப்பரா விளையாண்டிங்க

தேங்க்ஸ்.. நிறையவாட்டி பாத்திருக்கேன். அந்த பல்லுல க்ளிப் போட்ட பொண்ணு கூட தான இருப்பீங்க

ஹையோ..... எனக்குப் பிடித்தவன் என்னை கவனித்திருக்கிறானா என்று ஆச்சரியம் தாங்காமல்.நிஜாமாவா? எப்டிங்க ரொம்ப ஆச்சரியமா இருக்கு என்று சொல்ல சிரித்துக் கொண்டான்.

தெய்வீகச் சிரிப்பையா அது.

காதல் :

காதல் :

பேச ஆரம்பித்தோம்... சாட்டிங் தொடர்ந்தது. ஆறு மாதங்கள் கடந்திருக்கும் வேலையில் வகுப்பறைக்கே எங்கள் நட்பு பரிச்சையமானதாய் இருந்தது. அவ்வப்போது எங்கள் இருவரை சம்மந்தப்படுத்தி கிசுகிசு கேட்கும் போதெல்லாம் கோபமே வராது. அவன் என் ஆளு தான என்று விட்டுவிடுவேன். முறையாக ப்ரோப்போஸ் செய்து கொண்டதெல்லாம் இல்லை.

காதலை உணர்ந்த தருணம் என்றெல்லாம் தனியாக எதுவும் கிடையாது. அவனை முதன் முதலாக பார்த்த போதே காதலில் விழுந்து விட்டேன். ஆனால் இதை எப்படியாவது அவனிடம் சொல்ல வேண்டும். எங்கே சொல்லி இருக்கிற நட்பு முறிந்து விட்டால்... வேண்டாமப்பா என்று நினைத்துக் கொண்டேன்.

 விரும்புகிறோம் :

விரும்புகிறோம் :

அன்றைய இரவில் என் வாட்சப்பில் நீண்ட மெசெஜ் ஒன்று அவனிடமிருந்து. பள்ளிப்பருவத்திலிருந்தே ஒரு பெண்ணை காதலித்ததாகவும் அவள் இந்தக்கல்லூரியில் சேருகிறாள் என்ற ஒரே காரணத்திற்காகவே இவன் இந்த கல்லூரியில் சேர்ந்திருக்கிறான்.

ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் பல முன்னணிக்கல்லூரிகளில் இடம் கிடைத்தும் அதையெல்லாம் தவிர்த்துவிட்டு இங்கே சேர்ந்திருக்கிறான். கிட்டதட்ட எட்டு வருடக் காதல் . என் பலமாய் இருந்தவள் என் பலவீனமாய் மாறிவிட்டாள். ஆம்.... நாங்கள் பிரிந்து விட்டோம். ப்ரேக் அப்.

அதிலிருந்து மீண்டு வரவே நிறைய காலம் ஆனது.இது போன்றதொரு வலியை மீண்டும் என்னால் அனுபவிக்க முடியாது. என்னை மன்னித்து விடு இதைச் சொல்லவே ரொம்ப சிரமமாக இருக்கிறது.நாம் கொஞ்சம் டிஸ்டன்ஸ் மெயிண்டெயின் பண்ணலாம். உன் மீது நிறைய அன்பு இருக்கிறது. எங்கே அந்த அன்பு காதலாகிடுமோ.... என்று பயம் என்று இருந்தது.

காதலிக்கிறேன் :

காதலிக்கிறேன் :

படிக்க படிக்க தாரை தாரையாய் கண்ணீர் கொட்டியது. அந்த பொண்ண எவ்ளோ லவ் பண்ணியிருந்திருப்பான் எட்டு வருஷம் லவ்னா சும்மாவா...ஆண்கள் இது போல எமோசனலாக பேசுவது ஏனோ அவர் மீதான கரிசனத்தை அதிகப்படுத்துகிறது.

உன் மேல் நிறைய அன்பு இருக்கிறது.... காதலாகிடுமோ என்று பயம் என்று அவன் டைப் செய்திருந்ததை திரும்ப திரும்ப படித்துக் கொண்டேன்.

கால் செய்தேன். எடுக்கவில்லை.

