Latest Updates
-
1/4 கப் தனியா இருந்தா இந்த வித்தியாசமான சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருக்கும் -
வட இந்தியத் திருமணங்கள்: சுட்டெரிக்கும் வெயிலில் சிக்கித் தவிக்கும் கொண்டாட்டங்கள் - இதோ சில அதிரடி மாற்றங்கள்! -
இந்த 5 உணவுகள் உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி சங்கடமாக உணர வைக்குமாம் - பார்த்து சாப்பிடுங்க -
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா?
இந்த கஞ்சியை வாரத்துக்கு 3 முறை குடிங்க.. உடம்புல இருக்குற கெட்ட நீர், கொழுப்பு கரைஞ்சு எடை வேகமா குறையும்...
Murungai Keerai Kollu Kanji Recipe In Tamil: நீங்கள் உடல் எடையைக் குறைக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால் உங்களின் உணவில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். முக்கியமாக உடம்பில் தேங்கியுள்ள கொழுப்புக்களைக் கரைக்கும் படியான சத்துக்கள் நிறைந்த உணவுகளை தேர்ந்தெடுத்து உட்கொள்ள வேண்டும். அதுவும் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் காலையில் சத்துக்கள் நிறைந்த கஞ்சியை உட்கொண்டு வந்தால், உடலுக்கு வேண்டிய சத்துக்களுடன், உடல் எடையும் வேகமாக குறையும்.
உடல் எடையைக் குறைக்க உதவும் ஏராளமான கஞ்சிகள் உள்ளன. அதில் ஒன்று தான் முருங்கைக்கீரை கொள்ளு கஞ்சி. இந்த கஞ்சியை வாரம் 3 முறை குடித்து வந்தால், உடம்பில் தேங்கியுள்ள கெட்ட நீர் மற்றும் கெட்ட கொழுப்புக்கள் வெளியேறி, உடல் எடை வேகமாக குறையும். இந்த கஞ்சியை செய்வது மிகவும் சுலபம்.

உங்களுக்கு முருங்கைக்கீரை கொள்ளு கஞ்சியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முருங்கைக்கீரை கொள்ளு கஞ்சி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* புழுங்கல் அரிசி - 1 கப்
* கொள்ளு - 1/4 கப்
* முருங்கைக்கீரை - 1 கைப்பிடி
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* மிளகு - 1/2 டீஸ்பூன்
* வெந்தயம் - 4
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - 5 கப் + தேவையான அளவு
பருப்பு துவையலுக்கு...
* துவரம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
* வரமிளகாய் - 1
* பூண்டு - 2 பல்
* துருவிய தேங்காய் - 1 டேபிள் ஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் புழுங்கல் அரிசியை நீரில் 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கொள்ளு பருப்பை சேர்த்து
நல்ல மணம் வரும் வரை வறுத்து இறக்கிக் கொள்ள வேண்டும்.
* பின்பு குக்கரில் ஊற வைத்த அரிசியை 2 முறை கழுவி சேர்த்து, அத்துடன்
வறுத்த கொள்ளு பருப்பை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அதில் முருங்கைக்கீரை, சீரகம், தட்டி வைத்துள்ள மிளகு,
வெந்தயம், பெருங்காயத் தூள் சேர்த்து, 5 கப் நீரை ஊற்றி அடுப்பில்
வைத்து, குக்கரை மூடி 4-5 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து,
கஞ்சி கெட்டியாக இருந்தால், தேவையான அளவு சுடுநீரை ஊற்றி கலந்து
கொண்டால், சுவையான முருங்கைக்கீரை கொள்ளு கஞ்சி தயார்.
* இந்த கஞ்சிக்கு சைடு டிஷ்ஷாக, பருப்பு துவையல் நன்றாக இருக்கும்.
இந்த துவையல் செய்வதற்கு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் துவரம்
பருப்பை சேர்த்து நல்ல மணம் வரும் வரை வறுத்து இறக்கி குளிர வைக்க
வேண்டும்.
* பின் வரமிளகாயை நெருப்பில் சுட்டு எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் வறுத்த துவரம் பருப்பு, சுட்ட வரமிளகாய்,
பூண்டு பற்கள், துருவிய தேங்காய், 1 கொத்து கறிவேப்பிலை மற்றும்
சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, சிறிது நீரை ஊற்றி சற்று கொரகொரவென்று
அரைத்துக் கொண்டால், பருப்பு துவையல் தயார்.



Click it and Unblock the Notifications







