இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. தொப்பையும் குறையும், உடலும் வலுபெறும்..

Posted By:

Weight Loss Karuppu Kavuni Kollu Kanji Recipe In Tamil: உங்களின் அசிங்கமான தொப்பையைக் குறைக்க நினைக்கிறீர்களா? அதற்காக தினமும் உடற்பயிற்சியில் ஈடுபடுவதோடு, கடுமையான டயட்டிலும் இருக்கிறீர்களா? உங்கள் டயட்டில் பெரும்பாலும் சுவையில்லாத உணவுகள் தான் அதிகமாக இருக்குமா?

இதுவரை டயட் என்றால் நீங்கள் உடனே ஓட்ஸை தினசரி உணவில் சேர்த்து வந்திருக்கலாம். ஆனால் இனிமேல் ஓட்ஸிற்கு பதிலாக, கருப்பு கவுனி அரிசி இருந்தால், அதைக் கொண்டு அருமையான கஞ்சியை தயாரித்து குடியுங்கள். ஏனெனில் இந்த அரிசியில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. மேலும் இது உடல் எடையை வேகமாக குறைக்க உதவும். அதுவும் அந்த கருப்பு கவுனி அரியுடன் கொள்ளு சேர்க்கும் போது, தசைகள் இறுக்கமடைந்து, உடல் வலுபெறும்.

Weight Loss Kanji How To Make a Karuppu Kavuni Kollu Kanji Recipe

உங்களுக்கு கருப்பு கவுனி கொள்ளு கஞ்சியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கருப்பு கவுனி கஞ்சி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் எஉங்கள் கருத்துக்களைப் கர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* கருப்பு கவுனி அரிசி - 1 கப்
* கொள்ளு - 1 கப்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* மிளகு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 3 கொத்து
* தண்ணீர் - தேவையான அளவு
* பூண்டு - 2 பல்
* உப்பு - சுவைக்கேற்ப
* தேங்காய் பால்/மோர்

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கருப்பு கவுனி அரிசியை சேர்த்து நன்கு வறுத்து ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதே வாணலியில் கொள்ளு பருப்பை சேர்த்து அதையும் நல்ல மணம் வரும் வரை வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து அதே வாணலியில் மிளகு, சீரகம், சோம்பு சேர்த்து ப்ரை செய்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு கறிவேப்பிலை சேர்த்து ஒருமுறை வறுத்து இறக்கி, அனைத்து பொருட்களையும் குளிர வைக்க வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் வறுத்த பொருட்கள் அனைத்தையும் சேர்த்து, நன்கு மென்மையாக அரைத்து ஒரு காற்றுப் புகாத டப்பாவில் போட்டு அடைத்து, தேவையான போது பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
* பிறகு ஒரு பாத்திரத்தில் 3 ஸ்பூன் அரைத்த பவுடரை எடுத்து, அதில் கஞ்சிக்கு தேவையான அளவு நீரை ஊற்றி கலந்து, அடுப்பில் வைத்து தொடர்ந்து கிளறி விட வேண்டும்.
* கஞ்சி சற்று கெட்டியாகத் தொடங்கியதும், அதில் பூண்டு பற்களை நன்கு தட்டி சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக அதில் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கிளறி இறக்கி வைக்க வேண்டும்.
* அதன் பின் அதில் தேவைப்பட்டால் மோர் அல்லது தேங்காய் பால் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். இப்போது சுவையான கருப்பு கவுனி கொள்ளு கஞ்சி தயார்.

[ of 5 - Users]
Desktop Bottom Promotion