Latest Updates
-
ஆகஸ்ட் 13-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம் -
ஆமை வடை ரெசிபி - இந்த மாதிரி வடை சுட்டு பாருங்க - மொறுமொறுனு சூப்பராக இருக்கும் -
இந்தியாவில் இயற்கையாக வைரம் கிடைக்கும் ஒரே மாநிலம் எது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
திருநெல்வேலி ஸ்டைல் அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
அடுத்தவர் மனைவியை திருடுவது இந்த நாட்டில் வேடிக்கையான விளையாட்டாம் - ஆனா இதுல ஒரு விவகாரமான கண்டிஷன் இருக்கு -
சில்லி கார்லிக் ப்ரைடு ரைஸ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
காரைக்குடி கார சட்னி - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
சனிபகவான் ரேவதி நட்சத்திரம் செல்வதால் அக்டோபர் மாதம் வரை இந்த 3 ராசிக்காரங்க ராஜாதான் - உங்க ராசி இதுல இருக்கா -
இன்றைய ராசிபலன் 05 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு தங்க மழை கொட்டப்போகுதாம் -
புதன் பெயர்ச்சியால் நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது..
வெண்பூசணி வெச்சு.. இந்த ஸ்டைலில் சாம்பார் வையுங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க...
Venpoosanikai Sambar Recipe In Tamil: உங்கள் வீட்டில் அடிக்கடி சாம்பார் வைப்பீர்களா? ஆனால் நீங்கள் வைக்கும் சாம்பார் அவ்வளவு ருசியாக இருக்காதா? உங்கள் வீட்டில் வெண்பூசணி உள்ளதா? அப்படியானால் அந்த வெண்பூசணி கொண்டு சாம்பார் வையுங்கள். அதுவும் வெங்காயம் எதுவும் சேர்க்காமல் சாம்பார் செய்யுங்கள்.
வெங்காயம் சேர்க்காமல் சாம்பார் செய்ய முடியுமா என்று கேட்கலாம். ஆனால் வெங்காயம் சேர்க்காமலும் அற்புதமான சுவையில் சாம்பார் செய்யலாம். இப்படியான சாம்பார் சாதத்துடன் மட்டுமின்றி, இட்லி, தோசை என அனைத்துடனும் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.

உங்களுக்கு வெங்காயம் சேர்க்காமல் வெண்பூசணி சாம்பாரை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வெங்காயம் சேர்க்காத வெண்பூசணி சாம்பார் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வேக வைப்பதற்கு...
* துவரம் பருப்பு - 1 கப்
* தண்ணீர் - 2 கப்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 1/2 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 3
* வரமிளகாய் - 2
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பெரிய தக்காளி - 1 (நறுக்கியது)
* வெண்பூசணி - 200 கிராம்
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - 3/4 லிட்டர்
* சாம்பார் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
* புளிச்சாறு - பெரிய நெல்லிக்காய் அளவு (1/2 கப் நீரில் ஊற வைத்து
கரைத்தது)
* வெல்லம் - 3/4 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் குக்கரில் 1 கப் துவரம் பருப்பை போட்டு, அதை நீரில் 2
முறை கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் 2 கப் நீரை ஊற்றி, 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து
கலந்து, குக்கரை மூடி அடுப்பில் வைத்து, 4-5 விசில் விட்டு இறக்க
வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, வெந்தயம் சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* பின்பு அதில் பச்சை மிளகாய், வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து,
பச்சை மிளகாயின் நிறம் மாறும் வரை வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் தக்காளியை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் வெண்பூசணியை சேர்த்து 2-3 நிமிடம் வதக்க
வேண்டும்.
* பிறகு அதில் பெருங்காயத் தூள், மஞ்சள் தூள் மற்றும் சுவைக்கேற்ப
உப்பு சேர்த்து கிளறி, தக்காளி மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் சாம்பாருக்கு தேவையான அளவு 3/4 லிட்டர் நீரை ஊற்றி
கிளறி, குழம்பு மிளகாய் தூள் சேர்த்து கலந்து, நன்கு 7-8 நிமிடம்
கொதிக்க வைத்து, காய்கறிகளை வேக வைக்க வேண்டும்.
* அதற்குள் குக்கரைத் திறந்து, பருப்பை மசித்துக் கொள்ள வேண்டும்.
* சாம்பார் நன்கு கொதித்து, காய்கறிகள் வெந்ததும், புளிச்சாற்றினை
ஊற்றி கிளறி, மீண்டும் 2 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* அதன் பின் அதில் வேக வைத்துள்ள பருப்பை சேர்த்து கிளறி, 4 நிமிடம்
கொதிக்க வைக்க வேண்டும்.
* இறுதியாக அதில் வெல்லத்தை சேர்த்து கிளறி, கொத்தமல்லியைத் தூவி, 2
நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான வெண்பூசணி சாம்பார்
தயார்.



Click it and Unblock the Notifications