Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
1 கப் ராகி மாவு இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. உடல் எடை வேகமாக குறையும்..
Weight Loss Ragi Urundai Recipe In Tamil: நீங்கள் டயட்டில் உள்ளீர்களா? உங்கள் டயட்டில் நல்ல சுவையான ரெசிபிக்கள் ஏதும் இல்லையா? உங்களின் டயட்டில் ருசியான அதே சமயம் சத்தான உணவுகளை சேர்க்க நினைக்கிறீர்களா? ஆனால் உடல் எடையைக் குறைக்கும்படியான உணவுகளை சாப்பிட நினைக்கிறீர்களா?
அப்படியானால் ராகி உருண்டை செய்து சாப்பிடுங்கள். இந்த ராகி உருண்டை ருசியாக இருப்பதோடு, செய்வதற்கு சுலபமாகவும் இருக்கும். அதற்கு 1 கப் ராகி மாவு இருந்தாலே போதும். ராகியை கஞ்சியாக செய்து குடிக்க பிடிக்காதவர்கள், இப்படி உருண்டை செய்து, தேங்காய் சட்னியுடன் சேர்த்து சாப்பிடும் போது ருசி பிரமாதமாக இருக்கும்.

உங்களுக்கு ராகி உருண்டையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ராகி உருண்டை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* ராகி மாவு - 1 கப்
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1/4 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* வெங்காயம் - 2
* பச்சை மிளகாய் - 2
* கறிவேப்பிலை - 1 கொத்து
* தண்ணீர் - 1 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், சீரகம், உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு சேர்த்து
தாளிக்க வேண்டும்.
* பின்னர் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி
பதத்திற்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை
சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் 1 கப் நீரை ஊற்றி , சுவைக்கேற்ப உப்பு சேர்த்து
கலந்து, நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* நீர் நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், அதில் 1 கப் ராகி மாவை சேர்த்து
நன்கு கிளறி இறக்கிக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் கொத்தமல்லியைத் தூவி கிளறி விட்டு, கை பொறுக்கும்
சூட்டிற்கு வந்ததும், கைகளால் நன்கு பிசைந்து விட வேண்டும்.
* அடுத்து ஒரு இட்லி தட்டை எடுத்து, அதில் பிசைந்த மாவை கொஞ்சம்
கொஞ்சமாக எடுத்து உருட்டைகளாக உருட்டி வைக்க வேண்டும்.
* இறுதியாக இட்லி பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் சிறிது நீரை
ஊற்றி, நீர் நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், இட்லி தட்டை உள்ளே வைத்து,
மூடி வைத்து, மிதமான தீயில் வைத்து 10 நிமிடம் வேக வைத்து இறக்கினால்,
சுவையான ராகி உருண்டை தயார்.



Click it and Unblock the Notifications