Latest Updates
-
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...!
இந்த கஞ்சியை அடிக்கடி 1 கப் குடிங்க.. வயிறு, இடுப்பு, தொடையில் தேங்கியுள்ள கொழுப்பு வேகமா கரையும்...
Weight Loss Karuppu Ulunthu Kanji Recipe In Tamil: இதுவரை உடல் எடையைக் குறைக்க உதவும் ஏராளமான கஞ்சி வகைகளைப் பார்த்துள்ளோம். அதில் தொடை, இடுப்பு, வயிற்றில் தேங்கியுள்ள கொழுப்பை திறம்பட கரைக்க உவும் ஒரு அற்புதமான கஞ்சி தான் கருப்பு உளுந்து கஞ்சி.
இந்த கஞ்சி செய்வதற்கு அதிகம் மெனக்கெட வேண்டியதில்லை. கருப்பு உளுந்தும், அரிசியும் இருந்தால் போதும், சுவையான மற்றும் சத்தான கஞ்சியை தயார் செய்து குடிக்ககலாம். இப்படி சத்துக்கள் அதிகம் நிறைந்த கருப்பு உளுத்தம் பருப்பில் புரோட்டீன் அதிகம் உள்ளது. இதை அடிக்கடி உணவில் சேர்க்கும் போது, உடல் வலுவாக இருக்கும். கொழுப்புக்கள் கரைந்து உடல் இறுக்கமடையும். இதன் மூலம் தொப்பை காணாமல் போகும்.

உங்களுக்கு இந்த கருப்பு உளுந்து கஞ்சியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கருப்பு உளுந்து கஞ்சி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கருப்பு உளுந்து - 150 கிராம் அல்லது 1 டம்ளர்
* அரிசி - 1/4 டம்ளர்
* ஏலக்காய் - 4
* தண்ணீர் - 6 டம்ளர் + 2 டம்ளர் சுடுநீர்
* துருவிய தேங்காய் - 1/4 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கருப்பு உளுந்தை
சேர்த்து 10 நிமிடம் நிறம் மாறி வரும் வரை வறுக்க வேண்டும்.
* அதன் பின் அதில் 1//4 கப் அரிசியை சேர்த்து நன்கு 5 நிமிடம் வறுத்து
இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் வறுத்த கருப்பு உளுந்து மற்றும் அரிசியை
சேர்த்து, அத்துடன் 4 ஏலக்காயயும் சேர்த்து சற்று கொரகொரவென்று
அரைத்து கொள்ள வேண்டும்.
* பிறகு அரைத்ததை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு பாத்திரத்தில் 6 கப் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, நீர்
நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், அதில் அரைத்து வைத்துள்ள பொடியை கொஞ்சம்
கொஞ்சமாக தூவி கட்டி சேராமல் இருக்க நன்கு கைவிடாமல் கிளறி விட
வேண்டும்.
* பின் உயர் தீயில் வைத்து, 10 நிமிடம் தொடர்ந்து கிளறி விட
வேண்டும்.
* 5 நிமிடம் கழித்து, அதில் 2 டம்ளர் சுடுநீரை ஊற்றி, நன்கு 15
நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* பிறகு அதில் துருவிய தேங்காயை சிறிது சேர்த்து நன்கு கிளறி இறக்கிக்
கொள்ள வேண்டும்.
* கஞ்சி இனிப்பாக வேண்டுமென்று நினைப்பவர்கள், அதில்
நாட்டுச்சர்க்ரையை சேர்த்து கிளறி, சிறிது தேங்காய் பூ சேர்த்து கிளறி
பரிமாறினால், இனிப்பான கருப்பு உளுந்து கஞ்சி தயார்.
* ஒருவேளை காரமாக கஞ்சியை சாப்பிட நினைத்தால், அதில் சுவைக்கேற்ப
உப்பு சேர்த்து, மேலே சிறிது தேங்காய் பூ தூவி கிளறி பரிமாறினால்,
கருப்பு உளுந்து கஞ்சி தயார்.



Click it and Unblock the Notifications






