Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
கேழ்வரகு கிச்சடி
கேழ்வரகு என்று அழைக்கப்படும் ராகியில் நிறைந்துள்ள நன்மைகள் பல. அத்தகைய கேழ்வரகைக் கொண்டு கூழ் மட்டும் தான் செய்வது தெரியும். ஆனால், கேழ்வரகு கொண்டு கிச்சடி செய்யலாம். இதனால் இந்த ரெசிபி மிகவும் ஆரோக்கியமான ரெசிபிக்களுள் ஒன்றாக இருக்கும்.
அதிலும் இதனை காலையில் செய்து சாப்பிட்டால் மிகவும் நல்லது. இதை செய்வது மிகவும் ஈஸி. சரி, இப்போது அந்த கேழ்வரகு கிச்சடியை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:
ராகி சேமியா - 1 பாக்கெட்
கேரட் - 1 (பொடியாக நறுக்கியது)
உருளைக்கிழங்கு - 1 (பொடியாக நறுக்கியது)
பீன்ஸ் - 6 (பொடியாக நறுக்கியது)
பச்சை பட்டாணி - 1/4 கப்
குடைமிளகாய் - 1/2 (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
வரமிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ராகி சேமியாவை வெதுவெதுப்பான நீரில் ஒருமுறை அலசி, பின் இட்டி தட்டில் போட்டு, இட்லி பாத்திரத்தின் உள்ளே வைத்து மூடி, 5 நிமிடம் வேக வைத்து இறக்கிக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின்பு அதில் நறுக்கி வைத்துள்ள அனைத்து காய்கறிகளையும் சேர்த்து, உப்பை தூவி 3 நிமிடம் நன்கு வதக்கி விட வேண்டும்.
பிறகு அதில் வேக வைத்துள்ள ராகி சேமியாவை சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான கேழ்வரகு கிச்சடி ரெடி!!!



Click it and Unblock the Notifications