Latest Updates
-
கம்பு ரொட்டியும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
அக்டோபர் 22, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமா இருக்கணும் - ஜாக்கிரதை -
12 ஆண்டுகள் கழித்து சிம்ம ராசியில் உருவாகும் குரு மங்கள யோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
நவராத்திரிக்கு பின் உருவாகும் இரட்டை ராஜயோகத்தால் ஜெயிக்கிற குதிரையாக போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
ஐயங்கார் ஸ்டைல் முருங்கைக்காய் ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - ஆரோக்கியமா சூப்பரா இருக்கும் -
வாஸ்துப்படி அதிர்ஷ்டத்தை ஈர்க்க இந்த ஓவியங்களை வாங்கி வீட்டுல வையுங்க.. பண கஷ்டமே வராது! -
ஆயுத பூஜைக்கு வாங்குன பொரியும், 2 முட்டையும் இருந்தா.. நைட் இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. அள்ளும்.. -
Skin Care: இந்த பழங்களை அடிக்கடி சாப்பிடுவது அதிக முகப்பருக்களை ஏற்படுத்துமாம் - கவனமா சாப்பிடுங்க -
இந்த 4 ராசி ஆண்கள் 'ஒருவனுக்கு ஒருத்தி' என்று வாழும் நேர்மையான கணவராக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
அக்டோபர் 24-ல் வக்ரமடையும் புதன்: இந்த 5 ராசிக்காரங்க பேச்சால் பல பிரச்சனைகளை சந்திப்பாங்க.. உஷார்..
கேழ்வரகு கோதுமை ரவை இட்லி
கேழ்வரகு சாப்பிட்டால், உடல் நன்கு வலிமையோடும், வாய் துர்நாற்றம் எடுக்காமலும் இருக்கும். ஆகவே தான் அக்காலத்தில் எல்லாம் மக்கள் காலை வேளையில் கேழ்வரகை கஞ்சி போன்று கரைத்து சாப்பிடுவார்கள். ஆனால் தற்போது கேழ்வரகு சாப்பிடுவோரின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. இதற்கு காரணம், கேழ்வரகின் நன்மைகளைப் பற்றி பலருக்கு தெரியாதது தான்.
மேலும் கேழ்வரகை கஞ்சி செய்து சாப்பிட பிடிக்காதவர்கள், இதனை இட்லிகளாக ஊற்றி சாப்பிடலாம். இங்கு கேழ்வரகை கோதுமை ரவையுடன் சேர்த்து எப்படி இட்லி செய்வதென்று கொடுத்துள்ளோம். அதைப் பார்ப்போமா...
பேச்சுலர்களுக்கான சில சுவையான மற்றும் ஈஸியான சைடு டிஷ் ரெசிபிக்கள்!

தேவையான பொருட்கள்:
கேழ்வரகு மாவு - 1 கப்
கோதுமை ரவை - 1 கப்
கெட்டியான தயிர் - 3 கப்
கேரட் - 1 கப் (துருவியது)
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்
முந்திரி - சிறிது
வேர்க்கடலை - சிறிது
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவு, கோதுமை ரவை, துருவிய கேரட் மற்றும் உப்பு சேர்த்து, அத்துடன் தயிர் ஊற்றி, வேண்டுமானால் தண்ணீர் சேர்த்து, இட்லி மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, கறிவேப்பிலை, முந்திரி, வேர்க்கடலை சேர்த்து தாளித்து, கலந்து வைத்துள்ள மாவில் ஊற்றி கிளறி, 1 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு இட்லி பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் கலந்து வைத்துள்ள இட்லி மாவை, இட்லிகளாக ஊற்றி வேக வைத்து எடுத்தால், சுவையான கேழ்வரகு கோதுமை ரவை இட்லி ரெடி!!!
குறிப்பு:
வேண்டுமானால், இத்துடன் ஓட்ஸை பொடி செய்து சேர்த்துக் கொள்ளலாம்.



Click it and Unblock the Notifications
