எல்லா ஆண்களுக்கும் இருக்கும் விசித்திரமான பாலியல் சந்தேகங்கள்... பதில்கள் உள்ளே...

Posted By: NARAYANAN V
Subscribe to Boldsky

அவ.. செம ஃபிகர்டா... அவ சைஸ்... அப்ப்ப்ப்பபா! என்று கிறக்கத்தில் பேசும் இளைஞர்களை நாம் சினிமாவிலும் நேரிலும் நிறைய பார்த்திருக்கக்கூடும். ஏன்.அதில் ஒருவராக நாமே கூட இருந்திருக்கலாம். அப்போது பெண்களைப் பற்றியும் பெண்களின் உடல் பற்றியும், அவர்களுடைய பாலியல் இச்சை பற்றியும் பல்வேறு கேள்விகள் மனதில் எழும்.

அதில் பல கேள்விகள் மிக விசித்திரமாக இருக்கும். அப்படி ஒரு 19 வயது கட்டிளம் காளையின் மனதில் எழும் புதிரான வினோதமான விசித்திரமான கேள்விகளை கேட்டிருந்தார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பாலியல் சந்தேகங்கள்

பாலியல் சந்தேகங்கள்

இது அவருக்கு மட்டும் எழுந்த சந்தேகம் மட்டுமல்ல. பெரும்பாலான ஆண்களுக்கு எழும் சந்தேகங்கள் தான் அவை. பொதுவாகவே பசங்களுக்கு செக்ஸ் பற்றி பேசவது என்றால் ஒரு அலாதி இன்பம் தான். எப்படி ஆண்குறியை பெருசாக்குவது? எப்படி நீண்ட நேரம் செக்ஸ் வைத்து கொள்வது? அவ கர்ப்பம் ஆயிட்டா?? இப்படி அடுக்கடுக்கான கொஞ்சம் ஏடாகூடாமான கேள்விகளை எழுப்பி ஒரு 19 வயசு பையன் கிட்டேர்ந்து ஒரு இமெயில். அவர் பேரு ஜெயேஷ்(பெயர் மாற்றப்பட்டுள்ளது). அவர் கேட்ட கேள்விகளும் அதற்கான பதில்களும் அவருக்கு மட்டுமல்ல, இளம்தலை முறைக்கு கொஞ்சம் உபயோகமா இருக்குமல்லவா?.... மேலே படித்து அவருடைய சந்தேகங்களையும் அதற்கான விளக்கங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்.

கேள்வி 1

கேள்வி 1

ஆண்களுக்கு விந்து வெளிப்படுவது போல் பெண்களுக்கும் உண்டா?

பதில் - பெண்களுக்கு விந்து எல்லாம் வராது. ஆனால் செக்ஸ் எண்ணம் உண்டாகும் போது அல்லது பெண்ணுறுப்பை தூண்டும் போது அல்லது செக்ஸ் கொள்ளும் போது பெண்ணுறுப்பில் ஒரு வழவழப்பான திரவம் யோனியில் சுரக்கும்.

கேள்வி 2

கேள்வி 2

ஆண்-பெண்ணிடம் உடலுறவு கொள்ளும் போது ஆண்களின் விந்து அணுக்களை பெண்ணுறுப்பில் சுரக்கும் திரவம் உள்ளே செல்ல விடாமல் தடுத்துவிடுமல்லவா? பெண் கர்ப்பமாக மாட்டாள் அல்லவா?

பதில் - இல்லை. உடலுறவின் போது பெண்ணுக்கு சுரக்கும் திரவமும் ஆணின் விந்து அணுவும் ஒரே சமயத்தில் வெளிப்பட்டாலும் இல்லையென்றாலும் பெண் கர்ப்பம் அடைய வாய்ப்புள்ளது. ஆணுறைகளை உபயோகிக்க தவறாதீர். தேவையில்லாத கர்ப்பத்தை தவிர்க்க 8 கர்ப்ப தடுப்பு முறைகள் உள்ளன.

கேள்வி 3

கேள்வி 3

பெண்கள் மாதவிலக்கு நேரத்தில் பெண்ணுறுப்பில் சுரக்கும் திரவமும், உடலுறவு கொள்ளும் போது சுரக்கும் திரவமும் ஒன்றா?

பதில் : இல்லை. தீட்டு நேரத்தில் வருவது, நேரடியாக கர்ப்ப பையிலிருந்து குறிப்பிட்ட நாட்களில், சினையடயாத கருமுட்டை இரத்ததுடன் கலந்து பெண்ணுறுப்பு மூலமாக சிறுநீர் தாரையை போல் வெளிவரும். ஆனால் உடலுறவின்போது பெண்ணுறுப்பில் சுரக்கும் திரவமும் மாதவிலக்கின் போது சுரக்கும் திரவத்துக்கும் வித்தியாசம் உண்டு. இரண்டும் வேற வேறு.

கேள்வி 4

கேள்வி 4

ஆண்களுக்கு விந்து அணுக்களுக்கு முன் வெளிப்படும் வழவழ திரவம்கூட பெண்களுக்கு கர்ப்பத்தை உண்டாக்குமா?

பதில் : விந்து அணுக்களுக்கு முன் வெளிப்படும் வழவழ திரவம் கர்ப்பத்தை உண்டாக்காது. ஆனால் அதில் நீங்கள் கைப்பழக்கத்தினாலோ/ கடைசியாக உறவு கொண்டபோதோ சுரந்த விந்து அணு கலந்து இருக்க வாய்ப்புள்ளது. ஆகையால் ஆணுறை பயன்படுத்துதல் நல்லது.