நான் உன்னை காதலிக்கிறேன் என்று மெசேஜ் அனுப்பி வைத்தேன். நீண்ட நேரம் பதிலே வரவில்லை.போன் செய்து இது என்ன கரிசன லவ்வா என்றான்? என்னையெல்லாம் உன்னால் சமாளிக்க முடியாது... எப்டியும் சண்டை வரும்..

ஒருவர் மீது அன்பு வைத்து விட்டால் அதிலிருந்து வெளியே வர எனக்கு இன்னமும் தெரியவல்லை. கண்மூடித்தனமாக அன்பு வைப்பதாலேயே பல இடங்களில் துரோகங்களையும் வஞ்சனையும் சந்திக்க வேண்டியதாய் இருக்கிறது இது நமக்கு வேண்டாம். என்றான்...

லவ் யூ சோ மச் இது ஒண்ணும் கரிசன லவ் கிடையாது. ஃபுட்பால் கிரவுண்ட்ல உன்ன மொதோ மொதோ பாத்தப்பயிருந்தே லவ் தான் என்று சொன்னேன்.

மகிழ்ந்தான்.... அவன் குரல் உடைந்திருந்ததை கவனிக்க தவறவில்லை. வாழ்வின் நிறைவான தருணமாக இருந்தது.

அப்பா :

அப்பா :

அவன் மீது கொள்ளை ப்ரியம்... ஒவ்வொரு நாளும் அவன் மீதான என் காதல் அதிகரித்துக் கொண்டே தான் இருந்தது. அப்பா வாக்கிங் செல்வதற்காக ஷூ மாட்டிக் கொண்டிருந்தார்...

ராஜா என்று கதவுக்கு பின்னாலிருந்து மெல்லமாய் அழைத்தேன்... சொல்லுங்க ராசாத்தி வர்றப்ப தீனி வாங்கிட்டு வரணுமா என்றார்..அவர் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டேன்..

நான் எவ்ளோ சந்தோசமா இருக்கேன் தெரியுமா.. வாழ்க்க பூரா இப்டியே இருக்கணும் என்று அப்பாவை கட்டிக்கொண்டேன்... அப்பா சிரித்தார். என் நெற்றியில் முத்தமிட்டு அதுக்கென்னடா என் மக எப்பவும் சந்தோசமா சிரிச்சிட்டே தான் இருப்பா.... சரி அப்பா வாக்கிங் போய்ட்டு வரட்டுமா என்றார்.

அப்பா...

என்னடா ?

என்ன உனக்கு எவ்ளோ பிடிக்கும்....

இதென்னடா கேள்வி.... என் மகள என்ன கொஞ்சமாவா பிடிக்கும் என்னோட அன்பு எல்லாம் அன் கவுண்டபிள்

நான் ஒண்ணு சொல்லட்டுமா.... என்னைய திட்டமாட்டல்ல... முழுங்கி முழுங்கி சொல்ல

தோளில் கை போட்டுக்கொண்டார். இருவரும் எழுந்து கேட் அருகில் சென்றோம்.

என் கண்களை நேரடியாக பார்த்து... சொல்லு என்னாச்சு என்றார்...

அவர் கண்ணை நேரடியாக சந்திக்க திறானியற்று அவரை அணைத்துக் கொண்டேன். அப்பா... ஐ ம் இன் லவ்.. அவனும் தான்.. இப்பதான் கொஞ்ச நாளைக்கு முன்னாடி என்று கீழே பார்த்துக் கொண்டே சொல்ல

வெல்டன் மை கேர்ல்... என்று முதுகில் தட்டுகிறார்

ஆச்சரியம் :

ஆச்சரியம் :

என்னப்பா வெல்டன்னு சொல்ற.., உனக்கு கோவம் வர்லயா? எல்லா அப்பாவும் பொண்ணு இப்டி சொன்ன திட்டத்தான செய்வாங்க நீ என்ன வெல்டன் சொல்ற என்று கேட்டேவிட்டேன்.

என் பொண்ணப்பத்தி எனக்கு தெரியும்.... இது இந்த வயசுல வர்றது சகஜம் தானா..

அந்தப்பையன் யாருன்னு தெரியுமா? நீ பாட்டுக்கு ஓகே சொல்ற... பையன் யாரு என்ன பண்றான்னு எதுவுமே கேக்கமாட்டியாப்பா....

