Latest Updates
-
18 மாதங்களுக்கு பின் நடக்கப்போகும் ராகு-கேது பெயர்ச்சியால் ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சரவணபவன் நெய் மணக்கும் வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் அசத்தலா இருக்கும் -
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்களிடம் நல்ல குணங்களை விட கெட்ட குணங்கள்தான் அதிகமாக இருக்குமாம் -
5 முட்டை இருந்தா பள்ளிப்பாளையம் முட்டை வறுவலை செஞ்சு பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும் -
மயில்கள் ஏன் மழை வரும்போது நடனமாடுகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா? -
மட்டன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி கிராமத்து ஸ்டைலில் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம்
இந்த விஷயங்களை பற்றி எல்லாம் உங்க மாமியார்கிட்ட வாயே திறக்க கூடாதுனு தெரியுமா?
இந்த விஷயங்களை பற்றி எல்லாம் உங்க மாமியார்கிட்ட வாயே திறக்க கூடாதுனு தெரியுமா?
திருமணமான புதியதில் உங்களது மாமியாரிடம் எப்படி பேசுவது எப்படி நடந்து கொள்வது என்பது பற்றி எல்லாம் உங்களுக்கு தெரியாது. முன் பின் தெரியாத ஒருவரிடம் வசிக்க நெரும் போது அனைவருமே சற்று தடுமாறி தான் போகிறார்கள். உங்களது மாமியாரிடம் சொல்ல வேண்டிய விஷயங்கள் சொல்ல கூடாத விஷயங்கள் என சில இருக்கின்றன.
அவரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற முடிவுக்கு நீங்கள் வந்துவிட்டாலே உங்களது மாமியாரின் அன்பை பெற்றுவிடலாம். மாமியாரின் அன்பை பெற்றுவிட்டால் அப்பறம் என்ன கணவரின் அன்பும் சேர்த்து கிடைத்துவிடும். இந்தபகுதியில் உங்களது மாமியாரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் எதைப்பற்றி எல்லாம் பேசக்கூடாது என்பது பற்றி காணலாம்.

1. நடுநிலையான பேச்சுக்கள்
அமைதியான கருத்து பரிமாற்றங்கள் உங்களுக்கும் உங்களது மாமியாருக்கும் இடையில் இருக்க வேண்டியது அவசியமாகும். அவை டிவி நிகழ்ச்சிகள், பிடித்த விளையாட்டுகள், பருவநிலை எப்படி இருக்கிறது போன்ற சில விஷயங்களாக இருக்க வேண்டும். இவை பற்றி எல்லாம் பேசுவது கூட உங்களுக்கும் உங்களது மாமியாருக்கும் இடையில் ஒரு பிணைப்பை ஏற்படுத்தும்.

2. தவிர்க்கவும்
நீங்கள் அவரது குடும்பத்தை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளாமல், அரசியல், மதங்கள் சம்பந்தப்பட்ட விஷயங்களை அவர்களிடம் பேசாதீர்கள். இதில் இருவரது கருத்துக்களும் வெவ்வாறாக இருக்கலாம் எனவே இது போன்ற விஷயங்களை பற்றி பேசுவதை நிறுத்திக் கொள்ளுங்கள்.

3. வெளியில் செல்லுதல்
உங்களது மாமியாரிடம் வெளியிடங்களுக்கு செல்லுதல், டூர் போவது போன்ற விஷயங்களை பற்றி பேசுங்கள். நீங்கள் வேறு மதத்தை சார்ந்தவர் என்றால் உங்களுடைய மாமியார் இடம் இருந்து சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்களை எப்படி கடைப்பிடிப்பது என்பது பற்றி கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

4. கணவரின் குழந்தை பருவம்
உங்களது கணவரி குழந்தை பருவம் எப்படி இருந்தது என்று உங்களது மாமனார் மற்றும் மாமியார் இருவரிடமும் கேட்கலாம். இது அவர்களது கடந்த கால நினைவுகளை மீண்டு எடுத்து அவர்களுக்கு மகிழ்ச்சியை தரக்கூடியதாக இருக்கும். இந்த குழந்தை பருவ விஷயங்களை எல்லாம் உங்களது கணவரின் அம்மா, அப்பாவிற்கு ஒரு கப் டீ போட்டு கொடுத்து குடித்து கொண்டே பார்க்கலாம்.