கேள்வி 5

கேள்வி 5

ஆணுறை பயன்படுத்தினால் , கருத்தடை மாத்திரைகளை பெண்கள் போட வேண்டாம் இல்லையா?

பதில் : உண்மை தான். ஆனால் ஆணுறையை முறையாக பயன்படுத்த வேண்டும். உறவின்போது இடையில் ஆணுறை கிழிந்துவிட்டால் உடனடியாக வெளியே எடுத்துவிட வேண்டும்.

கேள்வி 6

கேள்வி 6

உடலுறவு கொண்டவுடன், உடனடியாக சாப்பிடும் கருத்தடை மாத்திரைக்கும், பல நாட்கள் கருத்தடை தொடர்ந்து சாப்பிடும் மாத்திரைக்கும் என்ன வித்தியாசம்?

பதில் : பாதுகாப்பற்ற உடலுறவு கொண்டவுடன், கருத்தரிக்காமல் இருக்க 24-72 மணி நேரத்திற்குள் உட்கொள்ள வேண்டிய மாத்திரைகள் இருக்கிறது.

இது எந்த அளவுக்கு வேலை செய்யும் என்பது அந்தந்த மாத்திரையை பொருத்துள்ளது. மேலும் தொடர்ந்து பல நாட்கள் சாப்பிட வேண்டிய மாத்திரைகளும் உள்ளன. ஆனால் இந்த மாத்திரைகள் கர்ப்பமாவதை தடுத்தாலும், உடலுறவு மூலம் பரவும் எய்ட்ஸ்/ மற்றும் சில பால்வினை நோய்களை தடுப்பத்திலை என்பதை கவனத்தில் கொள்ளவும்.

கேள்வி 7

கேள்வி 7

மாதவிலக்கு நேரத்தில் பெண்களுடன் உடலுறவு கொள்ளலாமா? பாதுகாப்பான உடலுறவு அந்த நேரத்திலும் அவசியமா?

பதில்: நமது பண்பாடு அதற்கு அனுமதிப்பதில்லை. மாத விலக்கு நேரத்தில் அவர்கள் தீண்டதாகதவர்களாக நினைத்து கொள்ளுவதால், சாமி கும்பிடுவதையும் மற்றவர்களை தீண்டுவதையும் தவிர்க்கிறார்கள். உண்மையில் பார்க்க போனால், இந்த நேரத்தில் உறவு கொண்டால் கருத்தரிக்க வாய்ப்பே இல்லை. ஆனால் பெண்களுக்கு ஏற்படும் வலியையும் அசௌகரித்தையும் கருத்தில் கொண்டு தவிர்த்து விடுவர். ஆனால் பால்வினை நோய்களை தவிர்க்க ஆணுறை உபயோகப்படுத்துவது நல்லது.

கேள்வி 8

கேள்வி 8

சுன்னத் செய்த அல்லது சாதாரணமான ஆணுறுப்பு - உடலுறவின் போது இதில் என்ன வித்தியாசம் இருக்கும்?

பதில் : பெரிய வித்தியாசம் இல்லை என்றாலும் , சாதாரணமாக இருக்கும் ஆணுறுப்பின் தோலின் முடிவில் அதிக உணர்ச்சி அளிக்கும் நரம்புகள் இருப்பதால் சுகம் அதிகம் என்று சில ஆய்வுகள் சொல்கிற்து. ஆகையால் சுன்னத் செய்து கொள்வதை பற்றி நன்கு படித்து தெரிந்து கொள்ளவது நல்லது.

கேள்வி 9

கேள்வி 9

தகாத வேறு சில முறைகளில் உடலுறவு கொள்வதால் எய்ட்ஸ் போன்ற பாலியல் நோய்கள் உண்டாக வாய்ப்புகள் இருக்கிறதா?

பதில் : ஆணுறுப்பையோ/ பெண்ணுறுப்பையோ வாயால் சுவைப்பதனால்

எய்ட்ஸ் வர வாய்ப்பு குறைவு என்றாலும் இதர பால் வினை நோய்கள் வர அதிக அளவில் வாய்ப்புகள் இருக்கின்றன. பின்புறமாக செக்ஸ் வைத்து கொள்ளுவதானால் மனைவியாகவே இருந்தாலும் ஆணுறை, அணிவது மிகமிக அவசியம். நோய்களை தடுக்க மிக அவசியம்.

கேள்வி 10

கேள்வி 10

சார் ... முக்கிய டிப்ஸ் எதாவது சொல்லுங்க...

பதில் : நமது மனம் தான் மிகப்பலமான செக்ஸ் உறுப்பு என்றால் நம்புவீர்களா? ஆமாம். ஆணுறுப்பு சிறியதாக உள்ளது என்பதெல்லாம் சும்மா. நமது மனம் நினைத்தால் உடல் கண்டிப்பாக ஒத்துழைக்கும் என்பதில் ஐயமில்லை. ஆதலால் "ஆக்சிஜன் இல்லாமல் இமயமலை ஏராதே கற்பனை இல்லாமல் கட்டில் மேல் சேராதே"

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

10 bizarre sex queries answered

Most sex doubts are of the ‘How can I increase my penis size?’, ‘How can I last longer in bed?’ and ‘Will she get pregnant if we…?’ nature. Therefore, it was quite refreshing to see a mail from a 19-year-old who had some bizarre queries about sex. You’ll have fun reading them.
Story first published: Tuesday, April 10, 2018, 13:30 [IST]