இது உன் வாழ்க்க... நீ என்னோட பொண்ணுனு உன் மேல எதையும் திணிக்க மாட்டேன். உன் லைஃப் எப்டி இருக்கணும்னு நீ தான் டிசைட் பண்ணனும்... அப்டி டிசைட் பண்ற, டெசிசன் எடுக்குற எல்லா சுதந்திரத்தையும் உனக்கு கொடுத்திருக்கேன். டேக் கேர் டார்லிங்!

மேற்கொண்டு எதுவும் பேச்சே எழவில்லை. லவ் யூ ப்பா...

இறுதியாண்டு கல்லூரி :

இறுதியாண்டு கல்லூரி :

இரண்டு ஆண்டு காதலுடன்... இறுதியாண்டை நெருங்கினோம் கல்லூரிக்கே எங்கள் காதல் விவகாரம் தெரியும். அவனுடன் வெளியில் செல்கிறேன் என்று வீட்டில் சொல்லிவிட்டு செல்லும் அளவுக்கு சுதந்திரம் இருந்தது.

எப்டி ஃபைனல் முடிச்சதும் கல்யாணம் பண்ற மாதிரி ஐடியாவா இல்ல... ரெண்டு மூணு வருஷம் வேல பாத்துட்டு அப்பறம் பண்ணிக்கிறீங்களா?

அம்மா கேட்ட இந்த கேள்வியை என்னால் நேரடியாக எதிர்கொள்ள முடியவில்லை.

இதுவரை பார்த்த, கேள்விப்பட்ட, சினிமா கதைகள் எதிலும் ஒரு பெண்ணின் காதலை முழு மனதோடு ஏற்றுக் கொள்கிற, அவளுடைய திருமண வாழ்க்கை குறித்து அவளே முடிவு செய்ய வேண்டும் என்று யாரும் சொல்லி கேள்விப்பட்டதேயில்லை.

எவ்வளவு ஆசிர்வதிக்கப்பட்ட வாழ்க்கையிது...

ஒப்புதல் வாக்குமூலம் :

ஒப்புதல் வாக்குமூலம் :

தெரிலம்மா... எதுவும் டிசைட் பண்ணல என்றேன்.

அன்றைய இரவு அப்பாவும் சொன்னார். சீக்கிரம் டிசைட் பண்ணிட்டு சொல்லுடா... காலைல அம்மா சொன்னாளா..

ஆமாப்பா

ஒண்ணுமில்ல நீ உடனே வச்சிக்கலாம்னு சொன்னா இப்போ எனக்கு வர்ற ரிட்டையர்மெண்ட் பணத்த உன் கல்யாணத்துக்கு செலவு பண்ணுவேன்... இல்ல ரெண்டு மூணு வருஷம் கழிச்சுன்னு சொன்னா அத லேண்ட்ல இன்வெஸ்ட் பண்லாம்னு இருக்கேன் என்றார்..

எங்கே இதைக் கேட்டதற்கு தவறாக நினைத்துக் கொள்வேனோ என்று நினைத்து அவறாகவே அளித்த ஒப்புதல் வாக்குமூலம் அது.

உண்மை முகம் :

உண்மை முகம் :

அவனிடம் திருமணம் குறித்து பேச்சை எடுக்க... முதலில் கிண்டல் செய்தவன் பின்னர் எரிந்து எரிந்து விழ ஆரம்பித்தான். தேவையின்றி வேண்டுமென்றே சண்டை போட ஆரம்பித்தான்.

சைக்கோ எப்ப பாரு கல்யாணம் கல்யாணம்னு பேசுற என்று என்னை திட்ட ஆரம்பித்தான்.

ஆரம்பத்தில் எதுவும் எனக்கு புதிதாக தெரியவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக என்னை தவிர்க்க ஆரம்பித்திருந்தான். முழுதாக மூன்று நாட்கள் நாங்கள் இருவரும் பேசிக் கொள்ளாமல் இருந்தோம். வலியச் சென்று பேசிடும் சந்தர்பம் ஒன்றுக்கு கூட அவன் வாய்ப்பு தரவில்லை.

நான் என்ன தவறு செய்தேன். இதெல்லாம் எங்கே ஆரம்பித்தது? திருமணம் குறித்து பேசியது ஒரு தவறா? காதலிப்பவர்கள் எல்லாம் திருமணம் செய்வார்கள் தானே... திருமணம் செய்யத்தானே காதலிக்கிறோம்.

