Latest Updates
-
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா?
இந்த கஞ்சியை வாரம் 3 முறை குடிங்க.. உடல் எடையும், தொப்பையும் இருமடங்கு வேகத்தில் குறையும்..
Weight Loss Barley Kanji: உங்களுக்கு பானை போன்று தொப்பை உள்ளதா? கண்ணாடியில் உங்களை முழுமையாக பார்க்க முடியவில்லையா? குனிந்து ஒரு பொருளைக் கூட எடுக்க முடியவில்லையா? அப்படியானால் உங்களின் உடல் எடையையும், தொப்பையையும் உடனே குறைக்க வேண்டும்.
அதுவும் வெறும் உடற்பயிற்சி மட்டும் தொப்பை மற்றும் உடல் பருமனைக் குறைக்க உதவாது. அத்துடன் நல்ல சத்தான, உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் மற்றும் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் படியான உணவுகளை தேர்வு செய்து உட்கொள்ள வேண்டும்.

முக்கியமாக காலையில் உண்ணும் உணவில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். எடையைக் குறைக்க நினைப்பவர்கள் டயட்டில் இருந்தால், காலையில் கஞ்சியை குடிப்பது சிறந்தது. அதுவும் பார்லி கொண்டு காய்கறிகள் சேர்த்து கஞ்சி தயாரித்து குடிக்கும் போது, அந்த கஞ்சி சுவையாக இருப்பது மட்டுமின்றி, எடையையும் குறைக்க உதவும், சர்க்கரை நோயாளிகளுக்கும் நல்லது மற்றும் குடல் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும். அதுவும் இந்த கஞ்சியை வாரத்திற்கு 3 முறை உட்கொள்வது நல்ல பலனைத் தரும்.
உங்களுக்கு எடையைக் குறைக்க உதவும் பார்லி கஞ்சியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பார்லி கஞ்சி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பார்லி - 1/2 கப்
கஞ்சிக்கு...
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* பூண்டு - 4 பல் (பொடியாக நறுக்கியது)
* சின்ன வெங்காயம் - 5 (பொடியாக நறுக்கியது)
* பீன்ஸ் - 3 (பொடியாக நறுக்கியது)
* கேரட் - 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* பார்லி பவுடர் - 3 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - 3 கப்
* மிளகுத் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறிது
* எலுமிச்சை சாறு - 1/2 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் பார்லி பொடியை தயார் செய்து கொள்ள வேண்டும். அதற்கு ஒரு
வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1/2 கப் பார்லி அரிசியை சேர்த்து,
நன்கு பொன்னிறமாகும் வரை வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் வறுத்ததை சேர்த்து, கொரகொரவென்று அரைத்துக்
கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த பொடியை ஒரு கண்ணாடி ஜாரில் போட்டுக் கொண்டு, தேவையான
போது தேவையான அளவு எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் பொடியாக நறுக்கிய பூண்டு மற்றும் வெங்காயத்தை சேர்த்து
கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ், பச்சை மிளகாய்
சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின் அதில் 3 டேபிள் ஸ்பூன் பார்லி பவுடரை சேர்த்து, அத்துடன் 3 கப்
நீரை ஊற்றி கட்டிகளின்றி கிளறி விட வேண்டும்.
* பின்பு அதில் மிளகுத் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து,
நன்கு கஞ்சி கெட்டியாகும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.
* கஞ்சி ஓரளவு கெட்டியானதும், அதில் கொத்தமல்லியைத் தூவி இறக்கி,
எலுமிச்சை சாற்றினை கலந்தால், சுவையான பார்லி கஞ்சி தயார்.



Click it and Unblock the Notifications