5. அவர்களது ஆசைகள்
உங்களது கணவரின் அம்மா மற்றும் அப்பாவிற்கு எந்தெந்த ஆசைகள் இருக்கிறது என்பதை எல்லாம் பற்றி நீங்கள் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். ஒவ்வொருவருக்கும் நிறைவேறாத ஆசைகள் என்று இருக்கும் அவை என்னென்ன என்பதை பற்றி கேட்டு தெரிந்து கொண்டு முடிந்தவரை அவர்களது சின்னச்சின்ன ஆசைகளையாவது நிறைவேற்றி வைக்க முயற்சி செய்யுங்கள். இதனால் அவர்களுக்கு உங்கள் மீது அன்பும் நம்பிக்கையும் அதிகரிக்கும்.

6. பொழுதுபோக்குகள்
உங்களது மாமியாரின் பொழுதுபோக்குகள் என்னென்ன என்பது குறித்து அவரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். அவர்கள் இது பற்றி எல்லாம் பகிர்ந்து கொள்ள மகிழ்ச்சியடைவார்கள். அவர்களது பொழுதுபோக்குகளில் நீங்களும் பங்கு கொண்டு உங்கள் மீது அவர்கள் பாசமாக நடந்து கொள்ளும் படி செய்யுங்கள்.

7. உடைகள்
டிரெடிஸ்னல் ஆன ஆடைகளை உடுத்துங்கள். உங்களது மாமியாருக்கு அது போன்ற உடைகளை நீங்கள் அணிவது தான் பிடிக்கும். உங்கள் மீது ஒரு மதிப்பும் உண்டாகும்.

8. பிடித்தது? பிடிக்காதது?
உங்களது மாமியாருக்கு என்னென்ன விஷயங்கள் பிடிக்கும்? என்னென்ன விஷயங்கள் பிடிக்காது என்பது பற்றி எல்லாம் தெரிந்து கொள்ளுங்கள். அவர்களுடன் சிறிதளவு நேரத்தை ஷாப்பிங் செல்வது.. வெளியிடங்களுக்கு செல்வது போன்றவற்றில் செலவிடுங்கள்.

9. புகழ்ச்சி
புகழ்ச்சிக்கு மயங்காதவர்களே கிடையாது என்று கூறலாம். உங்களது மாமியார் அவருக்கு பிடித்தது என்று தேந்தெடுக்கும் உடைகள் மற்றும் சில பொருட்களை நீங்கள் நன்றாக இருக்கிறது என்று பாராட்டுங்கள். இது அவருக்கு மகிழ்ச்சியை கொடுக்கும்.

10. குற்றம் கூற வேண்டாம்
உங்களது கணவர் மீது உள்ள குற்றம் குறைகளை பற்றி எல்லாம் உங்களது மாமியாரிடமும் மாமனாரிடமும் கூற வேண்டாம். அது அவர்களது மனதை புண்படுத்தும். அதுமட்டுமின்றி எந்த ஒரு தாய்க்கும் தன் பிள்ளை மீது யாராவது பழி சொன்னால் கோபம் தான் வரும்.

11. நிதானமாக விடை கொடுங்கள்
உங்களது மாமனார் மற்றும் மாமியார் உங்களிடம் கேட்கும் ஒவ்வொரு கேள்விக்கும் பொருமையாகவும், நிதானமாகவும் விடை கூறுங்கள். அவர்களுடன் பேசும் பொழுது உங்களது முகத்தில் எப்போதும் சந்தோஷம் நிரம்பியிருக்கட்டும்.

12. தனியாக இருக்கிறீர்களா?
நீங்கள் உங்களது கணவருடன் தனிக்குடித்தனமாக இருக்கிறீர்கள் என்றாலும் கூட உங்களது மாமியார் மற்றும் மாமனாருக்கு அடிக்கடி போன் செய்து உங்களது அன்பை தெரிவிக்க மறந்துவிடாதீர்கள்.. ஏன் மாமனார் மாமியார் போன் செய்து பேசட்டுமே என்று எல்லாம் நினைத்துக் கொண்டு இருக்க வேண்டாம். சிறியவர்களாகிய நாம் எப்போதும் பெரியவர்களுக்கு இறங்கிபோய் நடப்பதில் தவறில்லையே...!



Click it and Unblock the Notifications