நம்ம பாக்குற கேக்குற விஷயமும் ரியல் லைஃப் ல நடக்குற விஷயமும் எப்பவும் ஒண்ணா இருக்கிறது கிடையாது போல

லவ்னாலே பேரண்ட்ஸ் பயப்படுவாங்க... லவ் மேரேஜ்க்கு வீட்ல பெர்மிஷன் கிடைக்கிறது கஷ்டம்னு தான் இதுவரைக்கும் கேள்விப்பட்டிருக்கேன் .

ஆனா என் வீட்ல அதுக்கு அப்டியே ஆப்போசிட். அதே போல கல்யாணம் பண்ணிக்க தான் ஆசப்படுவாங்க.., ஆனா இவன் என்னடான்னு இப்டியிருக்கான் என்று நினைத்துக் கொண்டேன்.

போன் கால் :

போன் கால் :

படிப்பு முடிந்தது. சண்டே காலை பதினொரு மணிக்கு நன்றாக தூங்கிக் கொண்டிருந்தேன். அப்பாவும் அம்மாவும் உறவினர் வீட்டு கிரக பிரவேசத்திற்கு சென்றிருந்தார்கள். தோழியொருத்தியின் போன் கால். அந்த போன் கால் என் வாழ்க்கையையே சுக்குநூறாக்கிடும் என்று சத்தியமாய் அப்போது எனக்கு தெரியாது.

தூக்க கலக்கத்தில்... ஹலோ என்றேன்

ஏய் ஃபேஸ்புக் பாத்தியா...

என்னடீ நீ போட்டோ போட்டிருக்கியா... லைக் போட்டு க்யூட்னு கமெண்ட் போடணுமா என்றேன்.

இடியட்... சீரியசா பேசிட்டு இருக்கேன் லூசு மாதிரி பேசுற என்று எகிற தூக்கம் கலைந்தது.

என்னாச்சு.

உன்னோட நியூட் போட்டோஸ் எல்லாம் அப்லோட் ஆகியிருக்கு உன் நேம்ல ஒரு ஃபேக் ஐடி க்ரியேட் பண்ணி போட்டிருக்காங்க... நம்ம கிளாஸ் ஃபிரண்ட்ஸ் எல்லாரையும் டேக் பண்ணியிருக்கு... நாங்க எல்லாம் ரிப்போர்ட் பண்ணிட்டு இருக்கோம்.

அதிர்ச்சி :

அதிர்ச்சி :

ஒன்றுமே புரியவில்லை. ஏய் என்னடி சொல்ற.... அதற்கு மேல் வார்த்தை வரவில்லை . போனை கட் செய்துவிட்டு பேஸ்புக் பார்த்தேன். அவள் சொன்னது உண்மை தான். கிட்டத்தட்ட அந்த ஃபேக் ஐடியில் பத்துக்கும் மேற்பட்ட படங்கள்.

ஒவ்வொன்றிலும் அவ்வளவு கேவலமான கமெண்ட்ஸ்... என்ன நடக்கிறது என்று யூகிப்பதற்குள் வரிசையாக போன்.. மெசேஜ் வர ஆரம்பித்துவிட்டது. யாரிடம் சொல்ல அப்பாவுக்கு போன் செய்து விஷயத்தை சொல்லலாம் என்று பார்க்க... என் ஒரிஜினல் ஐடியில் வீடியோ ஒன்று டேக் செய்யப்பட்டிருப்பதாய் நோட்டிஃபிக்கேஷன் சொன்னது. யார்றா நேரம் காலம் தெரியாமா என்று அந்த வீடியோவைப்பார்த்தால்...

அது நானும் அவனும் தனிமையில் இருந்த வீடியோ.... எப்போது அது வீடியோ பதிவு செய்யப்பட்டது யார் இதை இப்போது வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள்? இதற்கு காரணம் என்ன ஒன்றுமே புரியவில்லை.

என் படங்களை வெளியிட்ட அதே ஃபேக் ஐடி தான் இந்த வீடியோவை டேக் செய்திருந்தது.

