Latest Updates
-
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
பெண்கள் உடலுறவின் போது எந்தெந்த விஷயங்களை பற்றி நினைக்கிறார்களாம் தெரியுமா? அதிர்ச்சியாகாதீங்க...!
உடலுறவு என்பது ஆண், பெண் இருவருக்குமே சுவாரஸ்யமான ஒன்றாகும். அந்த சமயத்தில் இருவருமே முழு ஈடுபாட்டுடன் இருந்தால் மட்டுமே அது அவர்களுக்கு மறக்க முடியாத அனுபவமாக இருக்கும்.
உடலுறவு என்பது ஆண், பெண் இருவருக்குமே சுவாரஸ்யமான ஒன்றாகும். அந்த சமயத்தில் இருவருமே முழு ஈடுபாட்டுடன் இருந்தால் மட்டுமே அது அவர்களுக்கு மறக்க முடியாத அனுபவமாக இருக்கும். இருவரில் ஒருவர் ஆர்வமின்றி இருந்தாலும் அது அவர்களுக்கு மறக்க வேண்டிய நிகழ்வாகவே இருக்கும். பொதுவாக பெண்கள் உடலுறவில் ஆர்வம் காட்டினாலும் அதனைத் தொடர்ந்து அவர்களின் எண்ணங்கள் வேறு இடங்களுக்கு சென்றுவிடும்.

இதற்கு காரணம் அவர்களின் துணை சரியாக செயல்படவில்லை என்பதல்ல, பொதுவாகவே பெண்கள் தங்கள் மனதில் ஏற்கனவே சிந்தனை ஓடிக் கொண்டிருந்தால் உடலுறவின் போது மற்ற விஷயங்களைப் பற்றி சிந்திக்கத் தொடங்குவார்கள். உடலுறவின் போது பெண்கள் பொதுவாக வேறெந்த விஷயங்களைப் பற்றி சிந்திப்பார்கள் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

எடைக்குறைப்பு
உடலுறவின் போது பெண்களின் முதன்மையான எண்ணம் இதுவாகத்தான் இருக்கும். நான் எடையைக் குறைக்க வேண்டுமா? நான் மிகவும் ஒல்லியாக இருக்கிறேனா? உடலுறவிற்கு என் உடலமைப்பு கச்சிதமானதாக இருக்கிறதா? உடலுறவுக்குப் பிறகு நான் இழந்த கலோரிகளின் அளவை நான் சரிபார்க்க வேண்டும். எடை பெண்களுக்கு ஒரு பிரச்சினையாக இருந்தால், இந்த எண்ணங்கள் மிகவும் பொதுவானவை.

உணவு
எப்பொழுது கொஞ்சம் பசி எடுக்க ஆரம்பிக்கிறதோ அப்போதெல்லாம் உணவு சம்பந்தமான விஷயங்களை நினைத்துப் பார்க்கிறோம். உடலுறவின் போது பெண்களுக்கு ஏற்படும் சில எண்ணங்கள் இங்கே: "நான் பாலை மீண்டும் குளிர்சாதன பெட்டியில் வைத்தேனா? உடலுறவுக்குப் பிறகு நாம் எப்போதும் பசியுடன் இருப்பதால், குளிர்சாதனப் பெட்டியில் சாப்பிட என்ன இருக்கும்? நான் அடுப்பை அணைத்துவிட்டேனா?" என்று அவர்களின் எண்ணங்கள் இதனை சுற்றியே இருக்கும்.

நெருங்கிய தோழியின் காதலைப் பற்றி
சில பெண்கள் தனது நெருங்கிய தோழியுடன் இருக்கும் உறவைப் பற்றி சிந்திக்கத் தொடங்குகிறார்கள். அவர்களின் சிறந்த தோழி எப்படிப்பட்ட ஆணுடன் டேட்டிங் செய்கிறார்கள் என்று அவர்கள் மிகவும் கவலைப்படுகிறார்கள்.

புத்தக ஒப்பீடுகள்
நிறைய காதல் நாவல்களைத் தேடி படிக்கும் புத்தக ஆர்வலர்கள், அடிக்கடி மனக் குறிப்புகளை உருவாக்கி, தங்கள் துணை எவ்வாறு செயல்படுகிறார் என்பதை அவர் படித்த புத்தகத்தில் வரும் கதாபாத்திரங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கிறார்கள். இது அவர்களுக்குள் கிளர்ச்சியைத் தூண்டலாம்.

குழந்தைகளைப் பற்றி
சில நேரங்களில், பெண்கள் எப்போதும் குழந்தைகளை மனதில் வைத்திருப்பார்கள், அவர்கள் எல்லா நேரத்திலும் என்ன செய்கிறார்கள் என்று அவர்கள் சிந்தித்துக் கொண்டே இருப்பார்கள். அவர்களுக்கு நாளை என்ன செய்து தர வேண்டும்? அவர்கள் வீட்டுப்பாடத்தை ஒழுங்காக முடித்தார்களா? என்று அவர்களைப் பற்றிய சிந்தனைகள் எழும்.

வேலைப்பளு
வேலையை அதிகமாக விரும்புவோருக்கு, துரதிர்ஷ்டவசமாக, எப்படி அதிலிருந்து விடுபடுவது என்று தெரிவதில்லை. அடுத்த நாள் செய்ய வேண்டிய டாஸ்க், இந்த மாத டார்கெட், புதிய ப்ராஜெக்ட் நடப்பது போன்றவற்றைப் பற்றியே அவர்கள் எப்பொழுதும் யோசித்துக் கொண்டிருப்பார்கள். உடலுறவு சமயம் அதற்கு விதிவிலக்கல்ல.



Click it and Unblock the Notifications