Latest Updates
-
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்!
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. எடையும் குறையும்.. உடலும் வலுபெறும்..
Weight Loss Cholam Kambu Ulunthu Kanji Recipe In Tamil: நீங்கள் உங்களின் மற்றும் உங்கள் குடும்பத்தினரின் ஆரோக்கியத்தை மேம்படுத்த நினைக்கிறீர்களா? அப்படியானால் அவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் சமைத்துக் கொடுங்கள். பொதுவாக காலை வேளையில் காபி, டீ குடிப்போம்.
ஆனால் அந்த காபி, டீக்கு பதிலாக சோளம், கம்பு, கருப்பு உளுந்து ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் கஞ்சியை செய்து கொடுங்கள். இந்த உளுந்தங்கஞ்சியை தினமும் காலையில் குடிக்கும் போது, உடலுக்கு வேண்டிய சத்துக்கள் அனைத்தும் கிடைப்பதோடு, நீண்ட நேரம் வயிறு நிரம்பி, கண்ட உணவுகளின் மீதுள்ள நாட்டம் குறைந்து, உடல் எடை குறையவும் உதவி புரியும்.

உங்களுக்கு கம்பு சோள உளுந்தங்கஞ்சியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கம்பு சோள உளுந்தங்கஞ்சி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கம்பு - 1/2 கப்
* வெள்ளை சோளம் - 1/2 கப்
* கருப்பு உளுந்து - 1/2 கப்
* ஏலக்காய் - 3
* தண்ணீர் - 1 1/4 லிட்டர்
* பொடித்த வெல்லம் - 1 1/2 கப்
* உப்பு - 1 சிட்டிகை
* துருவிய தேங்காய் - 1 கப்
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கம்பை சேர்த்து
நல்ல மணம் வரும் வரை வறுத்து, ஒரு தட்டில் எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்பு அதே வாணலியில் வெள்ளை சோளத்தை சேர்த்து, அதையும் நல்ல மணம்
வந்து, லேசாக நிறம் மாறும் வரை வறுத்து, ஒரு தட்டில் போட்டு குளிர
வைக்க வேண்டும்.
* பிறகு அந்த வாணலியை மீண்டும் அடுப்பில் வைத்து, அதில் 1/2 கப்
கருப்பு உளுத்தம் பருப்பை சேர்த்து 2 நிமிடம் வறுத்து இறக்கி, தட்டில்
போட்டு குளிர வைக்க வேண்டும்.
* வறுத்த பொருட்கள் அனைத்தும் குளிர்ந்த பின், அவற்றை மிக்சர் ஜாரில்
போட்டு, அத்துடன் ஏலக்காய் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் ஒரு பாத்திரத்தில் அரைத்த பொடியை சேர்த்து, அத்துடன் 1 1/4
லிட்டர் நீரை ஊற்றி கட்டிகளின்றி கலந்து கொள்ள வேண்டும்.
* அடுத்து அந்த பாத்திரத்தை அடுப்பில் வைத்து, தொடர்ந்து கிளறி
விட்டு, உயர் தீயிலும், குறைவான தீயிலும் வைத்து நன்கு கொதிக்க வைக்க
வேண்டும்.
* கஞ்சி நன்கு கொதித்து நுரைக்கட்டி வரும் போது, மிதமான தீயில் வைத்து
2 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* பின்பு அதில் பொடித்த வெல்லத்தை சேர்த்து, அத்துடன் 1 சிட்டிகை
உப்பு சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* இறுதியாக துருவிய தேங்காயை சேர்த்து நன்கு கிளறி இறக்கினால்,
சுவையான கம்பு சோள உளுந்தங்கஞ்சி தயார்.



Click it and Unblock the Notifications