Latest Updates
-
July 2026 Lucky Zodiac Signs: ஜூலை மாதம் இந்த 6 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது.. -
மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பார் - எப்படி வெக்குறது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடலின் ஒவ்வொரு பகுதியில் கொழுப்புக்கள் தேங்க காரணமே இதாங்க.. விளக்கும் டாக்டர்! -
ஜூன் 29-ல் வக்ரமாகும் புதன்: இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
2 ஸ்பூன் ஓட்ஸ், 3 முட்டை இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் -
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க...
காலையில் இந்த கஞ்சியை 1 கப் குடிங்க.. அசுர வேகத்தில் உடல் எடை குறைவதை பாப்பீங்க...
Weight Loss Karuppu Ulunthu Kanji Recipe In Tamil: உங்களுக்கு தொப்பை உள்ளதா? அந்த தொப்பையைக் குறைக்க பல்வேறு கடுமையானடயட்டுகளையும், உடற்பயிற்சியிலும் ஈடுபட்டு வருகிறீர்களா? உங்கள் டயட்டில் இருக்கும் உணவுகள் ருசி இல்லாமல் உள்ளதா? நல்ல ருசியான மற்றும் ஆரோக்கியமான உணவை உட்கொண்டு உடல் எடையைக் குறைக்க நினைக்கிறீர்களா?
அதே வேளையில் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையிலும் ஒரு காலை உணவு வேண்டுமா? அப்படியானால் கஞ்சியை தயாரித்து குடியுங்கள். அதுவும் கருப்பு உளுந்து கொண்டு கஞ்சி தயாரித்து குடிக்கும் போது, உடல் எடை குறைவதோடு, இடுப்பு வலியில் இருந்தும் நிவாரணம் கிடைக்கும். அதோடு இந்த கஞ்சியை பெண்கள் அதிகம் குடிப்பது நல்லது.

உங்களுக்கு கருப்பு உளுந்து கஞ்சியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கருப்பு உளுந்து கஞ்சி ரெசிபியின் எளிய செய்முகை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கருப்பு உளுந்து - 1 கப்
* புழுங்கல் அரிசி - 1 கப்
* தண்ணீர் - 8 கப்
* பூண்டு - 4 பல்
* பெருங்காயத் தூள் -2 சிட்டிகை
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
* வெந்தயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* தேங்காய் - 1/2 மூடி
செய்முறை:
* முதலில் தேங்காய் மிக்சர் ஜாரில் போட்டு, சிறிது நீரை ஊற்றி
நன்கு அரைத்து, அதை வடிகட்டி, தேங்காய் பால் எடுத்து, தனியாக வைத்துக்
கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு குக்கரில் 1 கப் கருப்பு உளுத்தம் பருப்பை எடுத்து,
அத்துடன் 1 கப் புழுங்கல் அரிசியை சேர்த்து, நீரில் 2 முறை நன்கு
கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் 8 கப் நீரை ஊற்றி , அத்துடன் பூண்டு பற்கள்,
பெருங்காயத் தூள், சீரகம், சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, குக்கரை மூடி
4 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, கரண்டியால் கஞ்சியை நன்கு
மசித்து விட்டு கிளறி விட வேண்டும்.
* அடுத்து அதில் மிளகுத் தூள், வெந்தயத் தூள் சேர்த்து கிளறி விட
வேண்டும்.
* இறுதியாக அதில் தேங்காய் பாலை ஊற்றி கிளறினால், சுவையான கருப்பு
உளுந்து கஞ்சி தயார்.



Click it and Unblock the Notifications