Latest Updates
-
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்...
சைக்கோ காதலனின் விசித்திர செயல்! my story #275
தன்னுடைய சைக்கோ காதலனைப் பற்றி சொல்லும் பெண் காதல் குறித்த தன்னுடைய புரிதலையும் விவரிக்கிறார்
பார்த்தவுடன் காதல் பார்க்க பார்க்க வருகிற காதல், நட்பாய் அறிமுகமாகி பின் பழகப் பழக காதலாய் மாறிய கதைகளை எல்லாம் நிறையவே கேட்டிருப்போம். யாருக்கேனும் ஒருவரைப் பார்த்தே பயந்தே காதல் வந்திருக்கிறதா?
முதலில் அதை நாம் காதல் என்று சொல்லலாமா? இந்த விவாதம் இங்கே வேண்டாம். ஏனென்றால் அதை காதல் என்று நம்பிவிட்டேன். ஆம், யாரைப் பார்த்தாலே எனக்கு பயமாய் இருக்கிறது என்று நடுங்கினேனோ அவன் மீது தான் எனக்கு காதல். நான் பார்த்த திரைப்படங்களின் தாக்கமோ என்னவோ தெரியவில்லை எல்லாரும் அவனை முரடன், பொறுக்கி என்று திட்டுவது என் காதில் நல்லவன் நல்லவன் என்றே கேட்டிருக்கிறது. பிறர் இந்த வார்த்தைகளை சொல்லும் போது யாராவது பீப் போட்டுவிட்டார்களோ என்னவோ ?
காதலித்த பிறகு எங்களின் வாழ்க்கை எப்படி மாறியது என்பது தான் இங்கே ஹைலைட். ஒருவரைப் பார்த்து அவரின் பிம்பத்தை பார்த்து ஈர்ப்புகொண்டு காதலென்று நம்பிக் கொண்டிருக்கும் அனைவருக்கும் என் வாழ்க்கை ஒரு பாடமாய் அமையும்.

நண்பனின் நண்பன் :
நாங்கள் தோழிகள் மூன்று பேர் சேர்ந்து அப்பார்ட்மெண்ட் வீடு எடுத்து தங்கியிருந்தோம். அவ்வப்போது நண்பர்களும் வருவார்கள். ஒரு நாள் நண்பனுடன் வந்திருந்தான் வீட்டிற்கு. என் வண்டி போலீஸ் எடுத்துட்டு போய்ட்டாங்க அதான் ஃபிரண்டோட போலீஸ் ஸ்டேசன் போறேன் இவன் என் ஏரியா தான் என்று அவனை அறிமுகப்படுத்தினான்.
ஏண்டா போலீஸ் ஸ்டேசனுக்கு ஃபிரண்டோட போற என்று தோழி கேட்டாள்.... ஏய் என்ன இப்டி கேட்டுட்ட மச்சான் பெரிய ஆளு நைஸா பேசி வேலைய முடிச்சிடுவான் என்று சிரித்தான். அதன் பிறகு தான் அவனையே கவனித்தேன்.

பயம் :
உட்கார்ந்திருக்கும் தொனியே எழுந்து அடிக்க தயாராய் இருப்பது போல இருந்தது. பின்னாலிருக்கும் சோஃபாவில் உட்காராமல் தரையில் உட்கார்ந்தான், துருதுருவென்று கண்கள் எதையோ தேடிக் கொண்டேயிருந்தது. செல்போனில் யாருக்கோ மெசேஜ் அனுப்பிக் கொண்டேயிருந்தான்.
அவ்வப்போது தனக்குத்தானே எதையோ முணங்கிக் கொண்டும், நெற்றியை சுருக்கி விதவிதமாக ரியாக்ஷன் காட்டிக் கொண்டிருந்தான். டேய் இன்னும் எவ்ளோ நேரம் பசங்க வந்துட்டாங்க என்று பேசினான். என்னே குரல் அவனுடையது அவன் வீட்டில் இருந்தவரை அவனை மட்டுமே பார்த்துக் கொண்டேயிருந்தேன்.
இருவரும் கிளம்பினார்கள். நான்காவது மாடியிலிருந்து பார்க்கிங் வரை சென்று வழியனுப்பி வைத்தேன். அவனுடைய முடி, நடை, உடை, பாவனை, எல்லாமே எனக்கு மிகவும் பிடித்திருந்தது. குறிப்பாக அவனிடம் இருந்த அந்த திமிர் என்னை மிகவும் ஈர்த்துவிட்டது.