யாருக்கு முதல் தகவல் :

யாருக்கு முதல் தகவல் :

இந்த விஷயத்தை யாரிடம் முதலில் சொல்வது... என்னை காதலித்தவனிடமா அல்லது அப்பாவிடமா? காதலித்தவனே முதல் சாய்ஸாக வந்து நின்றான். பல முறை முயற்சி செய்து எடுக்கவில்லை. வாட்ஸ்சப்பில் மெசேஜ் அனுப்பினேன். நீண்ட நேரம் கழித்து ரிப்ளை வந்தது.

ஆமா, பாத்தேன். யார்கிட்ட உன் நியூட் போட்டோஸ் ஷேர் பண்ண? என்ற ஒரு தெனாவட்டு கேள்வி.

பதிலை படித்த நேரத்தில் சுக்குநூறாய் உடைந்துவிட்டேன். உன்னையே நம்பி காதலித்துக் கொண்டிருக்கும் பெண்ணிடம் அவன் காதலன் இப்படியொரு கேள்வியையா கேட்க வேண்டும்.

அப்போ அந்த வீடியோ...? அதுல நீயும் நானும் தான் இருக்கோம். அன்னக்கி உங்க வீட்ல நம்மலத்தவிர வேற யாருமில்ல நான் வீடியோ எடுக்கல... அப்போ அந்த வீடியோ எடுத்தது நீ தான.

நோ.

இதுக்கு மேல உண்மைய மறச்சு என்ன பண்ணப்போற. ஏன் இப்டி பண்ண... உன்ன எவ்ளோ நம்பின்னேன். என்ன விட என் பேரண்ட்ஸ் உன் மேல எவ்ளோ நம்பிக்கை வச்சிருந்தாங்க.. கால் பண்றேன் போன் அட்டென் பண்ணு...

எல்லாம் அவனே :

எல்லாம் அவனே :

நீண்ட நேரம் ரிப்ளை வரவில்லை.

டிட் யூ லவ் மீ...?

பல முறை கேட்ட பிறகு.

நான் தான் பண்ணேன். என்ன ஏமாத்திட்டு போனா ஒரு பொண்ணு... அன்னக்கி முடிவு பண்ணேன் எவளையும் நம்பக்கூடாதுன்னு.. உன் மேல லவ் எல்லாம் இல்ல.. சரி காலேஜ் முடியுற வரைக்கும் டைம் பாஸ் பண்லாம்னு தான் பழகினேன் நீ என்னடான்னா கல்யாணம்னு பேச ஆரம்பிச்சுட்ட.

அவ மேல இருக்குற கோபம் எல்லா பொண்ணுங்க மேலயும் திரும்பிடுச்சு. இத செஞ்சதுல எனக்கு எந்த கில்ட்டும் இல்ல

என்ன ஒரு ஆறு மாசம் ஜெயில்ல தூக்கி போடுவாங்களா... போடட்டும்.

ஒவ்வொரு எழுத்துக்களும் என் நெஞ்சில் ஈட்டியாய் பாய்ந்தது. ஒரு வார்த்தை பேசவில்லை. அழக்கூட தோன்றவில்லை. உடுத்தியிருந்த இரவு உடையுடன் அப்படியே வீட்டை விட்டு வெளியேறினேன்.

வாழ்க்கை :

வாழ்க்கை :

ஆரம்பத்தில் அவன் சொன்ன கதை... என்னிடம் பழகிய விதம். இப்போது அவன் அனுப்பியிருக்கும் மெஸேஜ் எதுவுமே ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத மாதிரி தோன்றியது. நான் மிகவும் நேசித்தவன்..

என்னை காதலித்தவன் திடீரென்று ஒரு நாள் உன்னை காதலிக்கவில்லை... உன்னுடன் பழகியது டைம்பாஸ் தான் என்று சொன்னால் எப்படியிருக்கும்.

அதை விடக் கொடுமையாக யாரோ ஒரு பெண் மீது உள்ள கோபத்தில் பெண்களை எல்லாம் பழி வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் உங்களை அவனிடம் நம்பிக்கொடுத்த நிமிடங்களை வீடியோவாக வெளியிட்டால் என்ன செய்வீர்கள்.

என்னையே நான் கேட்டுக் கொண்டேன்.

செத்துப் போயிருப்பேன்.மனம் சொன்னது.

