Latest Updates
-
சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபரில் மகரம் உள்ளிட்ட 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கப்போகுது! -
ரவா பன் தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 26, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டும் நாளாக இருக்குமாம் -
அக்டோபரில் வக்ரமடையும் சுக்கிரன்: நவம்பர் வரை இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
October 2026 Horoscope: அக்டோபர் மாதத்தில் ராஜவாழ்க்கை வாழப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
முட்டையை ஒரே மாதிரி செய்யாம.. ஒருடைம் இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்! -
உடுப்பி ஸ்டைல் கற்பூரவல்லி தம்பிலி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சளி, காய்ச்சல் டக்குனு காணாம போயிரும் -
October Matha Rasipalan 2026: அக்டோபரில் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 4 ராசி ஆண்கள் அழகான பெண்களை விட அறிவான பெண்களைத்தான் விரும்புவார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 உருளைக்கிழங்கும், வேர்க்கடலையும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸ் ட்ரை பண்ணி பாருங்க..
அசாரி பன்னீர் புலாவ்

தேவையான பொருட்கள்:
பாசுமதி அரிசி - 2 கப்
பச்சை பட்டாணி - 2 டேபிள் ஸ்பூன் (வேக வைத்தது)
குங்குமப்பூ - 2 சிட்டிகை
கிராம்பு - 2
ஏலக்காய் - 2
பட்டை - 1
கருஞ்சீரகம் - 1/2 டீஸ்பூன்
பால் - 1 டீஸ்பூன்
பிரியாணி இலை - 1
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
அசாரிக்கு...
பன்னீர் - 2 கப்
தயிர் - 1/2 கப்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
சோம்பு - 1/2 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் பேஸ்ட் - 1 டீஸ்பூன்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
கடுகு எண்ணெய் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் அரிசியை நன்கு கழுவி, அதை குக்கரில் போட்டு, தண்ணீர், உப்பு மற்றும் ஒரு துளி எண்ணெய் சேர்த்து, 3 விசில் விட்டு இறக்கி, பின் அதனை குளிர வைக்க வேண்டும்.
பின் ஒரு பௌலில் பால் மற்றும் குங்குமப்பூவை சேர்த்து, ஊற வைத்து, பின் சாதத்துடன் நன்கு கலந்து கொள்ளவும்.
பின்னர் மிக்ஸியில் தயிர், பச்சை மிளகாய் பேஸ்ட், மஞ்சள் தூள், கடுகு, சோம்பு, கடுகு எண்ணெய் மற்றும் உப்பு சேர்த்து நன்கு நைஸாக அடித்து கொள்ளவும்.
பிறகு அந்த பேஸ்ட்டை பன்னீர் துண்டுகளில் தடவி, 15-20 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். மீதமுள்ள பேஸ்ட்டை தனியாக வைத்துக் கொள்ளவும்.
பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி, பொன்னிறமாக பொரித்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
இப்போது ஒரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி, கருஞ்சீரகம், பட்டை, கிராம்பு, ஏலக்காய் மற்றும் பிரியாணி இலை சேர்த்து தாளிக்க வேண்டும். பின் அதில் தனியாக எடுத்து வைத்துள்ள பேஸ்ட் மற்றும் வேக வைத்துள்ள பச்சை பட்டாணியை சேர்த்து சிறிது நிமிடம் வேக வைக்க வேண்டும். இப்போது அதில் சாதம் மற்றும் பொரித்து வைத்துள்ள பன்னீர் மற்றும் உப்பு சேர்த்து கலந்து, சில நிமிடம் அடுப்பில் வைத்து கிளறி இறக்க வேண்டும்.
இப்போது சுவையான அசாரி பன்னீர் புலாவ் ரெடி!!! இதனை விருப்பமான சைடு டிஷ் உடன் சேர்த்து சாப்பிடலாம்.



Click it and Unblock the Notifications