போன் நம்பர் :
அதன் பிறகு பல மாதங்கள் அவனின் நினைப்பாகவே இருந்தது. யாரிடமும் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. முகநூலில் இருக்கிறானா என்று தேடிப்பார்க்கலாம் என்றால் அவனுடைய பெயர் கூட தெரியாது. நண்பனின் ஃபிரண்ட் லிஸ்ட்டில் போய் துழாவினேன் ஆனால் அவன் கிடைக்கவில்லை.
ஒரு முறை பேருந்தில் யதார்த்தமாய் நண்பனை சந்தித்தேன், சரியாக அடுத்த நிறுத்தத்தில் என்னருகில்
உட்கார்ந்திருந்தவர் எழுந்துவிட அவன் என்னருகில் உட்கார்ந்து கொண்டான். ஏய் என்னடா அதிசயமா இருக்கு பைக் என்னாச்சு என்றேன். இந்தா நேத்து நைட்டு விஜி எடுத்துட்டு போச்சு காலைல தரேன்னா இன்னும் வர்ல லேட்டாகுதுனு பஸ்ல கிளம்பிட்டேன். என்னடா? பைக்க பொம்பள புள்ள எடுத்துட்டு போச்சா? யார்ரா அவ இதுவரைக்கு எங்ககிட்ட சொல்லவேயில்ல என்றேன்.
யேய்.... அது பொம்பளப் புள்ள இல்ல அன்னக்கி உங்க வீட்டுக்கு கூட்டிட்டு வந்தேனே போலீஸ் ஸ்டேசன் போய் வண்டி எடுக்கப்போகணும்னு சொன்னேன்ல அவன் தான்.
விஜியா? விஜி விஜி என்று மனதிலேயே நான்கைந்து முறை சொல்லிப் பார்த்துக் கொண்டேன்.

மெஸேஜ் :
என்னது விஜியா? என்றேன் . என் கேள்வியை புரிந்து கொண்டவனாய் அவன் பேரு வினோத்.ஏரியால அப்டிதான் அவன கூப்டுவாங்க அவன் எங்க வேலப்பாக்குறான்? என்ன பண்றான் என்று அடுத்தடுத்து கேள்வி கேட்க ஆரம்பித்தேன்.
எதோ ஒரு பிபிஓல போய்ட்டு இருந்தான். கொஞ்சம் நாள் போவான் அப்பறம் வேலைய விட்டுட்டேன்னு வந்து நிப்பான் என்று பதில் சொல்லிக் கொண்டே வந்தான். உன் வீட்டுக்கு பக்கமா? டெய்லி அவனப்பாப்பியா? என்று கேட்டேக் கொண்டேயிருக்க திடீரென்று இந்தா என்று சொல்லி அவன் போனை என் காதில் வைத்து விட்டான். ஏய் யார்ரா ஹலோ என்றேன்... ம்ம்ம் சொல்லுங்க என்றது எதிர்முனையிலிருந்து ஒரு குரல் நண்பன் குனிந்து சிரித்துக் கொண்டிருந்தான்.
யாரு... என்று சந்தேகமாய் இழுத்தேன். விஜி பேசுறேன் என்றது அந்தக்குரல். 904** ****1 இது தான் என் நம்பர் கால் பண்ணு என்று சொல்லி கட் செய்துவிட்டான்.

மீட் பண்லாமா? :
மாலை வீடு திரும்புவதற்குள் காலையில் பேருந்தில் நடந்த விஷயங்கள் தோழிகளுக்கு தெரிந்திருந்தது. ஏய்.... பாத்தியா கெத்தா போன் நம்பர் வாங்கிட்டியாம்.... ஏய் விஷயம் தெரியுமா? விஜிட்டயே டைரக்டா போன் நம்பர கேட்டு வாங்கிருச்சு என்று நண்பன் ஏத்திவிட....
டேய் நான் ஒண்ணும் கேக்கல அவனாதான் கொடுத்தான் என்றேன். ம்ம்... அவன் வீடு எங்க இருக்கு? எங்க வேலப்பாக்குறான்? சம்பளமென்ன? என்ன படிச்சிருக்கான்ன்னு மொத்த ஜாதகத்தையும் கேப்பாளாம் நம்பர் மட்டும் கேக்கலயாம் என்று சிரித்தான். இந்நேரம் அவன் என்ன செய்து கொண்டிருப்பான்? அவனுக்கு மெசேஜ் அனுப்பலமா என்று யோசித்து யோசித்து மெசேஜ் அனுப்பி வைப்பேன்.
இரண்டு மாதங்கள் கழித்து ஒரு நாள் மீட் பண்லாமா என்று மெசேஜ் அனுப்பினேன். ஒரு மணி நேரம் கழித்து எங்க இருக்க என்று ரிப்ளை வந்திருந்தது. இன்று ஞாயிற்றுக்கிழமை தானே வீட்டில் தான் இருக்கிறேன் என்றேன். அடுத்த பத்தாவது நிமிடம் அவனிடமிருந்து கால் வந்தது. சொல்லுங்க.... என்றேன் கீழ வா என்றான். பால்கனியிலிருந்து எட்டிப் பார்த்தால் கீழே வாசலில் நின்று கொண்டிருக்கிறான்.

லவ் :
முதல் அவுட்டிங்கிற்கு பிறகு எங்கள் உறவு சற்றே பலப்பட்டிருந்தது. அடிக்கடி சந்திப்பதும் நேரம் தவறாமல் போன் பேசுவதும் தொடர்ந்தது நண்பர்கள் எல்லாருக்கும் தெரிந்தேயிருந்தது. என்ன பழக்கமோ சாப்பிட்டு முடித்ததும் தம் அடிப்பான்.
ஒரு நாளும் கொஞ்சல் வார்த்தைகள் அவனிடமிருந்து வந்ததில்லை ஆனாலும் அவன் என்னை அதிகமாக நேசிக்கிறான் அதை வெளிக்காட்டத்தெரியவில்லை என்றே நம்பினேன்.

பிரச்சனை :
மூன்று மாதங்கள் சென்றிருக்கும் இருவருக்குமிடையில் வாக்குவாதம் ஆரம்பித்தது. டார்ச்சர் பண்ணாத என்று அவனும் என்னைய அழ வைக்காத என்று நானும் மாறி சண்டையிட ஆரம்பித்தோம். சரி சமாதானம் என்று இனிமே சண்டையிட வேண்டாம் என்று நானாக சமாதானத்திற்கு செல்வேன். நான் தான் தப்பு இனிமே அப்டி கேக்க மாட்டேன் பேசமாட்டேன் என்று வாயிலிருந்து வார்த்தையை வரவைக்கமல் விடமாட்டான்.
தப்பு தான... நீ பண்ணது தப்பு தான என்று கேட்பான். நான் மன்னித்து விடு ஆமா நான் தான் தப்பு என்று சொல்வதில் அவனுக்கு அப்படி ஒரு ஆனந்தம்.

