Latest Updates
-
உங்கள் பிறந்த தேதியில் ஒரே எண்கள் அடிக்கடி வருதா? அதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
பேரரசுகளின் கல்லறை என்று அழைக்கப்படும் ஆபத்தான நாடு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
பெண்களே! இந்த அறிகுறிகள் தெரிஞ்சா உடனே டாக்டர்கிட்ட போங்க.. அது புற்றுநோயா இருக்கலாம்.. எச்சரிக்கும் டாக்டர்! -
4 முட்டை இருந்தா இப்படி செட்டிநாடு ஸ்டைலில் புளிக்குழம்பு செஞ்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
ஹோட்டல் ஸ்டைல் புடலங்காய் கூட்டு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இண்டர்நெட்டை கண்டுபிடித்தது யார்? இந்தியாவிற்கு இண்டர்நெட் எந்த வருடம் வந்தது தெரியுமா? -
அக்டோபரில் சிம்ம ராசிக்கு செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
ரவா குழிப்பணியாரமும்.. தேங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டங்கள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
சிம்ம ராசியில் கேது: அடுத்து வரும் 90 நாட்கள் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா?
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்துல குறையும்..
Weight Loss Varagu Arisi Kanji Recipe In Tamil: நீங்கள் உடல் எடையை குறைக்க டயட்டில் உள்ளீர்களா? உங்கள் டயட்டில் எப்போதும் சுவையில்லாத உணவுகள் தான் இருக்குமா? அதுவும் காலையில் பெரும்பாலும் பிடிக்காத ஓட்ஸை தான் சாப்பிடுகிறீர்களா? அப்படியானால் இனிமேல் கஷ்டப்பட்டு ஓட்ஸை சாப்பிடாமல், சிறுதானியங்களை வாங்கி அவற்றைக் கொண்டு கஞ்சி தயாரித்து குடியுங்கள்.

அதுவும் வரகரிசியை வாங்கி, அத்துடன் கேரட், பீன்ஸ் சேர்த்து கஞ்சி தயாரித்து, காலையில் குடித்து வரும் போது, வயிறும் நிரம்பும், உடல் எடையைக் குறைக்கவும் உதவியாக இருக்கும். முக்கியமாக இந்த கஞ்சியை பெரியவர்கள் மட்டுமின்றி, குழந்தைகளும் சாப்பிடலாம்.
உங்களுக்கு இந்த வரகரிசி கஞ்சியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வரகரிசி கஞ்சி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* வரகரிசி - 1 கப்
* எண்ணெய் - 3 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* இஞ்சி - 1 ஸ்பூன் (துருவியது)
* பூண்டு - 10 பல் (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 1 (கீறியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பீன்ஸ் - 1/2 கப் (பொடியாக நறுக்கியது)
* கேரட் - 1/2 கப் (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
* மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் வரகரிசியை எடுத்துக் கொண்டு, நீரில் 3
முறை கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் நீரை ஊற்றி 20 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* அதன் பின் அதில் துருவிய இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை
சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி
பதத்திற்கு வரும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ் சேர்த்து, சுவைக்கேற்ப
உப்பு தூவி 2-3 நிமிடம் வதக்கி விட்டு வேக வைக்க வேண்டும்.
* அடுத்து அதில் கஞ்சிக்கு தேவையான அளவு நீரை ஊற்றி கொதிக்க
ஆரம்பித்ததும், வரகரிசியை நீரை வடிகட்டிவிட்டு சேர்த்து கிளறி, மூடி
வைத்து மிதமான தீயில் வைத்து 3-5 நிமிடம் வேக வேக்க வேண்டும்.
* பின் மூடியைத் திறந்து கஞ்சியை கிளறி, மிளகுத் தூள் மற்றும்
கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், சுவையான வரகரிசி கஞ்சி
தயார்.



Click it and Unblock the Notifications