இந்நேரம் எல்லாரும் பார்த்திருப்பார்கள். மற்றவர்களை விடு அப்பா பார்த்தால் அந்த படங்களையும், வீடியோவையும் அப்பா பார்த்தால் அங்கே நெஞ்சடைத்து இறந்துவிடுவாறா? என் மீது எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தால் என் வாழ்க்கை குறித்து முடிவெடுக்க அனுமதியளித்திருப்பார். அவரை ஏமாற்றி விட்டேன். நம்பி ஏமாந்துவிட்டேன். இனி ஒரு நிமிடம் கூட நான் வாழக்கூடாது.

கதவைத் திற :

கதவைத் திற :

அப்பாவுக்கு மன்னிச்சிடுங்க அப்பா.... மிஸ் யூ என்று மட்டும் குறுஞ்செய்தி அனுப்பி விட்டு அப்படியே வெளியேறினேன். மெசேஜ் அனுப்பிய அடுத்த நொடி போன்கால் அப்பாவிடமிருந்து. கட் செய்தேன்.

வீட்டிற்கு வந்து கொண்டிருக்கிறோம். காத்திரு என்று மெசேஜ்.

அவர்களை எதிர்கொள்ள என்னிடம் தைரியமில்லை. உள்ளறைக்குச் சென்று கதவை பூட்டிக் கொண்டேன். ஐந்தே நிமிடத்தில் வந்தார்கள்.

என் கதவை தட்டினார்கள். திறக்கவில்லை

அம்மா பயந்து... இப்போ என்னாச்சுன்னு இப்டி பண்ற வெளிய வா எப்பவும் இப்டி எல்லாம் பண்ண மாட்டீயே என் கத சாத்திட்டு அழற கதவத் தொறம்மா என்றார்.

ப்பா... டிவி மேல இருக்குற என் போனப்பாரு என்றேன் அழுது கொண்டே. நீண்ட நேரம் மௌனம். அவர் எடுத்து அத்தனையும் பார்த்தார்.... அவன் எனக்கு அனுப்பிய குறுஞ்செய்திகளை படித்தார். அரை மணி நேரம் கழித்தும் எந்த சத்தமும் இல்லை.

அவன் ஏமாற்றிவிட்டானே என்ற கோபத்துடன் அவனை எதிர்த்து... என்ன செய்ய முடியும் என்ற இயலாமையுடன் அப்பா குறித்த குற்ற உணர்ச்சி அதிகமாக இருந்தது. என்னாச்சு அப்பாவுக்கு என்று உள்ளே எனக்கு பதைபதைப்பு.

எல்லாம் பாத்துட்டேன். படிச்சிட்டேன் கதவத் தொற.

மன்னிப்பு :

மன்னிப்பு :

இல்ல மாட்டேன். நான் உயிரோட இருக்கவே லாயிக்கில்ல. நான் போறேன். நான் தப்பு பண்ணிடேன்ப்பா... என்ன நீங்க எவ்ளோ நம்புனீங்க உங்கள ஏமாத்திட்டேன்ப்பா.. காதலிச்சவன் வேணாம்னு சொல்லிட்டு போனாக்கூட கொஞ்ச நாள்ல அந்த நினைவுகள மறந்திருப்பேன், ஆனா பழி வாங்குறேன்ற பேர்ல இப்டி பண்ணிட்டான். என்று கதறியழ

அப்பா விசும்பும் சப்தம் கேட்டது. என்னங்க... என்னங்க என்று அம்மாவின் குரல்...

அப்பாவுக்கு என்னாச்சு.. உள்ளே என்னால் இருக்க முடியவில்லை கதவைத்திறந்து அப்பா அருகில் சென்றேன். அப்பா கண்களில் கண்ணீர். என்னடி பண்ண என்று அம்மா என்னை அடிக்க கை ஓங்க அப்பா தடுத்து.. என்னை தன் பக்கம் இழுத்துக் கொண்டார்.

அடிக்காத. தப்போ சரியோ நம்ம பொண்ணு. நம்ம தான் கூடயிருக்கணும்.

நான் சைபர் க்ரைம் போய் பாக்குறேன். வைஃபை ஆஃப் பண்ணி வை ஒரு வாரத்துக்கு. அப்பாவின் நடை தள்ளாடியது.

அப்பா... பாத்துப்பா

என் உசுரு என் கைல இல்லம்மா...உருவியெடுத்துட்ட...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary

    Dad's reaction when he saw daughter in porn video

    Dad's reaction when he saw daughter in porn video
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more