எரிச்சல் :
அவனின் இந்த குணம் பெரும் கோபத்தையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியது. தவறு யார் மீது இருக்கிறது ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து போங்க என்று பல முறை நண்பர்கள் பஞ்சாயத்து செய்வார்கள். ஆனால் பிரச்சனை எங்கிருந்து ஆரம்பிக்கிறது என்றே தெரியாத வண்ணம் எங்களுக்குள் நாளுக்கு நாள் சண்டை அதிகரித்துக் கொண்டேயிருந்தது.
சரி விடு இனிமே அப்டி நடக்காதுன்னு எதையும் டேக் இட் ஈஸியா எடுத்துக்க மாட்றான். ஒவ்வொரு தடவ சண்ட முடிஞ்சு சேரும் போதும் நானாவே என் தப்ப உணர்ந்து சாரி கேக்கணும்னு நினைக்கிறான். ஒகே சாரி கேக்கலாம் பிரச்சனையில்ல நான் தான் தப்பு நான் தப்பு பண்ணிட்டேன் என்னைய மன்னிச்சிடுன்னு ஸ்டேட்மண்ட் கேக்குறான். அது ஒரு மாதிரி இருக்கு எங்களுக்குள்ள நடக்குறதே இப்டி இருக்குனு சொன்னா அவன் பப்ளிக்ல நாலு பேர் முன்னாடியும் இப்டியே நடந்துக்குறான். தன்னைய யாரும் எதுவும் கேட்றக்கூடாது. அவனுக்கு என் மேல லவ்வே இல்ல

சைக்கோ :
ஒரு முறை சண்டையிட்டு இருவரும் பேசாமல் இருந்தோம். ஒவ்வொரு தடவையும் நாம் தானே இறங்கிச் செல்கிறோம் இம்முறை அவன் மீது தான் தவறு அவனே வரட்டும் என்ன ஆனாலும் சரி நாமாக பேசக்கூடாது என்று உறுதியாக இருந்தேன்.
நண்பனை விட்டு பல முறை தூது அனுப்பியும் அவனிடம் பேசவில்லை. கிட்டத்தட்ட ஒரு மாதம் கழித்து அவனாக வந்தான். என்ன மேடம் ரொம்ப பிகு பண்றீங்க ஏன் பேசல? அப்போ உனக்கு நான் வேண்டாம் அவ்ளோ தான.... உன்னைய போய் லவ் பண்ணேன் பாரு இந்தப் பொண்ணுங்களே இப்டித்தான் என்று எதேதோ பேச ஆரம்பித்துவிட்டான். சண்ட போட்டா எப்பவும் ஏன் நானா வந்து பேசணும்னு நினைக்கிற நான் உன் லவ்வர் தான என்கிட்ட வந்து பேசவும் ஏன் ஈகோ பாக்குற ?

இதுவா காதல் ? :
இப்போ யாரு ஈகோ பாத்தா.... இவ்ளோ நாள் தெரியாத ஈகோ இப்பத்தான் தெரிஞ்சதா நீ எப்டின்னு இப்பத்தான் தெரியுது. பெண்ணை தாக்கவேண்டுமென்றால அவளின் கேரக்டரை தாக்கினால் இங்கே போதுமானதாக இருக்கிறதே அதே ஆயுதத்தை கையில் எடுத்தான்.
வேற எவனையாவது பாத்ருப்ப அதனால என்னைய கலட்டிவிட்டுட்டு அவன் கூட போகலாம்னு ப்ளானா? போ போ நல்லாயிரு என்று சொல்லி கிளம்பிவிட்டான். அழுவதைத் தவிர வேறு ஏதும் செய்ய முடியவில்லை எங்களுக்குள் என்ன பிரச்சனை எப்படி இப்படி பூதகரமாக வெடித்தது என்று யாருக்கும் தெரியவும் இல்லை. விடு அவன் அப்டித்தான் கொஞ்சம் டென்ஷன் பார்டி நீ கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிட்டு விட்டுக் கொடுத்துப் போ இன்னும் சும்மா சின்ன புள்ளைங்க மாதிரி சண்ட போடாத என்று எனக்கு அறிவுரைகள் விழுந்தது.
உண்மையா இது தான் காதலா? இது எனக்கு நல்லது என்று எடுத்துக் கொள்வதா அல்லது என்ன நடந்தாலும் சரி அவன் தான் வேண்டுமென்று உறுதியாய் நிற்பதா என்று எதுவும் புரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறேன்.



Click it and Unblock the Notifications











