Latest Updates
-
1/4 கப் தனியா இருந்தா இந்த வித்தியாசமான சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருக்கும் -
வட இந்தியத் திருமணங்கள்: சுட்டெரிக்கும் வெயிலில் சிக்கித் தவிக்கும் கொண்டாட்டங்கள் - இதோ சில அதிரடி மாற்றங்கள்! -
இந்த 5 உணவுகள் உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி சங்கடமாக உணர வைக்குமாம் - பார்த்து சாப்பிடுங்க -
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா?
ராகியும், பாசி பயறும் வெச்சு.. இப்படி கஞ்சி செஞ்சு குடிங்க.. 1 மாசத்துல உடல் எடை வேகமா குறையுறத பாப்பீங்க..
Weight Loss Ragi Pasipayaru Kanji Recipe In Tamil: நீங்கள் உடல் பருமனால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறீர்களா? அதிகரித்த உடல் எடையைக் குறைக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறீர்களா? அதுவும் அதற்காக டயட்டில் இருக்கிறீர்களா? அப்படியானால் அந்த டயட்டில் உடலுக்கு வலு சேர்க்கும் மற்றும் உடலில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்பு மற்றும் கெட்ட நீரை வெளியேற்ற உதவும் கஞ்சிகளை சேர்த்து வாருங்கள்.
பொதுவாக கஞ்சிகளானது செரிமானமாவதற்கு எளிதாக இருப்பதோடு, நீண்ட நேரம் வயிற்றை நிரப்பி வைத்திருக்கும். இதன் மூலம் கண்ட உணவுகளின் மீதான ஆவல் குறைந்து, எடை இழப்புக்கு உதவி புரியும். அப்படி உடல் எடையைக் குறைக்க உதவும் ஒரு அற்புதமான கஞ்சி தான் ராகி பாசிப்பயறு கஞ்சி. இந்த கஞ்சியை எடையைக் குறைக்க நினைப்போர் மட்டுமின்றி, குழந்தைகளும் சாப்பிடலாம்.

உங்களுக்கு ராகி பாசிப்பயறு கஞ்சி ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ராகி பாசிப்பயறு கஞ்சி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பாசிப்பயறு - 100 கிராம்
* நெய் - 1/4 டீஸ்பூன்
* பூண்டு - 3 பல்
* சீரகம் - 1/4 டீஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
* உப்பு - சுவைக்கேற்ப
* முருங்கைக்கீரை - 1 கைப்பிடி
* மிளகுத் தூள் - 1/4 டீஸ்பூன்
அரைத்து பால் எடுப்பதற்கு...
* முளைக்கட்டிய ராகி - 150 கிராம்
* தேங்காய் - 2 சில்லு
* பாதாம் - 8 (ஊற வைத்தது)
* தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் பச்சை பயறை நீரில் 2 முறை கழுவிவிட்டு, பின் நீரை ஊற்றி,
1/2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும்,
பொடியாக நறுக்கிய பூண்டு, சீரகம் சேர்த்து வதக்க வேண்டும்.
* பின் அதில் ஊற வைத்துள்ள பச்சை பயறை சேர்த்து நன்கு நீர் வற்றும்
வரை வதக்க வேண்டும்.
* பின்பு அதில் பச்சைப் பயறு மூழ்கும் அளவில் நீரை ஊற்றி, குக்கரை
மூடி, 4-5 விசில் விட்டு இறக்க வேண்டும். விசில் போனதும் குக்கரைத்
திறந்து, கரண்டியால் மசித்துவிட்டு தனியாக வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் முளைக்கட்டிய ராகி, தேங்காய், ஊற வைத்த 8
பாதாம் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்பு ஒரு அகலமான பாத்திரத்தில் ஒரு மெல்லிய துணியை விரித்து,
அதில் அரைத்ததை ஊற்றி வடிகட்டி பால் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் மீண்டும் அந்த சக்கையை ஜாரில் போட்டு, சிறிது நீரை ஊற்றி நன்கு
அரைத்து, அதையும் வடிகட்டி கெட்டியான பாலாக எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் ஒரு பாத்திரத்தில் 1 கப் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, நீர்
நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், அதில் வடிகட்டி வைத்துள்ள பாலை ஊறி,
கெட்டியாகும் வரை கிளறி விட வேண்டும்.
* அதன் பின் அதில் வேக வைத்துள்ள பச்சை பயறை சேர்த்து கிளறி கொதிக்க
வைக்க வேண்டும்.
* அடுத்து அதில் முருங்கைக்கீரையை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி,
நன்கு கிளறி, மூடி வைத்து 5 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* இறுதியாக அதில் மிளகுத் தூள் சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான
ராகி பாசிப்பயறு கஞ்சி தயார்.



Click it and Unblock the Notifications







