Latest Updates
-
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்! -
வாஸ்து படி இந்த தவறுகள் உங்கள் வீட்டில் இருந்தால் ராகுவின் சாபம் உங்களை பாடாய்படுத்துமாம் - ஜாக்கிரதை -
உங்க கழுத்து கருப்பா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
இந்த கஞ்சியை வாரம் 3 முறை குடிங்க.. உடல் எடை மடமட-ன்னு இருமடங்கு வேகத்துல குறையும்...
Vellai Cholam Vegetable Kanji Recipe In Tamil: நீங்கள் உடல் எடையைக் குறைக்கும் டயட்டில் உள்ளீர்களா? உங்கள் எடையை வேகமாக குறைக்க வேண்டுமா? அப்படியானால் உங்களின் உணவில் சிறு தானியங்களை அதிகம் சேர்த்து வாருங்கள். அதுவும் காலையில் சிறுதானிய உணவுகளை உட்கொண்டு வந்தால், நீண்ட நேரம் பசியும் எடுக்காது, கண்ட உணவுகளின் மீதான நாட்டமும் குறையும். மேலும் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், செரிமானமும் சிறப்பாக நடக்கும்.
அந்த சிறுதானியங்களில் ஒன்று தான் வெள்ளை சோளம். இந்த வெள்ளை சோளத்தைக் கொண்டு கஞ்சி தயாரித்து, காலையில் குடித்து வரும் போது, உடல் எடை வேகமாக இருக்கும். முக்கியமாக இந்த கஞ்சியை பெரியவர்கள் மட்டுமின்றி, குழந்தைகளும் குடிக்கலாம். முக்கியமாக இதில் விருப்பமான காய்கறிகளை சேர்த்துக் கொள்ளலாம்.

உங்களுக்கு வெள்ளை சோளம் வெஜிடேபிள் கஞ்சியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வெள்ளை சோளம் வெஜிடேபிள் கஞ்சி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* வெள்ளை சோள மாவு - 2 டேபிள் ஸ்பூன்
* சோள மாவு - 1/2 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
* நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1/4 டீஸ்பூன்
* பூண்டு - 1 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* பீன்ஸ் - 5 (பொடியாக நறுக்கியது)
* கேரட் - 1 (பொடியாக நறுக்கியது)
* ப்ராக்கோலி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* ஸ்வீட் கார்ன் - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
* மிளகுத் தூள் - தேவையான அளவு
* எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு கிண்ணத்தில் வெள்ளை சோள மாவு மற்றும் சோள மாவை
எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் நீரை ஊற்றி கட்டிகளின்றி கலந்து தனியாக வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி
சூடானதும், சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பிறகு அதில் பொடியாக நறுக்கிய பூண்டு சேர்த்து நன்கு வதக்க
வேண்டும்.
* அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய பீன்ஸ், கேரட் ஆகியவற்றை சேர்த்து
நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் பொடியாக நறுக்கிய ப்ராக்கோலியை சேர்த்து வதக்க
வேண்டும்.
* பின்னர் அதில் ஸ்வீட் கார்னை சேர்த்து 1 நிமிடம் வதக்கி, பின் அதில்
காய்கறிகள் மூழ்கும் அளவில் நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து
கலந்து, மூடி வைத்து, காய்கறிகளை நன்கு வேக வைக்க வேண்டும்.
* காய்கறிகள் வெந்ததும், அதில் கரைத்து வைத்துள்ள சோள மாவை ஊற்றி,
அத்துடன் மிளகுத் தூள் சேர்த்து கலந்து, தேவையான அளவு நீரை ஊற்றி,
மிதமான தீயில் வைத்து 5 நிமிடம் நன்கு கொதிக்க வைத்து இறக்கி,
எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்தால், சுவையான வெள்ளை சோளம்
வெஜிடேபிள் கஞ்சி தயார்.



Click it and Unblock the Notifications











