Latest Updates
-
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க
கோதுமை இடியாப்பம்
பலருக்கு இடியாப்பம் மிகவும் விருப்பமான உணவாக இருக்கும். பொதுவாக அரிசி மாவில் தான் இடியாப்பம் செய்வோம். ஆனால் அந்த அரிசி மாவு இல்லாமல், வீட்டில் வெறும் கோதுமை மாவு மட்டும் தான் இருந்தால், என்ன செய்வீர்கள்..? கவலையை விடுங்கள்.
ஏனெனில் அப்போது அருமையான சுவையில் கோதுமை மாவைக் கொண்டே இடியாப்பம் செய்யலாம். இங்கு அந்த கோதுமை இடியாப்பத்தை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். அதை முயற்சி செய்து பாருங்கள்.

தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - 2 கப்
தண்ணீர் - 2 12 டம்ளர்
எண்ணெய் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கோதுமை மாவைப் போட்டு லேசாக வறுத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதனை இறக்கி, குளிர வைக்க வேண்டும்.
அடுத்து ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி, அதை அடுப்பில் வைத்து வெதுவெதுப்பாக சூடேற்ற வேண்டும்.
பிறகு வறுத்து குளிர வைத்துள்ள கோதுமை மாவில் உப்பு மற்றும் வெதுவெதுப்பான தண்ணீரை ஊற்றி பிசைந்து கொள்ள வேண்டும். குறிப்பாக அப்படி பிசையும் போது மாவு கையில் ஒட்டக்கூடாது.
பின் இடியாப்பத் தட்டில் எண்ணெய் தடவி, பிசைந்து வைத்துள்ள மாவை இடியாப்ப கருவி கொண்டு இடியாப்பமாக பிழிய வேண்டும்.
பின்பு இட்லி பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் தண்ணீர் ஊற்றி, தண்ணீர் கொதித்ததும், இட்லி பாத்திரத்தினுள் இடியாப்பத் தட்டை வைத்து, பின் மூடி 7-8 நிமிடங்கள் வேக வைத்து எடுத்தால், சூப்பரான கோதுமை இடியாப்பம் ரெடி!!!



Click it and Unblock the Notifications