Latest Updates
-
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...!
ஐஸ்வர்யா ராயுடன் விவாகரத்து எனும் வதத்திக்கு மத்தியில், Grey Divorce-க்கு லைக் போட்ட அபிஷேக்.. இதான் காரணமா?
Grey Divorce: இந்தியாவில் மட்டுமின்றி உலகளவில் பிரபலமான ஒரு ஜோடி தான் அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் பச்சன். இவர்கள் இருவரும் பெரும்பாலும் எந்த ஒரு நிகழ்ச்சிகளிலும் ஒன்றாகவே கலந்து கொள்வார்கள். ஆனால் சமீபத்தில் மும்பையில் நடந்த அம்பானி வீட்டு திருமணத்திற்கு ஐஸ்வர்யா ராய் தனது கணவர் அபிஷேக் பச்சனுடன் வராமல், தனது மகளுடன் வந்திருந்தார்.
இது பலருக்கும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது. இவர்கள் இருவரும் ஜோடியாக வராமல் தனித்தனியாக வந்ததால், அபிஷேக் பச்சனுக்கும், ஐஸ்வர்யாவுக்கும் விவாகரத்து ஏற்படப் போகிறது என்ற ஒரு வதந்தி பரவி வந்தது.

இந்நிலையில் அம்பானி வீட்டு திருமணத்தில் கலந்த கொண்ட சில நாட்களுக்கு பிறகு அபிஷேக் பச்சன் இன்ஸ்டாவில் 'Grey Divorce' போக்கு குறித்த ஒரு இடுகைக்கு போட்ட லைக், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வதந்தியை உறுதிப்படுத்தும் வகையில் உள்ளது. சரி, Grey Divorce என்றால் என்ன, சமீப காலமாக இந்த விவாகரத்து எந்த காரணங்களால் அதிகரிக்கிறது என்பதைக் காண்போம்.
Grey Divorce என்றால் என்ன?
Grey Divorce அல்லது நரை விவாகரத்து என்பது நீண்ட கால திருமண உறவில் இருந்து 50 வயதிற்கு மேல் (முடி நரைத்த பின்) பெறப்படும் விவாகரத்தாகும். இப்படி விவாகரத்தைப் பெறுபவர்கள் பல ஆண்டுகள் அல்லது பல தசாப்தங்களாக திருமணமாகி ஒன்றாக வாழ்ந்திருப்பார்கள். ஆனால் 50 வயதிற்கு மேல் அல்லது வயதான காலத்தில் பிரிந்து செல்ல முடிவுவெடுப்பார்கள். சமீப காலமாக இப்படி வயதான காலத்தில் விவாகரத்து பெறும் போக்கு அதிகரித்துள்ளது. இப்படி நரை விவாகரத்து ஏற்படுவதற்கு காரணங்கள் என்னவென்பதைக் காண்போம்.
நரை விவாகரத்து ஏற்படுவதற்கான காரணங்கள்
1. ஒழுங்கற்ற உறவுகள்
திருமணமான தம்பதிகள் அனைவருமே மகிழ்ச்சியாக இருப்பதில்லை. இதில் பலர் சூழ்நிலை காரணமாக தங்கள் குழந்தைகளுக்காக ஒன்றாக வாழ்ந்து வருவார்கள். தங்கள் பிள்ளைகள் நன்கு வளர்ந்து, அவர்களுக்கு நல்ல வாழ்க்கை அமைத்து கொடுத்த பின், இனிமேலும் ஒன்றாக வாழ விருப்பம் இல்லாமல் விவாகரத்து செய்கிறார்கள்.
2. பண பிரச்சனைகள்
50 வயதிற்கு மேலான தம்பதிகளிடையே பணம் தொடர்பான விவாதங்கள் அதிகரிக்கலாம். அதுவும் தற்போது பெண்களும் ஆண்களுக்கு இணையாக சம்பாதித்து, யாரையும் சார்ந்திருக்காமல் உள்ளனர். எனவே தங்களின் திருமண வாழ்க்கையில் தங்கள் துணையுடன் நிதி ரீதியான பிரச்சனைகளை சந்தித்தால் அல்லது அதிருப்தி அடைந்தால், விவாகரத்தை செய்ய முடிவு செய்கிறார்கள்.
3. சுதந்திரமான வாழ்க்கை
முந்தைய காலத்தை விட தற்போது முதியவர்கள் தங்கள் விருப்பங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கிவிட்டனர். தங்கள் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இல்லாவிட்டால், சற்றும் யோசிக்காமல், தங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் பாதையை தேர்ந்தெடுத்து அதில் பயணிக்க முடிவெடுத்து, விவாகரத்து செய்ய முடிவெடுக்கின்றனர்.
4. உடல் மற்றும் மன பிரச்சனைகள்
தம்பதியரின் திருமண உறவு இனிமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும் பட்சத்தில், அத்தம்பதிகள் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்வர். அதுவே அந்த திருமண வாழ்க்கை மன அழுத்தம் நிறைந்ததாக இருந்து, அதன் விளைவாக உடல் மற்றும் மன ஆரோக்கியம் பாதிக்கப்பட்டால், அப்போது சற்றும் தயக்கம் கொள்ளாமல் விவாகரத்து செய்ய முடிவெடுப்பார்கள்.
5. சமூகத்தில் ஏற்றுக் கொள்வது
முன்பெல்லாம் விவாகரத்து செய்வது ஒரு பெரிய அவமானமாக கருதப்பட்டது. ஆனால் தற்போது சமூகத்தில் விவாகரத்துக்கு வரவேற்பு அதிகம் கிடைக்கிறது. இதனால் தம்பதிகள் தங்களின் மகிழ்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கிவிட்டனர். இந்த தனிப்பட்ட மகிழ்ச்சி பாதிக்கப்படும் போது, எந்த வயதிலும் தம்பதிகள் விவாகரத்தை தயங்காமல் பெறுகின்றனர்.
6. மறுமண வாய்ப்பு
திருமணம் செய்து கொள்ள வயது ஒரு தடையில்லை என்பதற்கு ஏற்பட தற்போது வயதான காலத்திலும் மறுமணம் செய்து கொள்ளும் வாய்ப்புக்கள் அதிகரித்துள்ளன. எனவே தற்போதைய வாழ்க்கை தங்களுக்கு சரியாக இல்லாவிட்டால், ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்க வயதை சிறிதும் பொருட்படுத்தாமல் விவாகரத்து செய்ய முடிவெடுக்கிறார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications











